ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 9, 2025

“மெய் ஒளியைத் தான்…” நாம் என்றுமே நாட வேண்டும்

“மெய் ஒளியைத் தான்…” நாம் என்றுமே நாட வேண்டும்


எனக்குக் காட்சி கொடுத்தார் வந்தார் நல்லதானது…! என்று சொல்வார்கள். காட்சி கொடுத்தார் நல்லதாகும் என்ற நிலை அது சில நாளைக்குத் தான் இருக்கும். மீண்டும் காட்சி கொடுத்தார் என்று நிறையப் பேர் சொல்லலாம்.
 
நானும் ஆரம்பத்தில் இவ்வாறு தான் நிறையக் காட்சிகளைக் கொடுத்துக் கொண்டிருந்தேன்.
1.இவைகள் எல்லாம் கூடாது…! என்று நிறுத்தி விட்டேன்
2.அந்த மெய் ஒளியைப் பெற வேண்டுமே தவிர இந்த உடலில் விளைந்த உணர்வை நீங்கள் தேடாதீர்கள் நாடாதீர்கள்…!
 
நமது குருநாதர் காட்டிய வழிகளை எடுத்து இங்கே வளர வேண்டுமே தவிர இந்த உடல் என்றுமே மடிவது என்று அறிதல் வேண்டும்.
 
இந்த உடலில் மெய் ஞானியின் உணர்வைப் பெற்றதை வலுப்படுத்தி அதை எடுக்கத் தொடர வேண்டுமே தவிர… “இவர் தான்…” என்ற நிலைகளுக்கு இந்த உடலின் உணர்வை எடுக்கக் கூடாது. இந்த உடலில் வரக்கூடியது அனைத்துமே வரும்புவியின் ஆசைதான் வரும்.
 
உருவங்களைக் காட்சியாகக் கொடுத்தாலும்
1.உடனே அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற வேண்டும்
2.அந்த ஒளியின் நிலைகள் பெற வேண்டும் என்று அந்த மெய் ஒளியுடன் இணைத்து அந்த வலுவைப் பெற வேண்டுமே தவிர
3.சாமி வந்தார் எனக்குக் காட்சி கொடுத்தார்…!
4.எனக்கு உடல் நலமானது அது நல்லதானது இது நல்லதானது…! என்று சொல்வதெல்லாம் உடல் இச்சைக்குத்தான் மாறும்.
 
அதைத்தான் யாம் வன்மையாகக் கண்டிப்பது. அந்த நிலையில் இருந்து நாம் மாறுபட வேண்டும். அந்த மெய் ஒளியை நாம் பெற வேண்டும். நம்முடைய பார்வையால் மற்றவர்கள் தீமைகள் நீங்க வேண்டும்.
 
சாமி செய்தார்…! என்பதற்குப் பதில்
1.சாமி பார்வை பிறருக்குப் பட்டு மற்றவருடைய தீமைகள் எப்படி அகன்றதோ…?
2.அதே உணர்வு உங்களால் நீங்கள் அந்தத் தீமைகளை அகற்றும் சக்தியாக பெற வேண்டும்.
3.அதைப் பெற்றால் தான் சாமி சக்தி பெற்றதாக அர்த்தம்…!
4.இல்லை என்றால் அதில் அர்த்தமே இல்லை. அந்த வளர்ச்சிக்கு நீங்கள் செல்ல வேண்டும்.
 
ஏனென்றால் அந்த மெய் ஒளியை நீங்கள் பெறும் பொழுது தீமைகளை அது அகற்றுகின்றது. உங்கள் பார்வையும் சொல்லும் அவருக்குள் நுழையப்படும் பொழுது அவருக்குள் இருக்கும் தீமைகள் அகற்றப்படுகின்றது.
 
நமது வாழ்க்கையில் பிறர்படும் துயரத்தைக் கேட்கும் பொழுது நமக்குள் நின்று துயரத்தை உருவாக்குகின்றது. சாதாரண வாழ்க்கையில் இதைத்தான் நாம் உருவாக்குகின்றோம்.
 
ஆனால் எதை உருவாக்க வேண்டும்…?
 
பிறருடைய தீமைகளை நீக்கும் உணர்வுகள் நாம் வளர்த்துக் கொண்ட அந்த உணர்வுகள் நம் பார்வையால் அங்கே வித்தாகப் பதிய வேண்டும்.
 
யாராவது தீமைகளைச் செய்தார்கள் என்றால் அதை நாம் கேட்டுத் தெரிந்து கொள்கின்றோம். அடுத்த கணமே… ஈஸ்வரா என்று அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று இதை இணைக்க வேண்டும்.
1.என் பார்வை அவரைத் தீமையிலிருந்து விடுபடச் செய்ய வேண்டும்.
2.அவர்களும் மெய்ப்பொருள் காணும் திறன் பெற வேண்டும் என்று இந்த உணர்வைப் படைத்து அங்கே அனுப்ப வேண்டும்.
3.நமக்குள் அது வராதபடி அந்த மெய் ஒளியை நமக்குள் சேர்க்க வேண்டும்.
 
அந்தந்த நிமிடத்தில் எந்தத் தீமை வந்தாலும் அது வேலை செய்யாது. இந்த உணர்வை நம் பார்வையால் அங்கே செலுத்தும் பொழுது
1.நம்மால் அவர்கள் பயனடைகின்றார்கள்.
2.அவருடைய உணர்வுகள் நமக்குள் வளராது நம்மைப் பாதுகாத்துக் கொள்கின்றோம்.
 
இந்த இரு நிலையும் வேண்டும்.
 
துப்பாக்கியை எடுத்து அதிலே மருந்தினைக் கெட்டிக்கப்படும் பொழுது எங்கேயாவது உராய்ந்து விட்டால் வெடித்து விடும். அப்போது யார் அதைச் செய்கின்றாரோ அவரை அல்லவா அது காலி செய்து விடும்.
 
அப்பொழுது அதைப் பாதுகாப்பாகச் செயல்படுத்திக் குறி வைத்துத் தாக்கும் போது அங்கே வெடிக்கும் நிலை கொண்டாருகின்றார்கள்.
 
அதைப் போல் நாம் அந்த மகரிஷிகளின் உணர்வுகளை நமக்குள் வலுவாக்கிக் கொண்டு
1.நம்முடைய எண்ணப் பார்வையில் அவருடைய தீமைகளைப் பிளந்திட வேண்டும்.
2.அவர்களைக் காக்கும் உணர்வு தான் நமக்குள் விளைய வேண்டும்.
 
நமக்குள் அந்த மகரிஷிகள் உணர்வுகள் விளைந்தால் அவர்களைக் காக்கும் உணர்வு நமக்குள் வருகின்றது. நம்மைக் காக்கும் உணர்வு நமக்குள் வளரும்.
 
ஒவ்வொரு நொடியிலும் இதை நாம் செய்தாக வேண்டும்…!
 
கடலில் போகிறோம் என்றால் எத்தனையோ அலைகள் வந்து கொண்டிருக்கின்றது. நாம் எந்தத் தீவுக்குப் போக வேண்டுமா அதை எல்லையாக வைக்கின்றோம்.
 
இடைப்பட்ட அலைகள் அனைத்தையும் விலக்குகின்றோம். பெரிய அலை சிறிய அலை இதையெல்லாம் விலக்கிச் சென்று தான் அந்த எல்லையை அடைகின்றோம்.
 
இதைப் போன்று தான் மனித வாழ்க்கையில் நமது எல்லை எது…?
 
1.அந்த மகரிஷிகளின் அருள் வட்டமான எல்லை தான்முடிவான நிலைகள் பேரானந்தப் பெரு நிலையான எல்லை.
2.அதை அடைய நாம் முயற்சிக்க வேண்டும்.
 
வாழ்க்கையிலே பாச அலை வருகின்றது வெறுப்பு அலை வந்து மோதுகிறதுகோப அலைகள் வருகிறதுபகைமை அலைகள் வந்து தாக்குகிறது. இப்படி எத்தனையோ அலைகள் வந்து மோதுகின்றது.
 
இந்த மோதலில் பாசத்தினால் நாளைக்கு என் பையன் என்ன செய்யப் போகிறான்…? என்ற இந்த உணர்வு வந்தால் இந்த அலையிலேயே மூழ்கி விடுகின்றோம்.
 
பையனின் நினைவாற்றலே வருகின்றது. அவனுக்குள் சென்று விடுகின்றோம்.
 
ஒருவன் மீது வெறுப்படைந்து எனக்குத் தொல்லை கொடுத்துக் கொண்டேயிருக்கிறான் அவனை அப்படியே விடலாமா…? என்று எண்ணினால் நாம் போக வேண்டிய எல்லையை மறந்து விடுகின்றோம்.
 
இப்படியே இடைஞ்சல் செய்கின்றான் என்று அவனுடைய எண்ணத்திலேயே நாம் போய்க் கொண்டிருக்கின்றோம்.
1.அவனைத் திருத்தும் நிலைகளுக்கு நாம் அங்கே சென்றுவிட்டால் அதிலே மூழ்கி விடுகின்றோம்
2.அவனுடைய உணர்வு வளர்ந்த பின் அவன் உடலுக்குள் தான் நாம் செல்கிறோம்.
 
வாழ்க்கையில் பல விதமான அலைகளில் சிக்குண்டு மீள முடியாத நிலை வருகிறது. ஆகவே அந்த அலைகள் வரப்படும் போது மகரிஷிகளின் அருள் சக்திகளை நாம் எண்ணத்தால் எண்ணி எடுத்து அந்த அலைகளைப் பிளக்க வேண்டும்.
 
மகரிஷிகளின் அருள் சக்தி அவன் பெற வேண்டும். அவன் எதிர்காலம் சிறந்திருக்க வேண்டும்.. அவன் உயர்ந்த ஞானம் பெற வேண்டும் என்ற உணர்வை எடுக்கும் போது அவன் பாச அலையைப் பிளக்கிறது.
1.இந்தப் பாசம் அவனை உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்கிறது.
2.உயர்ந்த எண்ணம் கொண்டு கண்ணிலே நாம் பார்க்கும் போது அவனை ஒழுக்கமாக்குகிறது.
 
இதைப் போல் பலர் பகைமை கொண்டு பேசுவார்கள். நாம் நல்லதைச் செய்தாலும் இன்னொரு கெடுதல் செய்த ஆவி அந்த உடலுக்குள் இருந்தால் அது அவர்களுக்குப் பிடிக்காது. நம்மைக் கண்டாலே எதிரியாகக் கருதி இல்லாததை எல்லாம் சொல்வார்கள்.
 
தியானம் செய்கிறீர்கள்…! என்றாலே என்னை ஏதோ செய்கிறான்…!” என்று சொல்ல ஆரம்பித்துவிடும். நான் ஒன்றுமே சொல்லவில்லைஎன்னை இப்படிச் சொல்கிறான்…! என்று நீங்கள் நினைப்பீர்கள்.
 
ஒரு உடலுக்குள் ஆவி இருக்கப்படும் போது அது செயல்பட்டால்
1.நான் எதுவுமே சொல்லாதபடி என்னைக் குறையாகச் சொல்கிறான் பாவிப்பயல்…” என்ற இந்த அலையில் சிக்கிவிடுகிறோம்.
2.அந்த அலைகளிலிருந்து விடுபட மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்து
3.அவனுக்குள் இருக்கும் ஆவி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று அங்கிருந்தே நன்மை செய்யும் சக்தி பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.
 
இதிலே நமக்குத் துணிவு வேண்டும். அதனால் தான் நன்மைகள் பல செய்யத் துணிவு வேண்டும் என்பது.
 
சொல்வது அர்த்தம் ஆகிறது அல்லவா. அந்த இடத்தில் துணிவு இருந்தால் தான் செய்ய முடியும்.
 
குருநாதர் கொடுத்த நிலைகளில் ஒவ்வொன்றையும் நீங்கள் வரிசைப்படுத்திப் பாருங்கள்.
1.நன்மை செய்ய வேண்டும்
2.நன்மைகள் வளர வேண்டும் என்றால் அதற்குத் துணிவு வேண்டும்…”
 
நன்மைகள் செய்யப் போகும் நிலையில் அவருக்கு (உடலில் ஆவி உள்ளவருக்கு) உதவி செய்ய வேண்டும் என்று செல்லும் பொழுது ஐய்யய்யோ…! பாவிப் பயல் எனக்கு ஏதோ செய்கின்றான் மருந்து வைக்கின்றான் விஷம் வைக்கின்றான்…! என்று சொல்வார்கள் பார்க்கலாம்.
 
அப்பொழுது அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணிவிட்டு அவர் உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மா மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும். அவருக்குள் இருந்தே நன்மைகள் செய்யும் நிலை வளர வேண்டும் என்று நாம் எண்ண வேண்டும்.
 
ஏனென்றால் இதையெல்லாம் நாம் புரிந்து செயல்பட வேண்டும்.
 
நல்லது செய்கின்றோம்ஆனால் பக்கத்து வீட்டுக்காரர் இல்லாததை எல்லாம் சும்மா சொல்லிக் கொண்டே இருப்பார். காரணம் அவர் உடலிலே இன்னொரு ஆன்மா இருக்கும்.
 
ஆன்மா இல்லாதவர்கள் யாரும் இல்லை. ஆனால் அவர்களுக்கு நம்மைக் கண்டவுடனே வெறுப்பாக இருக்கும். உடலிலே எரிச்சல் ஆகும்.
 
சிலருடைய வீடுகளுக்குள் சென்றால் அந்த எதிர்ப்பு நிலைகள் வரும். நம்முடைய மணம் பட்ட உடனே அங்கே எதிரியாக மாறுகின்றது.
1.அதற்குக் காரணம் அந்த மனிதன் அல்ல.
2.அந்த மனிதனுக்குள் இருக்கும் ஆன்மாவிற்கு இதைக் கண்ட பின் எரிச்சல் ஆகிறது.
 
நாம் இவ்வளவு தியானம் செய்கின்றோம் நம்மை ஏன் இவ்வாறு சொல்கின்றார்கள்…? என்று நினைக்கின்றோம்.
 
அந்த இடத்தில் தான் நமக்குத் துணிவு வேண்டும் என்று சொல்வது.
 
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று இந்த உணர்வினை அந்த உயர்ந்த சக்தியை நமக்குள் ஏற்றிக் கொள்ள வேண்டும்.
 
ஏனென்றால்
1.அவர் செயலைப் பார்த்த பின் இது வளர்ந்து விடுகின்றது.
2.ஆன்மாவிலே அது முன்னாடி அதிகமாகப் பெருகி விடும்.
3.இது பெருகி விட்டால் இதைச் சுவாசித்து அந்த உணர்வு இயக்க ஆரம்பித்து விடும்.
 
உயிரிலே பட்டவுடன் அதை வெளிப்படுத்துவது இந்த உயிர் தான். அது போன்ற நிலைகள் வந்தாலும் இடைமறித்து மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்…” என்று இங்கே கொண்டு வர வேண்டும்.
 
எங்கே…?
 
1.நம் கண்ணின் நினைவைப் பல முறை உயிருடன் ஒன்றச் செய்து
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்து எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் ஈஸ்வராஎன்று இப்படி எடுத்துக் கொள்ள வேண்டும்.
 
உடலில் இருக்கக்கூடிய ஆன்மாவிற்கு அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைத்து அவர்களுக்கு அந்த நன்மை செய்யும் சக்தியாக வளர வேண்டும். இந்த இடத்திலே இதைச் செய்ய துணிவு ஜாஸ்தி வேண்டி இருக்கின்றது.
 
ஆனால் நாம் என்ன நினைப்போம்…? சாதாரணமாக நாம் ஒன்றுமே செய்யவில்லை…! ஆனால் நம்மை கண்டாலே அவர்களுக்கு எப்படித் தான் இருக்குமோ…? ஏன்னை இந்த மாதிரி எல்லாம் சொல்கின்றார்களே…!
 
ஏனென்றால் அவர்களுக்குத் தெரியாமலே அது இயக்கும்.
 
இந்தத் தியான வழியில் நாம் செல்லும் பொழுது இதையெல்லாம் தெரிந்து கொண்டால் தான் அவ்வப்போது கொடுத்த இந்தச் சக்திகளை வலுப்பெறச் பயன்ன்படுத்த முடியும்.
 
1.நமக்குள் எத்தனையோ எண்ணங்கள் இருக்கிறதுஅதனால் உருவான அணுக்களும் இருக்கின்றது.
2.ஒவ்வொரு நிமிடமும் அந்த அணுக்களுக்கு ஞானிகள் உணர்வைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து விட வேண்டும்.
 
மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று இதைச் செலுத்தினோம் என்றால் அதைத் தடைப்படுத்திவிடும். வளர்ந்த பின் இதை நீக்கிவிடும். அதற்குச் சத்து கிடைக்காதபடி மகரிஷிகள் உணர்வு வலுப்பெற்ற பின் தீமைகளைக் குறைக்கும்.
 
உங்கள் அனுபவத்தில் நன்றாக இதைத் தெளிவாகவே தெரிந்து கொள்ள முடியும்.
 
1.முதலில் சிரமமாகத் தெரியும் சிறிது நாள் சென்றால் அதை நீக்கிவிடும்.
2.இப்படி நாம் வளர்க்க வளர்க்க நம்முடைய பார்வையே பிறருடைய தீமைகளை நீக்கும் சக்தியாக வரும்.