
யாகத்தைச் செய்… கண ஹோமம் செய்…! என்று சொல்கின்றார்கள்... கண ஹோமம் என்றால் என்ன…?
நாம் எண்ணக்கூடிய
எண்ணங்கள் எல்லாம் உயிரிலே படுகின்றது. இதற்குப்
பெயர் அபிஷேகம். பொருள்களை நெருப்பிலே
போட்டு எரிக்கின்றோம் இது யாகம்.
கனிகள் மற்றவைகளை எல்லாம்
ஆண்டவனுக்கு அபிஷேகம் செய்து சந்தனத்தையும் பன்னீரையும் ஊற்றுவார்கள்.
1.சந்தனத்தைப் போல் மணம்
நாங்கள் பெற வேண்டும்
2.கனியைப் போன்ற
சுவையான சொல்லும் செயலும் நாங்கள் பெற வேண்டும்
3.பன்னீரைப் போன்று
எனக்குள் நறுமணங்கள் பெற வேண்டும்
4.என் சொல்லுக்குள்
இனிமை பெற வேண்டும் என்று இப்படி எண்ணினால் இது அபிஷேகம்.
ஆனால் அந்தப் பொருள்களை
எல்லாம் எடுத்து யாகக் குண்டத்திலே நெருப்பிலே போட்டால் “கண ஹோமம்…!” அப்படி என்றால் அதற்கு என்ன அர்த்தம்…? என்று வேண்டுமல்லவா…!
யாரையும் நான் தவறாகச்
சொல்ல வரவில்லை. காலத்தால் மாற்றப்பட்ட நிலைகள் தான்
இவையெல்லாம். நம்மை அறியாமலே நம்மை அழித்துக் கொண்டிருக்கும்
இதைப் போன்ற நிலையிலிருந்து விடுபட வேண்டும்.
காரணம்
1.யாகக் குண்டம்
என்றால் நம் உயிர் ஒரு நெருப்பு… இது ஒரு குண்டம்.
2.நாம் எந்த
மெய்ஞானியின் உணர்வை உயிரிலே போடுகின்றோமோ அது அபிஷேகம் ஆகின்றது.
3.அதில் இருக்கக்கூடிய
வெப்பத் தணல்கள் ஆவியாக அலையாக உடலுக்குள் மாறி
4.ஒவ்வொரு அணுவிலும்
இணைந்து நறுமணமாக வீசச் செய்கின்றது. இதுதான் கண ஹோமம் என்பது… கணபதி ஹோமம்..!
எத்தனையோ பொருள்கள் பால்
தயிர் மற்ற கனிவர்க்கங்கள் அதை எல்லாம் தீயிலே
போட்டு எரித்து… கடைசியில் நெய்யை ஊற்றி இப்படித்தான் காசைக்
கொடுத்து யாகம் நடத்துகின்றோம்.
அப்போது நல்லதை
எண்ணுகின்றோமா…? நல்லதை எண்ணி எடுத்து நமக்குள்
சேர்க்கின்றோமா…?
அந்த உயர்ந்த சக்தியை
உயிரான யாகக் குண்டத்திலே போட்டு அந்தச் சத்தின் தன்மை உயர்ந்த உணர்வின் தன்மையை
உனக்குள் உருவாக்கு… இது தான் ஹோமம் என்பது. இப்படி யாரும் செய்வதில்லை.
1.கனியைப் போன்ற
சுவையான சொல்லும் செயலும் நாங்கள் பெற வேண்டும் என்று யாராவது எண்ணி
எடுக்கின்றார்களா…?
2.யாகத்தில் அமர்ந்து சொல்பவரும்
நினைப்பதில்லை…! மற்றவர்களை அப்படி நினைக்க விடுவதுமில்லை.
ஜாதகக்காரன் சொன்ன
குறிப்பை ஏற்றுக் கொண்டு அதற்குப் பரிகாரம் செய்வதற்காக இப்படிக் கண ஹோமம் செய்து
விட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்று காசுக்காகத் தான் செய்து கொண்டிருக்கின்றோம்.
கோயிலுக்குள் செல்லும்
பொழுது விநாயகரை உற்றுப் பார்த்து அருள் ஞானிகள் உணர்வை நமக்குள் எடுத்துச் சுத்தப்படுத்திவிட்டு
ஆலயத்திற்குள் சென்று
1.அங்கே
சாத்தியிருக்கும் மலரை பார்த்து மலரைப் போன்ற மணம் பெற வேண்டும் மகிழ்ந்து வாழும்
சக்தி பெற வேண்டும்
2.கனியைப் போன்ற
சுவையான சொல்லும் செயலும் பெற வேண்டும்
3.அந்தச் சந்தனத்தைப்
போல மணம் பெற வேண்டும் என்று நம் உயிரான நெருப்பிலே போட்டால்
4.அது கண ஹோமமாக
மாறுகிறதா இல்லையா…? என்று நீங்கள் தெரிந்து கொள்ள முடியும்…
மகிழ்ச்சியான உணர்வுகள் உங்களுக்குள் தோன்றும்.
கோவில் என்றால் அதன்
தத்துவம் என்ன…? என்று சுருக்கமாகவும் காட்டுகின்றார்கள்.
சிறிய சிலையை வைத்து நமக்குள் உள் நின்று இயக்கும் உயிரைப் பற்றிய
இயக்கத்தையும் காட்டியுள்ளார்கள்.
1.பெரிய தேரை
வைத்திருக்கின்றார்கள்
2.அதிலே இந்தச் சிறிய
சிலையை வைத்து… எல்லோரும் சேர்த்து வடம் பிடித்து இழுக்கும்படிக்
காட்டுகின்றார்கள்.
ஆனால் அந்தத் தேரை
ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசைக்கு இழுத்தால் என்ன ஆகும்…? தேர் எல்லை வந்து சேருமா…?
கோவிலில் இத்தகைய சிலையை
வைத்து அங்கே செல்பவர்கள் எல்லாம் அந்தத் தெய்வ
குணத்தைப் பெற வேண்டும் மலரைப் போன்ற மணம் பெற வேண்டும் கனியைப் போன்ற சுவையான
சொல்லும் செயலும் பெற வேண்டும்
1.இந்தக் கோவிலுக்கு
வருவோர் அனைவரும் நலமும் வளமும் பெற வேண்டும்
2.என் பேச்சும்
மூச்சும் அனைவரையும் நலமாக்க வேண்டும்
3.நான் தொழில் செய்யும்
இடங்களில் வாடிக்கையாளர்கள் அனைவரும் நலமாக இருக்க வேண்டும் என்று
4.எல்லோரும் இப்படி போற்றக்கூடிய
நிலையாக ஒன்று போல் இந்த ஆலயத்திற்கு வந்து சொல்லப்படும் பொழுது
5.இந்த உணர்வின் சக்தி
அந்தக் கோவிலில் அலை அலையாக நல்ல குணங்களாகப் படர்கின்றது.
ஆனால் அதே சமயத்தில்
என்னிடம் வெறுப்போ வேதனையோ இருக்கின்றது
என்றால் இங்கே ஆலயத்திற்குள் வரப்படும் போது
1.எல்லோருக்கும் அந்த
அருள் சக்தி கிடைக்க வேண்டும்
2.எல்லோரும் நலமும்
வளமும் பெற வேண்டும் என்று எண்ணப்படும் பொழுது
3.அந்த எல்லோருடைய
வலுவான சக்தியால் அந்தத் தீமைகள் அகற்றப்படுகின்றது.
நாம் எல்லோரும் ஒன்று
சேர்க்கப்படும் போது தான் தேரை எல்லை சேர்க்க முடிகின்றது. அதைப் போன்று நல்ல குணங்கள் கொண்டு எல்லோரும் ஒன்று
சேர்ந்து… “அனைவருக்கும் அந்தச் சக்தி
கிடைக்க வேண்டும்…” என்று எல்லோருடைய ஆசியும் பெற்று… ஒன்று சேர்ப்பதற்குக் கோயிலை வைத்தார்கள் ஞானிகள்.
அவ்வளவு பெரிய தேரை
இழுப்பதையும் சுட்டிக் காட்டுகின்றார்கள். ஆனால் தேரை
இழுக்கின்றோம். ஞானிகள் நமக்கு உணர்த்திய இந்த உண்மைகளை
யாராவது நினைக்கின்றோமா…? அனைவரும் ஒன்று சேர்ந்து
வாழ்வதற்காக உருவாக்கப்பட்ட நிலைகளைச் செயல்படுத்துகின்றோமா…?
காரணம்… ஒரு சிறிய சிலையைத் தான் அவ்வளவு பெரிய தேரில் வைத்து
எல்லோரும் ஒன்று சேர்ந்து ஒரே எண்ணத்தில் இழுக்கும்படிக் காட்டுகின்றார்கள். அந்தத் தேரை வைத்து இழுப்பதன் தத்துவத்தைப் புரிந்து கொண்டோமா…?
அந்தக் கடினமான தேரை அனைவரும் ஒன்று சேர்ந்து எப்படி இழுக்கின்றோமோ அதைப் போன்று அந்த அருள் ஞானிகளின் வாய்ந்த உணர்வுகளை
எல்லோரும் சேர்த்து எண்ணி எடுக்க வேண்டும்.
1.எல்லோருக்கும் அந்த மகரிஷிகளின்
அருள் சக்தி கிடைக்க வேண்டும்
2.எல்லோருடைய உடல்களிலும்
அந்த மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும்
3.இந்தத் தெய்வ நிலைகள் அனைவரும் பெற வேண்டும்.
4.இந்த ஆலயம் வருவோர்
அனைவரும் நலமும் வளமும் பெற வேண்டும் என்று அனைவரையும் எண்ணும்படி
5.இதையெல்லாம்
ஆலயத்திலே புறத்திலே துவைதமாகக் காட்டி
6.அகத்திற்குள்… ஒவ்வொருவருக்குள்ளும் சேர்க்கப்பட வேண்டிய உயர்ந்த உணர்வுகளை ஞானிகள்
காட்டியுள்ளார்கள்.