ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 6, 2025

துருவன் கண்டுணர்ந்த 27 நட்சத்திரங்களின் ஆற்றல்கள்

துருவன் கண்டுணர்ந்த 27 நட்சத்திரங்களின் ஆற்றல்கள்


அகஸ்தியர் ஐந்து வயதாகும் பொழுது நம் பூமியின் துருவத்தின் ஆற்றலைப் பெற்றதால் துருவன் என்ற காரணப் பெயர் வைத்து அழைக்கத் தொடங்கினார்கள்.
 
அதன் வழிப்படி
1.தனது 5 வயது முதலே விண்ணுலகில் என்ன அதிசயங்கள் நடக்கின்றது…? என்ற நிலையை
2.சிறுகச் சிறுக அதன் உணர்வின் வளர்ச்சியைத் தனக்குள் கண்டுணர்ந்து நமது பிரபஞ்சத்தில் பரவிக் கொண்டிருப்பதையும் கண்டார்.
 
பிரபஞ்சம் என்று சொல்லும் பொழுது 27 நட்சத்திரங்களும் பிற மண்டலங்களிலிருந்து வருவதை எப்படிக் கவர்கிறது…? என்பதை அறிகிறார்.
 
ஒரு நூலாம்படைப் பூச்சி வலை விரித்து மற்ற ஈயோ வண்டுகளோ அதிலே சிக்கும் போது தன்னுடைய மூக்கின் நுனி கொண்டு இஞ்செக்சன் போன்று அதற்குள் இருக்கும் னைக் கரைத்து உணவாகக் குடித்து விடுகின்றது.
 
பின் தன் இனவிருத்திக்காக மற்ற ஈக்கள் கிடைத்தால் தனக்குள் உருவாகும் சில அமிலம் கலந்த மலத்தை வெளியாக்கி அந்த ஈயைக் காற்றுப் புகாதபடி முழுமைக்கும் சுற்றித் தன் உடலில் றும் உணர்வின் சத்தை அந்த ஈக்குள் பாய்ச்சப்படும் பொழுது
1.ஈக்குள் இருக்கும் ஈயை உருவாக்கும் அணுக்களில் இது படர்ந்து
2.நூலாம்படைப் பூச்சி போன்ற உணர்வுகள் அங்கே வளர்ந்து தன் இனத்தையே உருவாக்குகின்றது.
 
அதே போன்று… குளவி ஒரு புழுவின் மீது தன் விஷத்தைப் பாய்ச்சப்படும் பொழுது அந்த விஷத்தன்மை அதற்குள் இணைந்த பின் புழுவின் துடிப்பைக் குறைக்கச் செய்து உமிழ் நீரால் மண்ணை உருட்டி கூடைக் கட்டி அந்தக் கூட்டிற்குள் இந்தப் புழுவைச் செலுத்தி நூலாம் படைப் பூச்சி போன்றே…” தனக்குள் இருக்கும் விஷத்தின் தன்மை அதற்குள் பாய்ச்சி அந்தக் கூட்டை மூடி விடுகின்றது.
 
இந்த விஷத்தின் தாக்குதலால் புழுவின் உடல் தோல் சருகு போன்று ஆகிவிடும். அவ்வாறான பின் உடலை உருவாக்கி அணுக்கள் நூலாம்படைப் பூச்சி தன் அமிலங்களால் ஈயைத் தன் இனமாக எப்படி மாற்றியதோ அதே போன்று புழுவை உருவாக்கி அணுக்கள் அனைத்தும் கூழ் போல் ஆகி விடுகின்றது.
 
புழுவின் உயிர் குளவியின் உமிழ்நீரால் கட்டப்பட்ட அந்தக் கூட்டின் வழி கூடி புறத்தில் இருக்கும் சூரியனின் காந்தப் புலனறிவைத் தனக்குள் எடுத்துக் கோழி தன் முட்டையை எப்படி அடைகாக்கின்றதோ இதைப் போல
1.குளவியின் உணர்வுகள் அதற்குள் பாய்ச்சப்பட்டு சிறுகச் சிறுக புழுவின் உடல்
2.அந்த அணுக்கள் மாற்றமடைந்து புழு குவியின் ரூபமாக மாறுகிறது.
 
இது இயற்கையினுடைய சில நியதிகள்.
 
இவ்வாறு வளர்ச்சி பெற்றது போன்று தான் பிற மண்டலங்களிலிருந்து வருவதை நட்சத்திரங்கள் கவர்ந்து பால்வெளி மண்டலங்களாக மாற்றித் தூசியாக மாறுவதை உணவாக எடுத்துக் கொள்வதும் தூசியாக வருவதை சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து அணுக்களாக மாற்றித் தன் ஈர்ப்பு வட்டத்திற்குள் அதை எடுத்துக் கொள்கிறது.
 
இப்படி இந்த 27 நட்சத்திரங்களும் இடைவெளி விட்டு பிற மண்டலங்களிலிருந்து எடுத்ததைப் பால் வெளி மண்டலங்களாக அமைக்கப்படும் பொழுது ஒரு கூட்டமைப்பு போன்று ஆகி
1.பூமிக்கு ஓசோன் திரை எவ்வாறு முக்கியமாக இருக்கின்றதோ
2.சூரியனுக்கு இந்தப் பால்வெளி மண்டலம் பிற மண்டலங்களிலிந்து வருவதைக்வர்ந்து தன் சக்தியை எடுத்துக் கொள்கின்றது.
 
இவ்வாறு அந்த 27 நட்சத்திரங்களும் ஆண் பெண் என்ற நிலையில் அது ருப்பெறுவதை ஐந்தாவது வயதில் துருவன் சூரியக் குடும்பத்தின் முக்கிய நிலைகளைக் காணுகின்றான்.
 
நாம் எப்படிக் கண்களிலே ஒன்றைப் பார்க்கின்றோமோ இதைப் போல அந்த உணர்வின் தன்மை தன் உயிரில் நுகர்ந்து
1.அந்த உணர்வின் வலிமைகளை அணுக்களாகப் பார்க்கும் தன்மையும்
2.இந்தப் பிரபஞ்சத்தில் நட்சத்திரங்கள் எப்படி இயங்குகின்றது…? எப்படி வளர்கின்றது…? எப்படி வாழ்கின்றது…? என்ற நிலையை அவன் பார்க்கின்றான்.
 
உங்களுக்குள் இப்பொழுது அதைப் பதிவு செய்கின்றோம். அடுத்து நீங்களும் இதைக் காண முடியும். அவன் கண்டதை நீங்களும் காணும் நிலை வரும்.
 
டிவி.யில் எந்த ஸ்டேஷனைத் திருப்பி வைக்கின்றோமோ அதன் அலை வரிசைகளில் ஒளிபரப்பாவது காற்று மண்டலத்தில் பரவிக் கொண்டிருப்பதைக் கவர்ந்து நமக்கு அது படமாகக் காட்டுகின்றது.
 
இதைப் போல் விஞ்ஞானிகள் கருவிகளை வான மண்டலத்தில் அனுப்பி அங்கிருப்பதைப் படமாக்கி அந்த உணர்வின் அணுக்களைப் பல மடங்கு பெரிதாக்கி மனிதன் தனக்குகந்த அந்த உணர்வின் தன்மை எதுவோ அதைக் கண்டறிகின்றான்.
 
ஆனால்… “தன் தாயின் கருவிலே இருக்கும் போது வளர்ந்த ஆந்த உணர்வுகள்…” விண்ணின் ஆற்றலைப் பெறும் தகுதியை அகஸ்தியனுக்கு ஏற்படுத்தியதால் அதனுடைய வளர்ச்சியால் சூரியக் குடும்பத்தின் உண்மைகளைத் தனக்குள் கவர்ந்து… அதை அறியும் ஆற்றலும்… அதன் இயக்கச்  சக்தியைக் காணும் சந்தர்ப்பமும் அந்தத் துருவனுக்குக் கிடைக்கின்றது.
1.ஏனென்றால் துருவத்தின் வழி தான் இதையெல்லாம் பார்க்கின்றான்.
2.நம் பூமிக்குள் வருவதை அந்தத் துருவத்தின் எல்லைப் பகுதியிலிருந்து
3.எப்படி எங்கிருந்து தற்குள் கலக்கின்றது…? என்ற அதிசயங்களைப் பார்க்கின்றான்.
4.தனக்குள் நுகர்ந்து அதைச் சேர்த்துக் கொள்கின்றான்.
 
பால்வெளி மண்டலங்களிலிருந்து தூசிகளாக வருவதை நட்சத்திரங்கள் உணவாக உட்கொள்கின்றது. அதனுடன் இணைந்த நிலைகள் சேர்ந்து சுழலும் பரிமாணம் உள்ள துகளாக ஒரு திடப்பொருளாக மாறுகின்றது.
 
பின் அந்த நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் சுழற்சி பெற்று அந்த நட்சத்திரம் முதலிலே கோளா இருந்து எப்படி நட்சத்திரமானதோ இதன் ஈர்ப்பு வட்டத்தில் கோள்களாக வளர்ச்சி பெறுகின்றது.
 
இதன் வரிசையில் அகண்ட வெளியில் மற்ற நிலைகள் இருக்கப்படும் பொழுது ஒவ்வொன்றும் அது எடுத்துக் கொண்ட உணர்வுக்கொப்ப ஒவ்வொரு உணர்வு கொண்ட நிலையாக மாறுகின்றது.
 
பிரபஞ்சத்தில் எப்படிச் சூரிய குடும்பத்திற்குப் பல விதமான கோள்களும் 27 நட்சத்திரங்கள் வருகின்றதோ இதைப் போல அங்கேயும் அமைப்புகள் ருப் பெறுகின்றது.
 
1.இதனுடைய ஈர்ப்பு வட்டத்தில் வரும் பொழுது அதனதன் வளர்ச்சிகள் அது வருவதும்
2.அது வளர்ந்து உமிழ்த்தும் நிலைகள் துகள்களாகத் தூசிகளாக வருவதும்
3.சூரியன் அதைத் தனக்குள் எடுக்கும் பொழுது மற்ற கோள்கள் இடைமறித்துத் துருவத்தின் வழி கவர்வதும்
4.இவை அனைத்தும் ண்பால் பெண்பால் என்ற நட்சத்திரங்கள் உணர்த்துவதை அது எதனுடன் எது இணைக்கின்றதோ
5.அதனதன் உணர்வு கொண்டு அணுக்களின் தன்மை மாற்றம் அடைவதும்
6.ஒன்றுடன் கலந்து அதே இனத்தைத் தனக்குள் உருவாக்கும் ற்றல் பெறுகின்றது பாறையானாலும் மற்ற எதுவாக இருந்தாலும்.
 
பிரபஞ்சத்தில் உருவாகும் இந்த நிலையை துருவன் ஊடுருவிப் பார்க்கின்றான். நட்சத்திரங்கள் எப்படி உருவாகின்றது…? என்பதைப் பார்த்தாலும் சூரியக் குடும்பத்தில் கோள்கள் இயங்கி வருவதையும் நட்சத்திரங்கள் தன் ஈர்ப்பு வட்டத்தில் கோள்களை எப்படி வளர்க்கின்றது…? என்பதையும் அதன் வரிசையில் நட்சத்திரங்கள் எப்படி வளர்ச்சி அடைகிறது…? என்பதையும் காணுகின்றான்.
 
ஒரு குடும்பத்தில் குழந்தைகள் உருவாகி அது வளர்ச்சி பெற்று வரும் பொழுது திருமணம் ஆகித்  தன் இனத்தின் நிலைகளை உருவாக்குவது போன்று இந்தப் பிரபஞ்ச இயக்கத்தில் கோள்கள் உருவாகி நட்சத்திரங்களாக வளர்ச்சி அடையும் பொழுது இதைப்போல ஒரு குடும்பமாக அந்த உணர்வின் சக்தி பெறப்படும் போது தனிப் பிரபஞ்சமாக ஒரு சூரியக் குடும்பமாகப் பிரிந்து சென்றுவிடும்.
 
பேரண்டத்தில் ஒன்று சேர்த்து வாழ்ந்தாலும் அகண்டு செல்லப்படும் பொழுது முதலில் உள்ள சூரியக் குடும்பம் அதனதன் வளர்ச்சியின் தன்மையைத் தானே எடுத்து வளரப்படும் பொழுது முதலில் உருவான சூரியன் செயலிழந்து மங்க நேரும்.
 
பின் அது திசை மாறி ஓடும் நிலையில் கரைவதும் மற்றொன்றுடன் மோதுவதும் அதனுடைய சுழற்சி மையங்கள் மீண்டும் கரைந்து மற்றவைகளுக்கு இரையாகின்றது.
 
மனிதன் ருப் பெற்று வாழ்ந்த பின் அவர்கள் மடிந்தார்கள் என்றால் தன் இனங்கள் தான் விருத்தி ஆகின்றது, இவர்கள் மடியப்படும் பொழுது அந்தச் சரீரம் கரைக்கப்படுகின்றது. அதைப் போன்று தான்
1.சூரியன் அழிந்தாலும் அது கரைந்து விடுகின்றது,
2.இவ்வாறு பேரண்டத்தில் உள்ள சூரியக் குடும்பங்கள் அனைத்தும் தன் இனங்கள் நட்சத்திரங்கள் ருப் பெற்று
3.அவைகள் பிரபஞ்சமாகத் தனித்துத் தனித்து உருவாகத் தொடங்கினால்
4.முதலில் உருவான சூரியநுக்குக் கிடைக்கும் அந்தப் பங்கு கிடைக்கவில்லை என்றால் அது செயலை இழந்து விடுகின்றது.
 
இதை ஐந்தாவது வயதிலிருந்து துருவன் நுகர்ந்து தனக்குள் அது விளைந்து தன் எண்ணத்தால் வெளிப்படுத்திய… அவன் உடலிலிருந்து வெளிப்பட்ட அந்த உணர்வுகள் இன்றும் நம் பூமியில் படர்ந்துள்ளது அழியவில்லை…!
 
இதைத்தான் நமது குருநாதரும் நுகர்ந்தார்.
1.அவர் பெற்ற உணர்வின் தன்மையை எனக்குள் பதிவு செய்து அதை நீ எவ்வாறு பெற வேண்டும்…? என்ற நிலையில்
2.நீ எண்ணி ஏங்கி அதை எடுக்கப்படும் பொழுது நீ நுகரும் பொழுது உன் உயிரிலே அது உராயப்பட்டு
3.அந்த உணர்வின் அலைகள் உனக்குள் எப்படி அந்த உண்மைகளை உணர்த்துகின்றது…?
4.அதன் தொடர் கொண்டு நீ எப்படி அறிகின்றாயோ அதே போல்
5.மற்றவர்களுக்கு நீ இதைப் பாய்ச்சப்படும் பொழுது அவர்களுக்கும் அறியும் ஆற்றல் வருகிறது.
 
உதாரணமாக… கோபம் வெறுப்பு வேதனை போன்ற உணர்வுகள் நமக்குள் வளர்ந்து விட்டால் அதைச் சொல்லாக மற்றவரிடத்தில் பதிவு செய்யும் பொழுது கோபமாக சொன்னவரைத் திரும்ப எண்ணும் பொழுது இந்த உணர்வு எப்படி அவர்கள் உடலில் வளர்ச்சி பெறுகின்றதோ இதைப் போன்று தான் துருவன் கண்ட உணர்வுகள் அவன் வளர்ச்சியில் வளர படும்பொழுது அதை நீ நுகருகின்றாய் உனக்குள்ளும் இது விளைகின்றது.
 
ந்த உணர்வின் சொல்லாக நீ சொல்லப்படும் பொழுது வளர்ச்சியின் தன்மை கேட்போருக்குள்ளும் பதிவாகி அவர் இதை நினைவு கொண்டு எடுப்பார்கள் என்றால் இந்தப் பிரபஞ்சத்தின் உணர்வுகளை அவர்களும் அறிகின்றார்கள்.
 
மனிதனாக இருக்கும் பொழுது பிரம்மாவைச் சிறைப் பிடித்தான் என்ற நிலையில்
1,ஆறாவது அறிவின் தன்மை கொண்டு விண்ணுலக ஆற்றலை அவர்கள் பெருக்கப்படும் பொழுது
2.தனக்குள் புது உருவாக உருவாக்குகின்றார்கள் என்று பொருள்படும்படிச் சொல்கின்றார் குருநாதர்.
 
அதை எல்லாம் மனிதர்கள் நாம் தான்ண்ணத்தால் எடுக்க முடியும். மற்ற உயிரினங்கள் அதைக் கவர்ந்து எடுப்பதற்குண்டான வாய்ப்புகள் இல்லை.
 
தன்னைக் காட்டிலும் வலுக் கொண்ட மிருகங்களைப் பார்க்கப்படும் பொழுது அதன் வலிமையை நுகர்ந்து பதிவாக்கி அந்த மிருகங்களிடமிருந்து தப்பிக்கும் உணர்வை நுகரப்படும் பொழுது சிறுகச் சிறுக விளைந்து இந்த உடல் மடிந்தபின் உயிரான்மா வெளி சென்று அதனுடைய ஈர்ப்பு வட்டத்திற்குள் சென்று அந்த மிருகத்தின் உணர்வைக் கலந்து அதன் ரூபமாக மாறுகின்றது.
 
இப்படித்தான் நாம் பல கோடிச் சரீரங்களைக் கடந்து மனிதனாக வந்துள்ளோம் என்ற உண்மையைத் தெளிவாக்கிப் பிரபஞ்சத்தின் இயக்கங்களும் நட்சத்திரங்களுடைய மாற்றங்களும் அதை இளமைப் பருவத்திலிருந்து கண்டுணர்ந்த துருவன் அவன் எவ்வாறு பெற்றான்…? என்ற நிலையைக் காட்டுகின்றார் குருநாதர்.
1.தியானத்தில் இதையெல்லாம் நீங்கள் காணப் போகின்றீர்கள்
2.அந்த உணர்வை உங்களுக்குள் சேர்க்கப் போகின்றீர்கள்.
 
அதற்குத் தான் இதைப் பதிவு செய்கின்றேன்.