
ஓ…ம் என்றால் பிரணவம்… ஜீவன் கொடுப்பது
ஓம் ஈஸ்வரா குருதேவா என்று அடிக்கடி சொல்கின்றோம்.
ஏன் இப்படிச் சொல்ல வேண்டும்…? எதனால்
இப்படிச் சொல்கின்றோம்…? என்று
தெரிந்து கொள்வது நல்லது.
 
ஒவ்வொரு கோவிலிலும் ஓ..ம் போட்டு வைத்திருக்கின்றார்கள்…
அங்கே பிரசாதம் வைத்திருக்கின்றார்கள். மற்ற
எத்தனையோ நிலைகளைச் சொல்லி
வைத்திருக்கின்றார்கள்.
 
கூடுமான வரையிலும் அங்கே சென்று தெய்வத்தை வணங்குகின்றோம். ஏன் வணங்குகின்றோம்…? எதற்காக வணங்குகின்றோம்…? எப்படி வணங்குகின்றோம்…? அப்படி வணங்குவதால் நமக்கு என்ன சக்தி கிடைக்கிறது…? என்பதை யாரும் சொல்லித் தரவில்லை.
1.உனக்குக் கஷ்டம் வந்தால் தெய்வத்திடம்
உன் குறையை எல்லாம்… முழுவதையும் சொல்லிவிடு.
2.அதைச் சொல்லி மனம் உருகி அழுகும் பொழுது
அந்தத் தெய்வம் உதவி செய்யும் என்று தான் சொல்லி
வைத்திருக்கின்றனர்.
3.எல்லோரும் அந்த நிலையில் தான் அழுது கொண்டிருக்கிறோம்.
 
ஓம் ஈஸ்வரா குருதேவா என்று சொல்கின்றோம். ஈஸ்வரன் என்றால் எங்கேயோ
இருக்கின்றான் என்று நினைக்கின்றோம். எங்கேயோ இருந்து நம்மைச் சிருஷ்டித்துக் கொண்டிருக்கின்றார் என்ற எண்ணம் தான் நமக்கு இருக்கின்றதே
தவிர அந்த ஈஸ்வரன் யார்…? என்று அறியவில்லை.
 
ஓம் என்பது என்ன…? ஓம் என்றால் பிரணவம்… அது தான் ஜீவன்… “ஜீவன்
உள்ளது…” என்று எல்லோரும் வாதிடுகிறார்கள்.
 
உதாரணமாக… ஒரு பையன் தவறிக் கீழே விழுந்து அடிபட்டு
விடுகின்றான். நான் பாசமாக இருக்கின்றேன்
என்னிடம் இருக்கும் நல்ல குணத்தால் அவனைப் பார்க்கும் பொழுது அவன் படக்கூடிய
துன்பத்தைக் கண் பார்க்கின்றது
 1.அதே சமயத்தில் அவன் வேதனைப்பட்டு வெளிப்படுத்துவதை என் கண் இழுக்கின்றது.
2.அதைச் சுவாசித்த உடனே உயிரிலே பட்டு எனக்கும் வேதனை தெரிகின்றது.
 
அவன் கீழே விழுந்தான்… உடலில் வேதனையாகின்றது. அவன் வேதனை தாங்காது வெளிப்படுத்திய வேதனையான
எண்ணங்களைச் சூரியனிலிருந்து வரக்கூடிய காந்த சக்திகள் அதைத் தனக்குள் கவர்ந்து கொள்கின்றது.
 
அந்தப் பையனை எண்ணி… “அவன் வேதனைப்படுகின்றானே…” என்று கண்ணிலே பார்த்தவுடனே
அந்தக் கண் அதே உணர்வலைகளை எனக்குள் இழுக்கின்றது.
 
நான் இப்பொழுது பேசுகிறேன் என்றால்… “இந்த மைக்..” நான் எதைப் பேசுகின்றேனோ அதை இழுக்கின்றது. அதே போல் அந்தப் பையன் இடக்கூடிய சப்தத்தை என்
காதில் இருக்கக்கூடிய மைக் இழுக்கின்றது… அந்த உணர்வின் ஒலியைத்
தட்டுகிறது.
 
கண் பார்க்கின்றது… கரு விழி பார்த்தாலும் அந்த அலைகளை இழுக்கின்றது. கரு விழியில் படம் தெரிகின்றது
கண்ணுக்குள் இருக்கக்கூடிய காந்தம் அந்த அலைகளை இழுக்கின்றது. அதை இழுத்த உடனே
நான் சுவாசிக்கிறேன்.
  
நல்ல குணம் கொண்டு நான் போகும் பொழுது இந்தப் பையன் கீழே விழுகின்றான். பார்த்தவுடனே அவன்
வேதனைப்படுவது எனக்குத் தெரிகின்றது. வேதனையால்
வெளிப்படுத்தும் ஒலியைக் காந்த அலைகள் கவர்ந்து கொள்கிறது. அந்த ஒலியை இழுத்து எனக்குள் கொண்டு வந்து வைக்கின்றது.
 
ரேடியோ ஸ்டேஷனிலிருந்து ஒலிபரப்புச்
செய்கின்றார்கள் வெப்ப காந்தங்கள் அதைக் கவர்கின்றது. இங்கே நாம் வீட்டிலே அதே ஸ்டேஷனைத் திருப்பி
வைக்கப்படும் பொழுது அங்கே வெளிப்படுத்தக்கூடிய ஒலி அலைகளை…
பாடல்களை இங்கே ரேடியோவில் பாடுகின்றது… நாம் கேட்கின்றோம்.
  
இது விஞ்ஞானம்… செயற்கையில் செய்தது. அதற்கு ஜீவன் இல்லை… ஒலி அலைகளை மட்டும் எடுத்துக்
கொள்கின்றது.
  
1.ஆனால் நான் பார்த்த… அந்த
வேதனையான உணர்வலைகள் உயிரிலே படுகின்றது.
2.சுவாசித்து இழுத்து உயிரிலே பட்ட பின்
அவனிடமிருந்து வெளிப்பட்ட
 3.வேதனையான உணர்வின்
சக்தி என் உயிரிலே பட்ட பின் “ஜீவன்…”
பெறுகின்றது.
4.அதற்குப் பெயர் தான் ஓ… என்று சொல்வது.
 
ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அடுப்பை மூட்டி வைத்தால் தண்ணீர்
சூடாகிக் கொதித்து “தத… புதா…” என்று சத்தம் போட ஆரம்பிக்கின்றது.
  
காரணம் அது கொதிக்கும் பொழுது அதற்குள் இருக்கக்கூடிய
காந்தமும் வெளியிலே படர்ந்து கொண்டிருக்கும் காந்தமும் அதிலே பட்ட பின் இழுத்து அந்தச் சப்தத்தைக்
கொண்டு வருகின்றது. இது இயற்கை…!
 
தண்ணீர் தான்… ஆனால் “தத… புதா…” என்று சத்தம் போடுகின்றது. அப்படிக் கொதிக்கும் நேரத்தில் நாம் எந்தப் பொருளை
(பலசரக்கை) அதனுடன் இணைக்கின்றோமோ அந்த வாசனை
வெளி வருகின்றது.
 
ஏனென்றால்
 1.கொதிக்கும் பொழுது கலந்து ஆவியாக வெளியே
அனுப்பும்போது அதைச் சூரியனின் காந்த
சக்தி தனக்குள் கவர்ந்து கொண்டு
வருகின்றது.
2.என் கண்ணிலே பார்த்தவுடனே… சத்தியபாமா உண்மையை எடுத்து இழுத்து
எனக்குள் உணர்த்துகின்றது.
 3.என் உயிருக்குள் பட்ட உடனே அது பிரணவம்…
ஜீவன் பெறுகின்றது.
4.ஆக… உயிர் அங்கே எப்படி இயங்குகின்றது…? என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஏனென்றால் நம் உயிர் நெருப்பு.
 
விஞ்ஞானம் எப்படி இருக்கிறது…? மெய் ஞானம் எப்படி
இருக்கின்றது…? இயற்கை எப்படி விளைகிறது…? என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.