
இயற்கையின் உண்மைகளை “குருநாதர் எனக்குக் காட்டிய விதம்…”
நம் இந்திய நாட்டிலே அரசர்கள் ஆட்சி செய்யும் பொழுது எத்தனையோ போர் முறைகள் ஏற்பட்டது. அதிலே மதப் போர்களும் இனப் போர்களும் நடந்தது.
1.அதனால் எண்ணிலடங்காத கொலைகளும் தகாத செயல்களும் நடந்தது.
2.இது எல்லாமே அந்தந்த
இடங்களிலே பதிவாகியுள்ளது
3.எத்தனையோ உடல்கள்
எரிக்கப்பட்டது… எரிந்த உணர்வின்
அலைகளும் ஆங்காங்கு பதிவாகி உள்ளது.
மெய் ஞானத்தால் அந்த
அணுக்களைப் பற்றி அறிய முடியும். ஆனால் உயிரினங்களில் ஜீவணுக்களாக
வளர்ந்து விடுகின்றது.
அதே சமயத்தில் விஞ்ஞான
அறிவு கொண்டு எலக்ட்ரானிக் என்ற முறைப்படி (ஆர்ட்டிஃபிஷியல்
இன்டெலிஜென்ஸ்) அந்த அலைகளைக் கவர முடியும்.
1.விஞ்ஞான அறிவால் அதை எல்லாம் அறிய முடிந்தாலும் அதனால் அவர்களுக்குப் பயனில்லை.
2.காரணம் அத்தகைய நிலை
வருவதற்கு முன்னாடி… கண்டுபிடிக்கக்
கூடியவர்கள் அழிந்து விடுவார்கள்.
விஞ்ஞான அறிவுகள் (எலக்ட்ரானிக்) அந்த அளவுக்கு வளர்ச்சி அடைந்து விட்டது.
இதைப் போன்று தான்
1.நமது உயிரும் எலக்ட்ரானிக்காக இருந்து ஒவ்வொரு நிலைகளையும் காட்டிக் கொண்டிருக்கின்றது.
2.கரண்டை உற்பத்தி
செய்கிறது… எடுத்துக் கொண்ட உணர்வுகளை அலைகளாக இயக்குகின்றது.
இதைக் காட்டுவதற்குத் தான் குருநாதர் காடு மேடேல்லாம் எம்மை அலைய வைத்தார்.
அக்காலங்களில் தவம்
இருக்கச் சென்றவர்களும்
1.அகஸ்தியன் எவ்வாறு எல்லாம் தாவர இன மூலிகைகளைத் தனக்குள் நுகர்ந்தறிந்தான்…? என்ற நிலையும்
2.அதே வழியில் போகர்
எவ்வாறு எடுத்தார்…? என்ற நிலைகளையும்
3.அவர்களைப் பின்பற்றிக் காட்டுப் பகுதியில் அரசர்கள் சென்ற
நிலைகளையும்
4.அது எல்லாம் எப்படி
ரெக்கார்டு (பதிவு) ஆகி இருக்கின்றது…?
என்பதைக் காட்டுகின்றார்.
5.அந்த அலைகளை
எடுத்துத்தான் எனக்கு அதையெல்லாம் குருநாதர்
உணர்த்துகின்றார்.
5.அதை எல்லாம் தெரிந்து
தான் உங்களிடம் இப்பொழுது சொல்கின்றேன்.
நான் தெரிந்த மாதிரி
நீங்களும் தெரிய வேண்டும் என்றால் சிறிது நாளாகும்.
ஆனால் தெரிய முடியும்…!
1.தெரிந்தாலும் நமது
வாழ்க்கைக்கு இதை விலக்கி விட்டு
2.மெய் ஞானிகள் உணர்வைப் பெறுவதாகவும் அதை வளர்ப்பதாகவும் வர வேண்டும்.
தெரிந்து கொண்டேன் என்ற நிலையில் “ஆசை…”
உடலின் இச்சைக்கு அதிகமாகி இதிலே
சிக்கிவிட்டால் “நான் பெரிய மகான்…!” என்ற
நிலையில் உடல் பற்றுக்கே அழைத்து விடும்.
சொல்வது அர்த்தமாகிறது
அல்லவா…!
அந்த மெய் ஞானிகள் உணர்வைப் பெற வேண்டும் என்று எண்ணி அதை நீங்கள் பெற்று வளர்த்துக்
கொண்டால் அங்கே செல்லலாம். காரணம் இதையெல்லாம்
கண்டுபிடிக்கலாம் என்று வந்து விட்டால் இந்த உலக ஆசைகள்
வளர்ந்து விடும்.
அன்றைக்கு காந்திஜி அவர்
இங்கிலாந்தில் வட்டமேசை மாநாட்டிற்குப் போகும் போது “முதலில் அவரை உள்ளே விடமாட்டேன்…”
என்கின்றார்கள்
இந்தியாவைப் பற்றிப் பேசப் போகும்போது “அரை வேஷ்டியைக்
கட்டிக் கொண்டிருக்கின்றார்…” என்று உள்ளே விடமாட்டேன்
என்கிறார்கள் அவர்களைப் போல கோட் சூட் அணிந்து வந்தால்தான் அரசனைப் பார்க்க
முடியும்
ஆனால்… காந்திஜி அவர் எப்படியோ சாதித்து உள்ளே போய்விட்டார்
அப்பொழுது அங்கே அவர் பேசும் பொழுது அவருக்கு மரியாதை கொடுக்கின்றார்கள்.
இருந்தாலும் அவர்கள்
ராஜதந்திரத்தில் என்ன செய்கின்றார்கள்…? ஒரு டெலஸ்கோப்பைக்
கையில் கொடுத்தார்கள்
இது எனக்குத் தெரியாது.
ஆனால்… குருநாதர் இதை எனக்கு
ஞாபகப்படுத்துகின்றார்.
மாநாட்டிற்குப் போய்விட்டுத்
திரும்பிக் கப்பலில் வரும்போது நிறைய நாட்களுக்குப்
பிறகு அந்த டெலஸ்கோப்பை எடுத்துக் கடலுக்குள் பார்க்கிறார்
காந்திஜி.
அப்பொழுது ஆழ் கடலில் உள்ளுக்குள்
மீன்கள் போவதெல்லாம் அதிசயமாகத் தெரிகிறது. “ஆ…!
அந்த மீன் போகிறது பார். ஆகா… இங்கே இந்த மீன்
போகிறது பார்..,” என்று ஆச்சரியப்படுகிறார்.
இப்படிச் சொன்னவுடனே காந்திஜி
கூட வந்த தேசாய் காந்தி… அபுல்கலாம் ஆசாத்…
இந்த இரண்டு பேரும் இதைப் பார்த்தவுடனே “எனக்குக் கொடு… உனக்குக் கொடு…” என்று வாங்கிப் பார்க்க
ஆரம்பித்துவிட்டார்கள்
கடலுக்குள் இருக்கும்
அந்த அதிசயங்களைப் பார்க்கும் ஆசையில் ஒருவருக்கொருவர் “வெடுக்…” என்று அதை வாங்குவது - தான்
பார்ப்பது என்று… கப்பலில் வரும் பொழுது இத்தனை நிலைகளும்
அந்த மூன்று பேருக்குள்ளும் நடக்கின்றது
காந்திஜி ஒரு மகான்…! எல்லோருக்கும் உபதேசித்து வந்தாலும்… அப்பொழுது
அந்த இடத்தில் அந்த அதிசயத்தைப் பார்க்கும்போது இவருக்கு ஆசைகள் உருவாகின்றது.
அப்பொழுது அவர் என்ன செய்தார்…?
இப்படிப்பட்ட ஆசைகள்
உருவான பின்பு இனி நம் கையில் இந்த டெலெஸ்கோப் இருந்தால்
1.நாம் மூன்று பேரும்
நிச்சயமாக நண்பர்களாக இருக்க மாட்டோம்.
2.”பகைமையாகி விலகி
விடுவோம்…” என்று டெலெஸ்கோப்பை வாங்கி அதை வேகமாகத் தூக்கி
கடலில் போட்டுவிட்டார் காந்திஜி.
3.இது நமக்கு வேண்டாம்…! என்று இப்படிச் செய்கிறார்.
இது நடந்த நிகழ்ச்சி.
காங்கிரஸில் நான் ஆர்வமாக
ஈடுபட்டிருந்தாலும் எனக்கு இது தெரியாது. ஆனால் குருநாதர் இதைக் காண்பிக்கின்றார்.
அவர் காண்பித்த பிற்பாடுதான் எனக்கு இது தெரிகின்றது.
குருநாதர் இதைத்
தெளிவுபடுத்துகின்றார். ஏனென்றால்
1.இயற்கையின் பேருண்மை
நிலைகளை நான் உனக்குக் காண்பிக்கின்றேன்.
2.நான் உனக்குக்
காண்பித்த நிலைகளை “மற்றவர்களுக்கும் நீ சொல்வாய்…”
3.எல்லோரும் “பார்க்க வேண்டும்…” என்று ஆசைப்படுவார்கள் என்று இதை
எச்சரிக்கை செய்கிறார்
பார்க்க வேண்டும் என்ற
அந்த ஆசையில் “எல்லாம் தெரிய ஆரம்பித்தவுடன்…”
1.அவர்கள் அதிலேயே
ஆசைப்பட்டு “இந்தப்
பூமியின் நிலையில்தான் இருக்க வேண்டும்…” என்று
எண்ணுவார்கள்.
2.வந்தவர்கள் அனைவரும்
இந்தப் புவியின் பற்றின் உணர்வைப்
பெருக்கி விட்டார்கள் என்றால்
3.அப்புறம் - நீ போக வேண்டும் என்ற காட்டிய பாதைக்கு அவர்கள் போக மாட்டார்கள்.
நான் அதைப் பார்த்தேன்…! இதைப் பார்த்தேன்…! என்ற இந்த உணர்வு
ஒன்றியவுடனே ஆசையின் உணர்வுகள் வளர்ந்துவிடும் என்று குருநாதர் உணர்த்துகிறார்.
ஆகவே அதை விடுத்து விட்டு…
அந்த மெய் ஞானிகள் உணர்வைப் பெற வேண்டும் என்ற உணர்வினை நீங்கள் வளர்த்து, அதை உங்கள் உடல்களிலே பெருக்கி எல்லா அணுக்களிலும் சேர்த்தால்… உயிருடன் ஒன்றிடும் நிலையாக ஒளியின் சரீரமாக அங்கே போகலாம். ஏனென்றால்
1.இந்த உடல் பற்றை
அகற்றி உயிர் பற்றை வளர்த்தவர்கள் ஞானிகள்.
2.உடலுக்காக வாழாமல்
நம் உயிருக்காக வாழ வேண்டும்
3.அப்பொழுது அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் நாம் இணைய முடியும்.
குருநாதர் இப்படித்தான்
அனுபவபூர்வமாக அனைத்தையும் எமக்கு உணர்த்தினார்.