ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 2, 2025

இராமலிங்கம்

இராமலிங்கம்


உயிரான ஈசன் தான் கவரும் உணர்வுகளை… “உருவமாக்கி அருவத்தின் செயல்கள் எவ்வாறு இருக்கிறது…?” என்ற நிலையைத் தெளிவாகக் கூறுகின்றது நமது அகஸ்தியன் காட்டிய அறநெறி வழி கொண்டு அவனில் பெற்ற உணர்வின் செயல்…” அதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
 
உயிரணு தோன்றி எத்தனையோ வகை உருவங்கள் பெற்று உணர்வுக்கொப்ப அணுக்கள் விளைந்து உடலை விட்டுச் சென்ற பின் அதன் இணைப்பு கொண்டு அடுத்த உடலைப் பெறுகின்றது.
 
இப்படித்தான்
1.பல கோடி உணர்வுகள் ஒன்றுக்குள் ஒன்று இறையாகி
2.அதனின்றி மீள வேண்டும் என்ற உணர்வைப் பெருக்கிப் பெருக்கி எண்ணிலடங்காத உடல்களுக்கு இரையாகி
3.அதன் உணர்வைக் கவர்ந்து உடலின் உருவங்களை மாற்றி மாற்றி மனிதனாக நம்மை உருவாக்கி உள்ளது உயிர்.
 
மனிதன் தான் உயிரை ஈசன் என்று மதிக்கும் தன்மை பெறுகின்றான்.
1.தனக்குள் உருவாக்கியது யார்…? என்றும் உணர்வை இயக்குவது யார்…? என்றும்
2.தன்னில் இயக்கும் உயிரை முதல் மனிதன் அகஸ்தியன் காணுகின்றான்.
3.அதன் உணர்வின் செயலாக்கத்தைக் காணுகின்றான்.
4.கண்டபின் தான் நுகரும் உணர்வுகள் தான் தனக்குள் உருவாகின்றது என்பதை உணர்ந்தான்
5.உயர்ந்த நிலைகள் கொண்ட உணர்வினை அவன் நுகர்கின்றான்
6.தீமைகளை அகற்றும் உணர்வை நுகர்கின்றான்
7.அதன் உணர்வு கொண்டு தீமையை அகற்றிடும் அணுக்களை உருவாக்குகின்றான்
8.இருளை வென்றிடும் உணர்வினை நுகர்கின்றான். இருளை அகற்றிடும் அணுக்களைப் பெருக்குகின்றான்.
9.இப்படிப் பெருக்கித் தான் விண்ணின் ஆற்றலை நுகர்கின்றான்
10.அதனில் வரும் நஞ்சினை ஒளிச் சுடராக மாற்றுகின்றான்.
11.அறிவின் ஞானமாக இயக்குகின்றான் அருள் ஒளி என்ற உணர்வினைப் பெருக்குகின்றான்.
 
பெருக்கிய நிலைகள் கொண்டு அதை எல்லாம் தன் மனைவிக்கே ஓதுகின்றான். இவை இவை…! என்றும் இதனின் உணர்வுகள் இவ்வாறு…! என்றும் செவி வழி கூட்டும் பொழுது உணர்வின் தன்மை இயக்கப்பட்டு அதன் வழி
1.மனைவியும் கணவனுடன் ஒன்றிணைந்து தான் கண்ட உணர்வுகளை இருவரும் ஒன்றென இணைந்து
2.இரு உணர்வும் ஒன்றென இணைந்து இரு மனமும் ஒன்றென இணைந்து இரு உயிரும் ஒன்றென இணைந்து உணர்வினை ஒளியாக மாற்றி
3.விண்ணின் ஆற்றலை நுகர்ந்தறிந்து ஒளி என்ற உணர்வாக மாற்றியவன் அகஸ்தியன் துருவனானான்
4.துருவ மகரிஷியாக துருவ நட்சத்திரமாக ஆனான்… அவர்கள் வளர்ச்சியில்.
 
எண்ணத்தால் உணர்வால் ஒளியின் சரீரமாக எண்ணம் கொண்டு உயிருடன் ஒளியின் சரீரமானதால் ராமலிங்கம் என்ற காரணப் பெயரை வைத்து அழைத்தனர்.

மனத்தூய்மை பெற்றிடும் முயற்சி… அக்னி அஸ்திரத்தை எறிகின்ற விசை போல் இருந்திட வேண்டும்

மனத்தூய்மை பெற்றிடும் முயற்சி… அக்னி அஸ்திரத்தை எறிகின்ற விசை போல் இருந்திட வேண்டும்


1.உள்ளத்தின் கூமதை உணர்ந்து கொண்டுஅதை தூய்மையாக்கிடும் முயற்சிக்கு (தன் ஆத்மாவைச் சுத்தம் செய்வது)
2.இன்றைய மக்களின் நிலை வேர்விடும் ஒதிய மரமாகக் காணப்படுகின்றன.
3.சூறைக்காட்டில் ஒதிய மரம் (மிகவும் மென்மையான மரம்) நின்று நிலை பெற்றிடாது.
 
கருமானின் (கொல்லன்) உலைக்களத்தில் சென்று தேவையற்ற இரும்புப் பொருட்கள் அங்கே ஏன் கிடைக்கின்றது…? என்று கேள்வி கேட்க முடியுமா…! அவைகளை அவன் உளைக்களத்தில் தானே வைக்க முடிந்திடும்.
 
உலக சிருஷ்டியின் கூளத்தைப் பார்…! உலகத்தின் குப்பைகள் ஒவ்வொன்றும் புதிய புதினங்களாக உருவாக்கிக் கொண்டிருக்கும் சிருஷ்டியின் ரகசியங்களை நீ அறிந்து கொண்டிட வேண்டும்.
 
மனித மனத்தின் கூளங்கள் மனிதனின் மனக்கருவையை மூடிக்கொள்ளும் அளவிற்கு வளர்ந்து ஆத்ம பரிபாலன அரசை இந்த  லகோதயம் சூதிலே வீழ்த்திவிடும்.
 
உரத்து எழுகின்ற காற்றே குப்பைகளை அகற்றும். அது போல் மகரிஷிகளின் சக்தியை வைத்துத் தான் ஆன்மாவில் பட்ட அசுத்தங்களை அகற்ற முடியும்.
 
தூய்மைப்படுத்த வேண்டுமென்றால்சப்தரிஷிகளின் அருள் வழி கடாக்ஷங்கள் மகரிஷிகளின் அருள் ஒளியாக உரத்து மனத்தூய்மை காட்டும் அந்தச் செயல்பாட்டின் உறுதி நம்மிடம் எப்படி இருக்க வேண்டும்…?
 
தென்னம்பாளைப் பஞ்சு
அம்பின் நுனிக் குஞ்சு
பாறையின் மோதல் வேக நெருப்பு… (SELF IGNITION)
(இராம) காதையின் வழி கண்டுகொள் விருப்பு.
 
1.தென்னம்பாளைப் பூவின் பஞ்சு போல் அமைத்திட்ட கோலாக அம்பாக அமைந்து
2.நாண் பூட்டிய வில்லின் மூலம் அதை எறிய
3.காற்றின் உராய்வு சக்தி கொண்டு கனன்று எரிகின்ற நெருப்பாக
4.மனத்தூய்மை பெற்றிடும் முயற்சி அக்னி அஸ்திரத்தைறிகின்ற விசை போல் இருந்திட வேண்டும்
 
நீ ஈர்த்துக் கொண்டிடும் உயர் மின் நுண்காந்த அணுக்கள் ஆகாயச் சித்தன் (அகஸ்தியன்) கண்ட செயலில் சரீர உள் நிகழ்வில்
1.உச்சி முதல் உள்ளங்கால் வரை உள்ளங்கால் முதல் உச்சி வரை அந்த ஒளி அணுக்கள் ஓடிடும் ஓட்ட கதியில்
2.மேலிருந்து கீழாக கீழிருந்து மேலாக ஓட்ட கதி சந்திப்பின் உராய்வில் உண்டாக்கப்படும் ஒலி நாதம்
3.நம் சரீரத்தைச் சுற்றி ஓடும் அண்ட கோசம் என்ற ஒளிச்சுற்றலாக அமைவு கொண்ட அமைப்பில்
4.உன்னுள்ளே ஓங்கார நாதத்தை இடைவிடாது கேட்டு அனுபவிக்கின்றாய் அல்லவா.
 
ஞானமாகச் சுடர்கின்ற தன்மைக்கு அதுவே முன் முயற்சி. அனைத்தையும் அறிந்து கொள்ளதெளிந்து கொள்ள முடியும். அத்தகைய மனித மனத்தின் மனோ சக்தியின் ஆற்றலை இன்றைய மனிதன் இன்னும் அதனை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை.
 
பூட்டி இருக்கின்ற மனக் கதவைத் திறந்து கொள்ள இங்கே கொடுக்கும் உபதேச வாயிலாகத் தியானம் என்ற சாவியை மனமுவந்து அளிக்கின்றோம்.
 
தை வைத்துத் தன் மனக்கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றவன் உள்ளே இருந்து கொண்டு கதவடைத்துத் தாழ்பாளை இட்டு பூட்டிக் கொண்ட பின் சாவியைத் தொலைத்து விட்டானப்பா…! (மீண்டும் பிறப்புக்கு வராது மகரிஷிகளுடன் ஒன்றிடும் நிலை).
 
1.அத்தகைய மெய் ஒலி மெய் ஞானம் சுடராக விளங்க உண்மை நிலை உணர்ந்து தங்களை உயர்த்திக் கொள்வோர்
2.இங்கே வழிகாட்டும் மாமகரிஷிகள் நிலையின் வழி ஒன்றுவர்.
 
படைப்பின் படைப்பே சிருஷ்டி அனைத்தும் பெற என்னுடைய ஆசிகள்.

February 1, 2025

“அகஸ்தியனின் சகாக்கள்” சப்தரிஷி மண்டலமாகச் சுழன்று கொண்டுள்ளார்கள்

“அகஸ்தியனின் சகாக்கள்” சப்தரிஷி மண்டலமாகச் சுழன்று கொண்டுள்ளார்கள்


1.அகஸ்தியன் தன் இளமைப் பருவத்தில் பல விஷம் கொண்ட தாவர இங்களை நுகர்ந்தாலும் உணவாக உட்கொண்டாலும்
2.அவை அனைத்தும் இவனுக்குள் விஷத்தை ஒடுக்கி உணர்வின் தன்மை மாற்றும் நிலை வருகின்றது.
 
உதாரணமாக ஒரு தட்டான் பூச்சி எதன் மேல் தன் முட்டைகளை இட்டதோ அந்த உணர்வுக்கொப்ப அதிலுள்ள மத்தைத் தாங்கி அந்த உணர்வுக்கொப்ப பல வித வர்ணங்கள் கொண்டு பல பல வகையில் பூச்சிகளாக வருகின்றது.
1.ஒரே தட்டான் பூச்சி தான் முட்டைகளை இட்டது
2.ஆனால் முட்டைகளை இட்ட செடிகளுக்கொப்ப அந்த கருக்களில் நுகரப்பட்டு
3.பல வண்ணங்களில் பல விதமான பூச்சிகள் உருவாகின்றது.
 
இது எல்லாம் இயற்கையில் விளைவது.
 
இதைப் போல தான் இயற்கையில்
1.அகஸ்தியன் தாய் கருவில் இருக்கும் பொழுது விளைந்த உணர்வுகள்
2.ல பல இயக்கத்தின் உணர்வுகளையும் நஞ்சினை அடக்கிடும் தன்மையும் உணர்கின்றான் அகஸ்தியன்.
 
அவனில் இணைந்த உணர்வுகள் நஞ்சினை வென்றிடும் உணர்வுகளாக நுகர்ந்ததனால் அதை அவனின் எண்ண ஒலி கொண்டு வெளிப்படுத்துகின்றான். அதனைச் சூரியனுடைய காந்த சக்தி இதைக் கவர்ந்து அலைகளாக மாற்றுகின்றது.
1.அவனுடன் பழகியோர் அவன் சொல்லைக் கேட்டுணர்ந்தோர் அவன் உணர்வைப் பதிந்தோர்
2அவர்களுக்கும் அது கிடைக்கப் பெறுகின்றது
 
அகஸ்தியன் தாய் கருவில் பெற்றான். அவனுக்குக் கிடைத்த உணர்வுகள் தன் சகாக்கள் கேட்டறியப்படும் போது அவர்களுக்குள்ளும் இந்த உணர்வுகள் விளையத் தொடங்குகிறது
 
இவனில் விளைந்த உணர்வுகள் அவர்களுக்குள் ஜீவனுக்களாகப் பெற்று அந்தச் சகாத் தோழர்களும் இவனைப் போன்றே அவனை ஒட்டி வாழும் நிலைகள் வருகின்றது
 
காரணம்… அவரவர்கள் சந்தர்ப்பம் இயற்கையில் எதை எதை நுகர்கின்றோமோ அவை அனைத்தையும் உயிர் உடலில் அணுக்களாக உருமாற்றிக் கொண்டே உள்ளது.
 
இதை எல்லாம் அறிந்தவன் அகஸ்தியன். பல கோடி இன்னல்களைக் கடந்து அதனைத் தான் அறிந்து தீமையிலிருந்து விடுபடும் உணர்வுகளை வளர்த்து வளர்த்து வளர்த்து தீமையை அகற்றிடும் அருள் சக்தி பெற்றான் அகஸ்தியன்.
1.அவன் நிலையை நாமும் காண முடியும் காண வேண்டும் என்பதற்கே
2.குரு வழியில் இதை வெளிப்படுத்துகின்றேன்
 
அகண்ட அண்டத்தின் நிலையும் பிரபஞ்சத்தின் நிலையும் சூரியனின் இயக்கமும் இந்தப் பிண்டத்திற்குள் (உடலுக்குள்) எப்படி உருவானது என்ற உண்மை நிலையையும் அகஸ்தியன் உணர்கிறான்.
 
அணுவின் இயக்கத்தை உணரும் பருவம் பெறுகின்றான். அந்த உண்மையின் இயக்கத்தை அறிந்ததனால் அவனுக்கு அகஸ்தியன் என்ற காரணப் பெயர் வைக்கின்றனர்.
 
இந்தப் பேருண்மைகள் அனைத்தும் அவனுக்குள் வளர்ந்து வளர்ந்து வளர்ந்து வளர்ந்து தான் கண்டதைத் தன் அருகில் உள்ள அவன் சகாக்களுக்கும் சொல்கிறான்.
 
அவனின்று வெளிப்பட்ட உணர்வு இன்றும் புவியில் படர்ந்துள்ளது. அவன் நந்து சென்ற எல்லைகளிலும் பதிந்துள்ளது.
1.அகஸ்தியன் உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாகித் துருவ நட்சத்திரமாக ஆனான்.
2.அவனுடைய சகாக்கள் அவனின் ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலமாகச் சுழன்று கொண்டுள்ளார்கள்.
3.அந்த அகஸ்தியனின் உணர்வைக் கவர்ந்தால் நாமும் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து வாழலாம்.

மெய் ஞான விழிப்பின் உதயம் கண்டால் நற்குணத் தன்மைகளில் “அன்பே” முதன்மையாகும்

மெய் ஞான விழிப்பின் உதயம் கண்டால் நற்குணத் தன்மைகளில் “அன்பே” முதன்மையாகும்


மனித மனம் சமுத்திரத்திற்கே (கடல்) ஒப்புவமை காட்டப்பட்டது. அமைதியாகத் தோற்றமளிக்கும் அந்தக் கடல் நீர்
1.பரப்பளவிலே உயர்ந்தும் தாழ்ந்தும் ஆடிடும் உண்மை நிலையேநம் மனத்தின் அலைபாயும் எண்ணங்கள்…”
2.இடையறாது சதா வீசிக்கொண்டே இருக்கும் அலைகள் போல் குணங்களின் தன்மைகள்
3.பல பல குணங்களாக ஆர்ப்பரிக்கும் மனத்தின் எழுச்சி எண்ண அலைகளானது
4.நாம் கொள்ளப்படுகின்ற (முடிவெடுக்கும் நிலைகள்) கருத்தின் வாசனையாக பருவ கால மாற்றம் போல்…”
5.அதனால் ஏற்படுகின்ற கடலின் சூறாவளி போல் கொண்ட குணத்தின் தன்மை காட்டும்.
 
மனத்தினுள் மெய் ஞான விழிப்பின் உதயம் கண்டால் நற்குணத் தன்மைகளில் அன்பே முதன்மையாக அந்த குணங்களே வீசிடும் அலைகளாகப் பரவி புறத்தின் பொய்மை நிலைகள் அகன்று சாஸ்வதமான மெய் ஒலியால் ஒளி காட்டும் மெய் ஞான நிலை கூட்டிமெய் ஞானச் சுடராக விளங்கும்.
 
அதீத நோய்வாய்ப்பட்டவன் நறுமலர் தேனின் சுவையை அறிந்து கொண்டிட முடியாத் தன்மை போல் மெளடீகத்தின் (மூடத்தனம்) வலையில் உட்படும் மனிதர்கள் அதிகரிக்க
1.மெய் ஞான மணம் காட்டி சுவை கூட்டும் எளிய தியானத்தைக் காட்டினாலும்
2.கடைப்பிடிக்க முன் வருபவர்கள் அரிதிலும் அரிதாகிக் கொண்டே வருகின்றார்கள்.
 
அதீத சுகவாசம் சோம்பேறித்தனம்இவை எல்லாம் அருள் செல்வத்தைப் பேணிக் காத்திடும் கடமையைக் குறைத்துவிடும்.
 
அருள் செல்வத்தைப் பேணுகின்ற பொறுப்பு ஜீவ பிம்ப சரீரம் பெற்ற மனிதனுக்கே உரியது…. அந்தப் பொறுப்பும் அதைக் காக்கின்ற கடமையும் அவனையே சார்ந்தது.
 
வாசல் வழி திறந்திருந்தால் திருடன் புக ஏதுவாகும். தீய குணங்களையே அவ்வாறு கூறுகின்றோம். ஆத்ம பலம் கூட்டிடும் கடமையை ஏற்றுக் கொண்ட மனிதன்
1.திருடனாலும் அதாவது தீய குணங்கள் அருள் செல்வத்தை அபகரிக்க
2.”தனக்கு அதிலே எதுவும் பொறுப்பில்லை…” எனத் தட்டிக் கழித்திட முடிந்திடுமோ…?
3.பொருளைக் காக்கின்றவன் காக்கின்ற கடமையைத் தவறிவிட்டால் அதனுடைய முழுப் பொறுப்பும் அவனுக்கே உரியது.
 
விழுப்பொருளாம் (உயிருடன் ஒன்றி விண் செல்லும் ஆற்றல்) அந்தப் பொருளை முன் நிலை போல் சமன்படுத்த மனித மனத்தின் செயலுக்கே அது உரியது.
 
உவப்பு (மகிழ்ச்சி) மனத்தினுள் நிலைபெற்றுப் பேரானந்த லயமாகக் கலந்திடவே மனத்தின் பாங்கு அன்று மலர்ந்த மலர் போல் மணம் வீசும் செயலை உணர்ந்து கொண்டிடும் மகிழ்வால் நாதமாக ஈர்த்திட்டு பேரொளி பெற்றிடவே இங்கே உரைப்பதெல்லாம்.
 
துறவறம் பூண்டு ஒளி நிலை பெற வேண்டும் என்றே கூறுகின்றார்கள். நாம் கூறிடும் நிலையோ இல்லறத்தின் வழியாக ஒலி கொண்டு ஒளி பெறுதல் தான்…”
 
நாதத்தைக் கூட்டி நாத நாதாந்தம் ஆகுதல் பேரொளியாகுதல்…” என்பதெல்லாம் நல்லறம் ஆக்கிடும் இல்லறத்தில் பயனுறப் படைப்பின் படைப்பாதல்…” என்பதனையே உணரல் வேண்டும்.
 
ஔவையின் உரை வறுமை கொடியது…! பசியை நோய் என்றே பகர்ந்த உரை. பசி நோயானது தொடர்ந்து பீடிக்கப்படுங்கால் சரீரம் பசி நோய்த் தாக்குதலில் உணர்வின் உந்துதல் கொண்டு உயர் நிலையை எண்ணிடாது.
 
புசித்தால் அந்த நோய் அகலும். ஆனால் தொடர்ந்து வருத்தும் அந்தப் பசி நோயிற்கு வறுமையில் உழல்பவன் வளமாக வாழ்பவன்…” என்றெல்லாம் பேதங்கள் ஏது…?
 
ஜீவ பிம்ப சரீரம் பெற்ற அனைத்து உயிர்களையும் தான் பசி நோயானது வருத்துகின்றது. புசிக்க வழி காணும் ஆக்கத்தின் செயல் இன்றி பசி அகன்றிடுமா…?
 
வாழும் வாழ்க்கையின் செயலில் முயற்சி அன்றோ திருவினை தருகின்ற உசித மனம் வேண்டும். உசித மனம் கொண்டவன் உரப்ப தானேகும் பசி நிலை (கட்டுக்குள் அடக்க முடியும்).
 
இந்தத் தியானத்தின் வழியில் செயலுறும் வழியாகக் காற்றமில சக்தியை (உயிர் வழி சுவாசம்) ஈர்த்துக் கொண்டிடும் பக்குவத்தில் மூல அமில சக்தியாக ஆகாரத்தை (பசிக்கு உட்கொள்ளும் உணவு) இந்தச் சரீரத்திற்கே பெற்றுக் கொள்ள முடிந்திடும். அதாவது
1.தொடர்ந்துற்ற பசிக்குத் தொடர்ந்தே உணவு அருந்திடும் தன்மை போல்
2.தொடர்ந்தே காற்றமில சக்தியைச் சரீரத்தினுள் ஈர்த்துக் கொள்ளும் செயலில்
3.”நிலை நிற்கும் பேறு அதுவே…” என மாமகரிஷிகளால் அந்தச் சக்திகளை வளர்த்துக் கொண்டிடலாம்.