சுவையில் பொதுவாக இரண்டு வகை உள்ளது.
1.நாவினால் உணர்ந்து சரீரத்திற்குத் தேவையான ஆகார நியமனங்களின் மூலமாக ஊட்டப் பெறும் நிலை “அறுசுவை...!” ஒன்று.
2.மற்றொன்று எண்ணத்தால் சுவைக்கும் தனித் தன்மையான “பேரின்பச் சுவை...!”
3.இரண்டுமே பொது நிலைகளில் “எண்ணத்தின் வழி தான்...” கிடைக்கின்றது.
எண்ணத்தின் வழியாக இருந்தாலும் அனுபவ அணுகு முறைச் செயல்களின் மாறுபாட்டை உணரப் பெறும் பொழுது... “தான் உணர்ந்து... அனுபவத் தன்மையால்... பதிவு செயல் நடைபெறுகிறது...!”
உலக வாழ்க்கையின் எண்ண நினைவோட்ட வலுக் கொண்ட கால கட்டங்களில் அந்த எண்ண ஓட்ட வலுவிற்கு வீரியச் சுவை ஊட்டிட
1.ஆகார வழிகளில் பெறப்படும் முறைகள் அத்தனையும்
2.எதன் எதன் சுவைகளில் இச்சைப்படுகின்றோமோ
3.நாவின் அதி சுவைக்கு அடிமையாகும் அத்தனை நிலையும்
4.நம்மை அறியாமல் இயக்கும் உணர்வுகளின் உந்துதல்களின் வேகத்திற்கு நம்மை நாமே அடகு வைத்து
5.மீள முடியாதபடி ஓர் கட்டுக்குள் அடங்கி விடுகின்றோம்.
காற்றில் இருக்கும் அமில குணத் தன்மைகளில் படர்ந்துள்ள ஆகார நிலைகளை (மணங்களை) நுகர்ந்து அதற்குகந்த திட உணவைப் பக்குவப்படுத்திச் சமைத்துப் புசிக்கும் பொழுது ஏற்படுத்தப்படும் ஜீரண சமைப்பு அதன் மற்ற காலங்களில் கிரியா ஊக்கியாகி (உணவைப் பார்த்ததும் உமிழ் நீர் ஊறுகிறது அல்லவா...!) மறை பொருளாக நிற்கும்.
பின் சரீரச் செயல் நிலைக்கு அதை மாற்றும் பொழுது உடல் உறுப்புகளுக்குள் சுரக்கும் அமிலங்களும் அதில் சரீரம் சக்தி பெறுவதாகவே இருந்தாலும் காற்றில் கலந்துள்ள அமில குணங்களின் இயக்கமாகவே செயல்படும்.. “நம்மை அதன் வழியிலேயே இயக்கும்...!”
ஆனால் உயிர்த் தன்மையின் கட்டுக்குள் எண்ணமும் சரீரமும் செயல்படும் பொழுது
1.பேரின்ப நுகர்ச்சியை அனுபவிக்கும் ஆன்மா - தான் பெறும் நாவின் சுவையையே மாற்றி
2.நாசியின் வழி ஆகாரம் பெற்று
3.சரீர வளர்ப்புக்கும் உயிர்ச் சக்திக்கும் சக்தியூட்டி
4.புறக் கழிவுகளற்ற நியமனக் கட்டுப்பாடாக
5.மற்றொரு வழியை ஏற்படுத்திக் கொண்டு அனைத்துச் சக்தியையும் பெறும்.
இரகசியத் தன்மையாக ஒரே மரத்திற்கு இரு விதச் செயல் தன்மைகள் காட்டப்படுகிறது. அதாவது
1.உணர்வுகளின் அது உந்துதல் குணச் சுவை அமிலமே மரத்தின் மேல் நிலையும்
2.அது அடி மரமாகப் பக்குவமாக விளைந்த தன்மையே “மருந்தாவும்...” உபயோகப்படுத்தப்படும்.
ஒரு மரத்தின் அடி மரம் போன்ற விளைச்சலாக (மருந்தின் குணம் போல்) உள்ளடங்கி ஈர்க்கும் தியான முறைகளில் எல்லாம் எந்த எண்ணத்தை வழி நடத்துகின்றோமோ அந்த எண்ணத்திற்கொப்ப ஞான வளர்ச்சியின் வழி முறைக்கு அது வித்தாகும்.
ஆனால் அதுவே உணர்வின் உந்துதல் என்ற நிலையில் சரீரம் தொட்டு நீர்சக்தியாக அனுபோக முறைப்படுத்தப்படும் பொழுது எப்பொழுதோ உடலுக்குள் உணவு மூலமாக ஊட்டப்பட்ட நிலைகள் எல்லாம் தனக்குகந்த ஆகார நிலை அமிலம் (சுவாசத்தின் மூலம் உருவான உமிழ் நீர்) சூட்சமம் கிடைக்கப் பெற்றதும் நம் மனக் கட்டுப்பாட்டையும் மீறிச் செயல்கள் துரிதமாக நடைபெறுகின்றன.
சரீரத்திற்கு வலுக் கூட்டும் முறையாக சரீரத்திற்கு ஆகாரத்தை உட் கொண்டாலும்
1.காற்றின் வழி எடுக்கும் ஆகாரத்தையே (அந்தக் குணத்தையே)
2.முதன்மையாகக் கொடுத்துத் தன் ஞானத்தால் கூட்டிக் கொண்டான்
3.அன்றைய சித்தன் தனக்குகந்த வழித் தொடரில் எல்லாம்…!
சரீரத்திற்குக் கொடுக்கப்படும் திட உணவின் மூலம் உடலுக்குள் உருவாகும் அமிலங்களின் உணர்வின் உந்துதலை அடக்கிட காற்றிலிருந்து நேரடியாக ஆகாரத்தை எடுத்துத் தன் உயிரான்ம சக்தியை வலுப்படுத்திக் கொண்டார்கள் அன்றைய சித்தர்கள்...!