யானையை முதல் தெய்வமாக வணங்கும் விநாயகனுக்கு ஒப்பிட்டு யானையை விநாயகராக வணங்குகிறார்கள்.
யானையின் லத்தியை மிதிப்பதும் யானயிடம் குழந்தைகளைத் தந்து வாங்குவதும் பெரியோர்கள் யானையிடம் ஆசீர்வாதம் பெறுவதுவும் எதற்காக…?
ஆண்டவன் ஊர்வலங்களில் யானையை முன் அழைத்துச் செல்கிறார்கள். யானைக்குகந்த சக்தித் திறன் என்ன…?
இருபது மாதங்கள் கர்ப்பத்திலிருந்து சில நூறு ஆண்டுகள் யானைகள் வாழ்கின்றன. யானைக்குச் சில நல்ல குணங்கள் அபரிதமாக அமைந்துள்ளன.
1.யானையின் எண்ணச் சுழற்சியில் தீய ஆவி உள்ள ஆத்மாக்கள் அதன் எண்ண வட்டத்திற்குள் செல்ல முடியாது.
2.மனித உடலிலிருந்து பிரிந்த ஆத்மாக்களின் உயிரணுவும் யானையின் ஈர்ப்புக்குள் சிக்குவதில்லை.
3.யானையின் பிறப்பே தனியான அமில குணத்தை உடைய பிறப்பின் வட்டத்தில் வந்தது.
உயிரணுக்களின் மனித உருவில் உருப்பெற்று மற்ற உயிர் ஜெந்துக்களுக்கு இந்த மனித ஆத்மாக்கள் சென்றாலும் “யானையின் ஈர்ப்புக்குள் செல்ல முடியாது…!”
இந்த அபரிதமான அமில குண ஈர்ப்பினால் ஜீவனான யானையின் நிலை உள்ள இடங்களில் தீய ஆவிகள் அண்டாது. அதற்காகத்தான் யானையை நல் உணர்வின் பக்தி வழிபாட்டு புண்ணியஸ்தலமான கோவில்களில் வைத்து வணங்குகிறார்கள்.
குழந்தைகளை யானையிடம் தந்து வாங்குவதனால் குழந்தைகளுக்கு அதன் சுவாச அமில குணத்தின் சக்தி பெற்று அக்குழந்தையின் மேல் மற்ற தீய அணுக்கள் பரவாமல் இருக்கும்.
யானையின் லத்தியை மிதிக்கின்றார்கள்.
1.அதிலிருந்து வெளிப்படும் உஷ்ண அலையினால்
2.நம் உடல்களுக்குச் சில ஆரோக்கிய நிலைகள் கூடப் பெறுகின்றன.
முந்தைய காலங்களில் அரசர்களால் எதற்கும் முதலிடமாக யானையை வைத்தது இந்த அடிப்படையில் தான்,,.! எதிரிகளின் தன்மையிலிருந்து ஏவப்படும் பில்லி சூனியம் துர் மந்திரங்கள் இவை எல்லாம் அன்றாண்ட அரசர்கள் காலத்தில் போர்க்களத்தில் யானையை முன் நடத்தி இவர்கள் போருக்குச் சென்றதுவும் இதன் அடிப்படைக் குணத்தில் தான்…!
சூழ்ச்சியில் ஏவப்படும் மந்திரங்களிலிருந்தும் குட்டிச்சாத்தான்கள் பேய் பிசாசு என்கிறார்களே இதைப் போன்ற நிலைகளிலிருந்தெல்லாம் யானையில் ஏறிச் செல்லும் அரசர்கள் காக்கப்படுகின்றனர்.
காலப்போக்கில் மற்ற மிருக இனங்களும் மனித ஆத்மாக்களும் கூடியுள்ள நிலையில் யானையின் பிறப்பு விகிதம் குறைந்ததற்கும் இதுவும் ஒரு காரணம்.
நம் மனித ஆத்மா உடல் இறந்த பிறகு இந்த உடலிலிருந்து பல அணுக்கள் பிறப்பிற்கு வருகின்றன. யானையின் உடல் அமிலத் தன்மை அந்நிலையைப் பெறும் தன்மை குறைவுடையது.
1.யானையின் சுவாச அலைகள் பட்டாலே அந்த இடங்கள் எல்லாம் புனிதம் பெறும்.
2.இதனை மேற்கொள் கொண்டு தான் நம் முன்னோர்கள் யானையைத் தெய்வமாக வணங்கி வந்தனர்.