
வேதனை என்ற வித்து உடலில் உருவாவதும்… உயிர் அதற்கு உணவு கொடுக்கும் நிலையும்
செடி
வளர்ச்சி அடைந்து அதிலே வித்து உருவாகிவிட்டது என்றால் அதை மண்ணிலே மேலே போட்டு
விட்டால் முளைக்காது. காரணம்… மழை பெய்தாலும்… பதிவானால் தான் முளைக்கும்…
அப்படியே மேலிருந்து முளைத்தாலும் கருகிவிடும்.
சந்தர்ப்பத்தால்
நாம் எடுத்துக் கொண்ட வேதனையான உணர்வுகள் (அது ஒரு வித்து) உடலில் சுழல்கிறது.
1.எந்த
நேரத்தில் எந்த உறுப்பின் பாகம் செல்கின்றதோ…
2.வேதனைப்படுபவரைப் பற்றி நாம் அப்போது நினைத்தால் அந்த உறுப்பிலே ஒட்டிக் கொள்ளும்
3.ஒட்டிய
உடனே துடிப்பு நிலை வரும்… அந்த நேரத்தில் நமக்குப் பட…பட…பட…பட… என்று அடிக்கும்.
4.அந்த
அணு என்ன செய்யும்…? சாப்பாடு கிடைத்த பின் குஞ்சு வெளி வந்து
விடும்.
முட்டை
பொரிந்து குஞ்சு வெளிவந்த பின் அந்தக் குஞ்சு எப்படிக் கத்துகின்றதோ தாய்க் கோழி
கொக்கோக்கோ… என்று அதற்கு
இரையைக் கூப்பிட்டுக் கொடுக்கும். குஞ்சு பின்னாடியே போகும்.
அதைப்
போன்று தான்
1.வேதனையான
உணர்வின் அணுக்கள் குஞ்சாகி வெளி வந்தால் சிறுமூளைக்கு. எட்டும்.
2.உடனே
கண் காது மூக்கு இவைகளுக்கு ஆணையிடுகிறது.
3.ஆணையிட்ட
பின் காற்றிலிருந்து அந்த உணர்வின் சத்தை இழுக்கும்.
4.சுவாசித்து
இதே உயிர் உருவாக்குகிறது… அந்த
அணுவிற்குச் சாப்பாடு கொடுக்கும்.
5.ஏன்
சாப்பாடு கொடுக்கின்றாய்…? என்று உயிரிடம் கேட்க முடியுமா…!
ஆறாவது
அறிவால் அதைத் தடுக்க வேண்டும் தடுத்துப் பழக வேண்டும் இல்லையென்றால் அடக்கி[ பழக வேண்டும். அது தான் அங்குசபாசவா…!
ஆறாவது
அறிவு பெற்றவன் அடக்கும் வல்லமை கொண்டவன். நாம் எதைக் கொண்டு அடக்க வேண்டும்…? மகரிஷிகள் அருள் சக்தி கொண்டு
அடக்க வேண்டும்.
அவ்வளவு
பெரிய யானையை அங்குசத்தை வைத்து அடக்குகின்றார்கள் அல்லவா. அது போல் எவ்வளவு பெரிய நிலையாக
இருந்தாலும் அருள் மகரிஷியின் அருள் சக்திகளைப் பாய்ச்சினால்
அது அடங்குகிறது.
ஆறாவது அறிவால் அடக்கும் வல்லமை பெற்றவன் என்று காவியங்களை
இப்படித்தான் கொடுத்திருக்கின்றார்கள்.
1.ஆனால்
நாம் அதைப் படித்துவிட்டுக் கதையாக எங்கெங்கோ கொண்டு செல்கின்றோம்.
2.ஒரு
சிலையை வைத்து இவ்வளவு விரிவுரைகளை ஞானிகள் நமக்குக் கொடுக்கின்றார்கள்.