உதாரணமாக செல்ஃபோன்களில் அதற்குள் இயங்கக்கூடிய நிலைகளில் மிகவும் நுண்ணியதாக சிறிதளவே கொடுத்துள்ளார்கள்.
1.ஆனால் அதிலே பல இலட்சக்கணக்கான உணர்வுகளைப் பதிவு செய்கின்றனர்.
2.அதை வைத்து நாம் இயக்கப்படும் பொழுது பலரிடம் நாம் தொடர்பு கொள்கின்றோம்... இயக்குகின்றோம்
இதைப் போன்று தான் நாம் கோபப்பட்டவர் உணர்வுகளைப் பதிவாக்கிய பின் அவனை எண்ணியவுடன் நமக்குக் கோபம் வருகிறது. சோர்வடைந்து வேதனைப்படும் பொழுது சிந்தனை குறைகிறது.
இது எல்லாம் நமக்குள் இயக்கும் தன்மைகள்.
ஆனால் அதே சமயத்தில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நாம் பதிவாக்கி அதன் உணர்வுகளைப் பெருக்கப்படும் பொழுது “நாம் எண்ணும் போதெல்லாம்...” உடனே அந்தச் சக்திகளைக் கவர்ந்து நம் உடலில் நல்ல இரத்தங்களாக உருவாக்க முடியும்.
நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்களுக்கு துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உணவாகக் கொடுக்க முடியும்.
வேதனையான உணர்வுகளைச் சுவாசித்த பின் அந்த விஷத்தன்மைகள் நம் இரத்தத்தில் கலந்து நம் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களுக்குள் பட்ட பின் அவை மயக்கம் அடைகின்றது.
ஆனால் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நாம் நுகர்ந்து நம் இரத்தத்தில் அதைக் கலக்கச் செய்தோம் என்றால் அது விஷத்தை எல்லாம் ஒடுக்கியது... அப்போது நமக்குள் அது உற்சாகத்தை ஊட்டுகின்றது.
நம் உயிர் எப்படி உலக உணர்வின் தன்மை அறிவிக்கின்றதோ இதைப் போன்று
1.தடையின்றித் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நமக்குள் பெருக்கி
2.உடலுக்கு பின் உயிரைப் போன்று உணர்வுகளை ஒளியாக மாறற முடியும்... பிறவி இல்லா நிலை அடைய முடியும்.
3.இப்படித்தான் அகஸ்தியன் ஒளி நிலை அடைந்தான்... அவனுக்குள் கற்றறிந்த உணர்வின் துணை கொண்டு
4.அதே போன்று நாமும் அடைய முடியும்.
மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எம்மைப் (ஞானகுரு) பல காடு மேடேல்லாம் அலையச் செய்தார்.
1.இயற்கையில் சூழ்நிலைகள் எப்படி மாறுகின்றது...?
2.தாவர இனங்கள் எப்படி மாறுகின்றது...?
3.வலுவான தாவரங்களின் மணத்தைக் கண்ட பின் மற்ற வலுவற்ற தாவரங்கள் எப்படி அஞ்சி ஓடுகின்றது...?
4.ஓடிய உணவுகள் மற்றொன்றுடன் மோதிக் கலந்து புதுப்புது வித்துக்களாக எப்படி உருவாகின்றது...?
5.விஷத்தன்மையும் வளர்கின்றது விஷமற்ற உணர்வுகளும் வளர்கின்றது அது எல்லாம் எப்படி...? என்று காட்டினார் குருநாதர்.
அது எப்படியோ அதே போல் தான் ஒவ்வொரு நாளும் நாம் நுகரும் உணர்வுகள் எத்தனை வகையான உணர்வுகளாக உடலுக்குள் சென்று அது தொடர்ந்து இயக்கி விடுகின்றது.
1.உயிரிலே பட்டால் குருக்ஷேத்திரப் போராக நடக்கின்றது
2.உடலுக்குள் சென்றால் மகாபாரதப் போராக நடக்கின்றது.
(வேதனை என்ற உணர்வுகள் நம் உடலுக்குள் சென்றால் மகாபாரதப் போராகின்றது)
மகாபாரதப் போர் என்றால்... இந்த மனித உடலுக்குள் எத்தனையோ வகையான செய்திகளைக் கேட்கின்றோம் நமக்குள் அந்தப் பதிவுகள் உண்டு.
அதிலே நல்ல அணுக்களும் உண்டு... ஆனால் வேதனைப்படும் உணர்வுகள் அந்தக் கணக்கு அதிகரித்து விட்டால் கலக்கமும் சஞ்சலமும் வெறுப்பும் வேதனையும் கொதிப்படையும் தன்மையும் ஆகி “தன் நிலையை...” சீராக ஆக்க முடியாத நிலை ஏற்பட்டு விடுகின்றது.
உற்றுப் பார்த்து நம் கண்களால் கவரப்படும் பொழுது அது எந்த உணர்வோ உயிரிலே படும் பொழுது “கண்ணன் சங்கநாதம் ஊதிய பின் குருக்ஷேத்திரப் போர்...”
கண்கள் கவர்ந்தது உயிரிலே பட்ட பின் அந்த நாதங்கள் உடலுக்குள் உணர்ச்சிகளாக இயக்குகின்றது. நல்லது என்றால் மகிழ்ச்சி அடைகின்றது தீமை என்றால் குருக்ஷேத்திரப் போராக நல்ல உணர்வுக்கும் நாம் நுகர்ந்ததற்கும் போர் நடக்கின்றது.
தீமை என்றால் உடலுக்குள் புகுந்து விடுகிறது. உடலுக்குள் சென்றால் கண்ணன் வெண்ணையைத் திருடுகின்றான். அந்த வலுவான உணர்வுகள் அனைத்தையும் நம் உடலுக்குள் இருக்கும் அணுக்களுக்குள் சேர்த்து விடுகின்றது இதே கண்கள் தான்.
அந்த வெண்ணையைத் திருடிய பின்...
1.எதனுடைய உணர்வு அதிகமோ உடலை விட்டுச் சென்ற பின்
2.அதனுடைய ஈர்ப்பிற்குள் அழைத்துச் சென்று விடுகின்றது உயிர்.
கண்கள் தான் (கூர்மை) அர்ஜுனன் அதாவது அர்ஜுனன் என்பது வலிமை...! எதையும் தாக்கும் வலிமை பெற்றது.. அந்த உணர்வுடனே உடலை விட்டு வெளியிலே செல்கிறது.
அதாவது அர்ஜுனனுக்குக் கண்ணன் சாரதியாக இருந்து வழி நடத்துகின்றான்...! உடலுக்குள் நாம் நுகர்ந்தவைகளின் வலிமை கொண்டு அடுத்த உடலுக்குள் அழைத்துச் செல்கிறது என்று காவியங்கள் நமக்கு தெளிவாக இந்த உண்மைகளை உணர்த்துகின்றது
1.வியூகத்தைத் தகர்த்து அதற்குள் சென்று நீ அதுவாக ஆகு...! கண்ணன் அர்ஜுனனுக்குச் சொன்னது.
2.எதன் உணர்வோ... அதனுடைய வலிமைக்கொப்ப அதனுடைய எல்லையை அடையும் நிலை வருகிறது.
இது எல்லாம் நம்மை நாம் அறிந்து கொள்வதற்காகக் காவியத் தொகுப்புகளை ஞானிகள் நமக்குக் கொடுத்துள்ளார்கள்.