எத்தனையோ பேருக்கு நாம் பல நன்மைகளைச் செய்திருந்தாலும் அதிலே தீமை என்ற உணர்வுகள் நமக்குள் புகாதபடி அவ்வப்பொழுது சுத்தப்படுத்திப் பழகுதல் வேண்டும்.
அதற்குத்தான் ஆத்ம சுத்தி என்ற பயிற்சியைக் கொடுக்கின்றோம்.
உதாரணமாக... ஊசி மூலம் நம் உடல் இரத்தத்திலே மருந்தை கலக்கச் செய்ய்யும் போது அந்த மருந்து செல்லும் இடங்களில் எல்லாம் தீமைகளை (நோய்களை) நீக்குகிறது.
இந்த மருந்தைக் கண்டவுடன் அந்த அணுக்கள் ஏற்க மறுக்கிறது. மருந்து அணுக்களுக்குள் சேரச் சேர அது பலவீனம் அடைகின்றது.
இதைப் போன்று தான்
1.துருவ நட்சத்திரத்தின் பேரருளை நீங்கள் எடுத்துப் புருவ மத்தியில் எண்ணி உங்கள் இரத்தத்தில் கலக்கச் செய்ய வேண்டும்
2.உங்கள் உடல் உறுப்புகளில் உள்ள அணுக்கள் அனைத்திலும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று
3.கண்ணின் நினைவைச் செலுத்தி விட்டால் இது துரிதமாக அந்த அணுக்களிலே போய்ச் சேருகின்றது.
4.மேலே சொந்னது போன்று அறியாது உட்புகும் தீமைகளைப் பலவீனப்படுத்துகிறது.
உதாரணமாக... நண்பர்களுக்குள் பழகப்படும் பொழுது “நன்மை செய்தான்...” என்று எண்ணும் பொழுது அமெரிக்காவில் இருந்தாலும் விக்கல் ஆகிறது.. நன்மை செய்யும் சக்தியாக இயக்குகிறது.
ஆனால் பகைமை என்று ஆகி “துரோகம் செய்தான் பாவி...” என்று வேதனையுடன் எண்ணினால் நண்பன் உணவு உட்கொண்டிருந்தாலும் அங்கே புரை ஓடுகின்றது.
யார் இப்படி எண்ணுகிறாரோ அவருக்கும் இருள் சூழச் செய்து சிந்தனை இழந்து அடுத்து விபத்தாகின்றது. அதே சமயத்தில் யாரை எண்ணினாரோ அங்கேயும் விபத்தாகிறது. ஆக... நாம் எதை எண்ணுகின்றோமோ அதனின் உணர்வின் வழி தான் இயக்கச் சக்தியாக மாறி இயக்குகிறது.
வேதனை வேதனை என்று எண்ணினால் கண்கள் இருண்டு விடுகின்றது.
1.அந்த நேரத்தில் நேரடியாகப் பார்த்தாலும் மேடு பள்ளம் இருப்பதை நம்மால் பார்க்க முடியாது போகின்றது.
2.கரு விழிகளில் அடுத்தடுத்து இந்த வேதனைகள் படப்படும் போது விஷத்தன்மை என்ற மாசுகள் பெருகத் தொடங்கி விடுகின்றது.
3.இப்படிப் பெருகத் தொடங்கினால் கண் கருவிழிக்குள் இருக்கும் கண்மணியும் பலவீனம் அடைகின்றது
4.அது பலவீனம் அடைந்தால் விஷத்தின் தன்மையை அதிகமாகக் கவர்ந்து
5.கண் நரம்பு மண்டலம் முழுவதும் விஷத்தன்மைகள் பரவி விடுகின்றது.
6.விஷத்தன்மை பரவினால் உடல் முழுவதற்கும் அது எளிதில் பரவும் தன்மை வருகிறது.
இது போன்று “ஒன்றுடன் ஒன்று தொடர் கொண்டு” அதன் தொடர் வரிசையில் இயற்கையின் நியதிகள் நம்மை மாற்றிக் கொண்டிருக்கின்றது..
ஆனால் இதையெல்லாம் மனிதன் ஒருவன் தான் மாற்றி அமைக்க முடியும்.
மாற்றி அமைக்க வேண்டும் என்பதற்குத் தான் நமது குருநாதர் காட்டிய அருள் வழியில்
1.துருவ நட்சத்திரத்தின் பேரருளை பெற வேண்டும் என்று இங்கே கூர்ந்து கவனிக்க வைத்து
2.ஊழ்வினை என்ற வித்தாக உங்கள் எலும்புக்குள் இருக்கும் ஊனுக்குள் பதிவாக்கச் செய்கிறோம் (ஞானகுரு).
பதிவானதை நீங்கள் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்து தீமை என்று வரும் பொழுதெல்லாம் துருவ நட்சத்திரத்தின் பேரருளை எடுத்து ஆத்ம சுத்தி செய்து துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெருக்கிக் கொள்ள வேண்டும்.
துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெருக்கப் பெருக்க இந்த உடலுக்கு பின் பிறவி இல்லாத நிலை அடையும் தகுதி பெறுகின்றீர்கள்.
முந்தைய நிலைகள் இதை எல்லாம் செய்யத் தவறி இருந்தாலும் ஈஸ்வரா... என்று புருவ மத்தியில் உயிரை நினைவுக்குக் கொண்டு வந்து உயிருடன் ஒன்றி... துருவ நட்சத்திரத்தின் உணர்வை உயிர் வழி கவர வேண்டும்.
நமக்கு முன் இருக்கும் ஆன்மாவிலே பலவிதமான உணர்வுகள் உண்டு. அதிலே தீமைகள் நமக்குள் புகாது தடுக்கும் நிலையாக
1.உயிர் வழி துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து இரத்தத்திலே கலக்கச் செய்து
2.இரத்தத்தின் வழி உடலில் உள்ள அணுக்களில் அதைப் பரவச் செய்யப்படும் பொழுது
3.துரிதமாக நம் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களுக்கு அந்தச் சக்தி கிடைக்கின்றது.
நம்மை அறியாது கோபப்படும் அல்லது வேதனைப்படும் செயல்களையும்... ஏன்... எதற்கு...? என்று அறியாதபடி செயல்படுத்தும் சில தவறுகளிலிருந்து மீட்பதற்குத் தான் இதை எல்லாம் மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்துகின்றோம்.
ஆகவே அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளை அடிக்கடி இரத்தங்களில் கலக்கச் செய்யப்படும் போது தீமைகளை அது ஏற்றுக் கொள்ளாது தடுக்கப்படுகின்றது.
1.நம்முடைய சிறுநீரகங்களும் (KIDNEY) துருவ நட்சத்திரத்தின் ஆற்றல் பெற்று
2.இரத்தங்களில் கலந்து வரக்கூடிய மாசுகளைத் தூய்மைப்படுத்தும் சக்தி பெறுகின்றது.
3.அப்போது நல்ல இரத்தம் இருதயத்திற்கும் செல்கின்றது... சிந்திக்கும் ஆற்றலும் வலுப்பெறுகின்றது.
வாழ்க்கையில் தெளிந்த மனம் பெறக்கூடிய உறுதி உங்களுக்குக் கிடைக்கின்றது.