இன்னொரு உடல் என்ற நிலையினைக் “கனவிலும் நினைக்க வேண்டாம்…”
இன்றைய உலக சூழ்நிலையில் எத்தகைய விஷத்தன்மைகள் வந்தாலும் அதை நீக்க அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நம் உடல் உறுப்புகள் அனைத்திலும் கலக்கப்படும் பொழுது விஷத் தன்மைகள் அடங்குகிறது. நம் அறிவு தெளிவாகின்றது.
இதைப் போன்ற உணர்வுகள் வளர்ச்சி அடையப்படும்பொழுது நம் உடலிலுள்ள அணுக்கள் அத்தனையுமே அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெறுகின்றது.
உடலை விட்டுச் சென்றால் உயிரைப் போல் உணர்வின் தன்மை ஒளியாக மாறுகின்றது. எந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெற்றோமோ அதன் உணர்வு உண்டு நம் உயிர் அங்கே அழைத்துச் செல்கின்றது.
1.வேதனைப்படுவோர் உணர்வுகள் நமக்குள் அதிகமானால் அல்லது
2.மந்திரித்து ஒரு தாயத்தைக் கொடுத்தால் அதன் மேலேயே எண்ணம் வருகிறது
3.இதைப் போன்று அது எவரிடத்திலிருந்து வந்ததோ அங்கே இந்த ஆன்மா செல்கின்றது.
இதைப் போன்று தான் நமக்குள் எத்தனையோ தீங்குகள் விளைகிறது.
இத்தகைய தீங்கு விளைவிக்கும் நிலையில் இருந்து தப்பி இந்த விஞ்ஞான உலகில் நச்சுத்தன்மையாகப் பரவிக் கொண்டிருக்கும் தருணத்தில்
1.நாம் எந்த நிமிடம் இந்த உடலை விட்டுச் சென்றாலும் பிறவி இல்லாத நிலை அடைதல் வேண்டும்.
2.இன்னொரு உடல் என்ற நிலையினைக் கனவிலும் நினைக்க வேண்டாம்.
இந்த உடலிலிருந்தே ஒளியாக மாறுவது தான் மனிதனின் கடைசி நிலை.
உயிரணு தோன்றி பூமிக்குள் வந்து மனிதரான பின் விஜயதசமி. விஜயம் செய்த இந்த உயிர் பத்தாவது நிலை அடையும் தகுதி பெற்றது.
பத்தாவது நிலையை அடையச் செய்யும் தன்மையாக நம் ஆறாவது அறிவு கார்த்திகேயா என்று அதனின் துணை கொண்டு நமது வாழ்நாளில் ஒவ்வொரு நொடியிலும் இங்கே யாம் (ஞானகுரு) பதிவு செய்த அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் கொண்டு வரும் தீமைகளை மாற்றிட வேண்டும்.
கையிலே அழுக்குப்பட்டால் நன்னீரை விட்டு எப்படிக் கழுவுகின்றோமோ துணியில் பட்டால் அழுக்கைச் சோப்பைப் போட்டு எப்படி நீக்குகின்றோமோ உடலில் உள்ள அழுக்கிப் போக்க எப்படிக் குளிக்கின்றோமோ அதைப் போன்று ஒவ்வொரு நிமிடத்திலும் உயர்ந்த சக்தி கொண்ட துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நுகர்ந்து நம் உடலுக்குள் செலுத்தி நம் ஆன்மாவில் உள்ள தீமைகளை அழுக்குகளை நீக்கிடல் வேண்டும்.
உடலுக்குள் தீமை புகாது சுத்தப்படுத்தித் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைப் பெருக்கி
1.இந்த உடலுக்குப் பின் பிறவி இல்லை என்ற நிலை அடைய
2.உங்களுடைய முழுமையான எண்ணங்களும் அதில் வர வேண்டும்.
குடும்பத்தில் கணவன் மனைவியும்… அகஸ்தியனும் அவர் மனைவியும் அவர்கள் எப்படி ஒருவருக்கொருவர் ஒன்றி வாழ்ந்தனரோ அதே போன்று… தன் கணவன் உயர வேண்டும் தன் மனைவி உயர்ந்த நிலை பெற வேண்டும் என்று எண்ணி இருவருமே எடுத்தல் வேண்டும்.
துருவ நட்சத்திரத்தின் பேரருள் என் கணவர் பெற வேண்டும் என் மனைவி வரவேண்டும் என்று எடுத்தாலே இந்த உணர்வுகள் உங்களுக்குள் வளர்ச்சி அடைந்து பல தீமைகளை நீக்கும் சக்தியாகப் பெருகும்.
ஒவ்வொருவரும் இதை மனதில் வைத்துச் செயல்படுத்துங்கள்.
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்ற வலுவைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.
2.ஏனென்றால் இது ஒரு பயிற்சி… தீமையை நீக்கும் உணர்வுகளைப் பயிற்சியாக இப்போது கொடுக்கின்றோம்.
3.அதை நீங்கள் வலுப்படுத்தி உங்கள் வாழ்க்கையில் செயல்படுத்துங்கள்.