ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 7, 2022

“பயிற்சி…” தியானம் மிக மிக முக்கியமானது

துருவ நட்சத்திரத்தின் சக்திகளைப் பெறுவதற்குண்டான முறைகள் “எத்தனையோ கொடுத்துள்ளோம்...!” பழக்கத்திற்காக வேண்டித் தியானம் எடுக்கவும் சொன்னோம். ஆனால் ஒரு சிலர் “அது எங்களால் எடுக்க முடியவில்லை ஒன்றும் புரியவில்லை...!” என்று சொன்னார்கள்.

ஆகையினால் அந்தச் சக்தி உங்களுக்கெல்லாம் கிடைக்க வேண்டும் என்பதற்காக நான் (ஞானகுரு) மௌன விரதம் இருந்து கடும் தவமிருந்து கொண்டிருக்கின்றேன்.

உங்கள் உடலில் உள்ள ஜீவணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று நான் உங்களை எண்ணித் தியானிக்கின்றேன்.
1.அப்போது அடிக்கடி நீங்களும் தியானித்தால்
2.துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியை உங்களுக்குள் பெருக்கிக் கொள்ளவும்
3.தீமை என்ற உணர்வு உங்களுக்குள் பரவாது தடுக்கவும்... உங்களைக் காத்துக் கொள்ளவும் இந்தச் சக்தி பயன்படும்.

பெரிய “சாமி” என்ற நிலையில் என்னை நீங்கள் பார்க்கலாம். நான் வாக்குகளாகச் சொல்லும் போது நீங்கள் அதைக் கேட்கலாம் அதன் மூலம் உங்கள் நோய்களும் நீங்கலாம்.. அல்லது கஷ்டங்களும் போகலாம்...!

அடுத்த கணம் அது வராது தடுக்கும் சக்தி “உங்களிடம் இல்லை...” என்றால்
1.என்னைப் பார்த்த பின்... அன்று ஒரு நாளோ அல்லது சில காலமோ வேண்டும் என்றால் உங்களுக்கு நிம்மதி கிடைக்கலாம்.
2.அடுத்தடுத்து வரும் மற்ற உணர்வுகளை நுகர்ந்தால் அவைகளின் வலிமை கூடி
3.நான் கொடுத்த வாக்கும் உங்களுக்குள் செயலற்றதாக மாறிவிடும்.

சிறிது காலம் தான் அது இருக்கும். பின் உங்கள் வாழ்க்கையில் எத்தனையோ நீங்கள் சந்திக்கின்றீர்கள். வெறுப்பு வேதனை சங்கடம் சஞ்சலம் வேதனை ஆத்திரம் பயம் இது போன்ற உணர்வுகள் அதிகரிக்கப்படும் பொழுது எனது வாக்கு எத்தனை நேரம் நிற்கும்...?

சாமியிடம் போனேன்... சந்தோஷம் கிடைத்தது... எனக்கு நல்லதாக ஆனது...! சாமியிடம் சென்றேன்... என் தொழில் நன்றாக ஆனது...! என்று நீங்கள் எண்ணலாம்.
1.ஆனால் நான் கொடுத்த பயிற்சியை மேற்கொண்டு...
2.அதைக் கடைபிடிக்க வேண்டும் அல்லவா...!

சந்தர்ப்பங்கள் வரும் பொழுது தீமைகள் புகாது அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் ஈஸ்வரா...! என்று புருவ மத்தியில் எண்ணி உங்கள் கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்தி... இதை வலு சேர்த்துப் பழகிக் கொள்ள வேண்டும்.

அப்படிப் பழகிக் கொண்ட பின்... அடுத்தடுத்து உங்கள் வாழ்க்கையில் எது நன்மையோ அதைப் பெற வேண்டும் என்ற உணர்வுகளை நீங்கள் கூட்டினால் தீமைகள் புகாது தடுக்கலாம்... அருள் ஞானிகளின் உணர்வுகளை உங்களுக்குள் பெருக்கலாம்.

சிந்தித்துச் செயல்படும் சக்தியும் பெறலாம்... அறியாது வரும் வேதனையோ கோபமோ சங்கடமோ அது எல்லாம் வராது தடுக்கவும் செய்யலாம்.

ஏனென்றால் தங்கத்தில் திரவகத்தை ஊற்றினால் செம்பு வெள்ளியும் எப்படி ஆவியாக மாறிப் பிரிந்து சென்று விடுகின்றதோ அது போன்று
1.தீய வினைகளை நீக்கிடும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்திகளை
2.உங்கள் உடலுக்குள் நீங்கள் அதிகமாகப் பாய்ச்சிப் பழகிக் கொண்டால் தான்
3.தீமைகள் வராது நீங்கள் தடுத்துக் கொள்ள முடியும்.