ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 30, 2022

நெற்றிக் கண்ணை நாம் திறக்க வேண்டும்

நண்பராகப் பழகுகிறோம். சந்தர்ப்பத்தில் அவன் தீங்கு செய்தான் என்றால் கண்களால் உற்று நோக்கி அதைப் பதிவாக்கி விடுகின்றோம். அதற்குப் பின் நினைவை நாம் செயல்படுத்தப்படும் பொழுது அந்த நண்பன் அமெரிக்காவில் இருந்தாலும் பதிவான உணர்வின் அலைகள் இதே காற்றிலே தான் உண்டு… அங்கே போய் அவனை இயக்கி விடுகிறது.

நாம் உபயோகப்படுத்தும் செல்ஃபோன்களில் பட்டனை அழுத்தியவுடன் இன்னார் பேசுகிறார் என்று தெரிகின்றது… அது எலக்ட்ரிக் எலக்ட்ரானிக்…! அதே போன்று
1.நமது உயிர் எலக்ட்ரிக்
2.நாம் நுகரும் உணர்வுகள் எலக்ட்ரானிக்
3.நாம் பார்த்த உணர்வுகள் ஊழ் வினை என்ற வித்தாகப் பதிவாக்குகின்றது.
4.அதில் எத்தனையோ எண்ணிலடங்காத வகைகளைப் பதிவாக்கலாம்.
5.பட்டனை அழுத்திச் செல்ஃபோனை இயக்குவது போல் பதிவானது அனைத்தும் அந்தந்தச் சந்தர்ப்பத்தின் அழுத்தத்திற்கொப்ப இயக்கும்.

வேறு ஒரு நண்பன் வருகின்றான் என்னப்பா...! உன் நண்பனை அமெரிக்காவில் பார்த்தேன்… அவன் நன்றாக இருக்கின்றான் என்று நம்மிடம் நினைவுபடுத்தினால் போதும்.

அவனா... துரோகி...! எங்கிருந்தாலும் அவன் உருப்பட மாட்டான்..! என்று அந்த உணர்ச்சிகள் இயக்கப்பட்டு உடனே சொல்கின்றோம்.
1.அங்கே அமெரிக்காவில் அவன் வாகனம் ஓட்டிக் கொண்டிருந்தால் இதே உணர்வு கிராஸ் ஆகி… சிந்தனை குறைந்து ஆக்சிடென்ட் ஆகும்
2.உணவு உட்கொண்டிருந்தால் புரை ஓடும்.
3.நடந்து சென்றாலும் மேடு பள்ளம் தெரியாதபடி கீழே விழுந்து விடுவான்.

அன்பால் பண்பால் பரிவால் நண்பன் என்று பழகுகிறோம். நமக்கு அவன் உதவி செய்தான் என்று எண்ணும் பொழுது அங்கே விக்கலாகப் பாய்கின்றது... அவனுக்கு நல்லதாகிறது.

கணவன் மனைவி பாசத்துடன் இருப்பார்கள். வீட்டிலே பையன் சொன்னபடி கேட்கவில்லை… குறும்புத்தனம் செய்கின்றான்… கணவர் வேலை பார்க்கும் இடத்தில் கஷ்டப்படுகின்றார் என்ற இத்தகைய சூழ்நிலையில்…
1.அங்கே தொல்லை படுத்துகின்றார்களே…! என்று மனைவி தன் கணவனை எண்ணினால்.
2.கணவன் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தாலும் இதே பாச உணர்வு அங்கே இயக்கப்பட்டு
3.மேடு பள்ளம் தெரியாதபடி ஆக்சிடென்ட் ஆகும்…. அல்லது வாகனம் வருவது தெரியாதபடி விபத்தாகும்.

இதெல்லாம் மனிதனுக்கு மனிதன் தொடர்பு கொண்டு இயக்கும் நிலைகள்…! பாசத்தாலும் இயக்குகிறது… பகைமையாலும் இயக்குகிறது…!

இப்படி
1.நம்மை அறியாது நம் உடலுக்குள் எத்தனையோ தீமைகள் இயக்கிக் கொண்டே தான் உள்ளது
2.அதனுடைய வலிமை கொண்டு நமக்குள் எத்தனையோ வகையான நோய்களும் வந்து கொண்டு தான் இருக்கின்றது
3.அந்த நோய்களால் நமக்குள் போர் நடந்து கொண்டே இருக்கின்றது
4.அதனதன் உணர்வுக்கொப்ப புறத்திலே நாமும் போர் செய்து கொண்டே தான் இருக்கின்றோம்.

இதைப் போன்ற நிலையிலிருந்து நாம் மீள வேண்டுமா இல்லையா…?

மீள்வதற்குத் தான் “கோடிக்கரை…” என்ற இந்தக் கடைசிக் கரையில் இருக்கக்கூடிய நாம்… அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று கண்ணின் நினைவை நம் உயிரான ஈசனிடம் வேண்டி அங்கே நிலை நிறுத்த வேண்டும்.

அதைத்தான் “சிவன் நெற்றிக் கண்ணைத் திறந்தால்… சுட்டுப் பொசுக்கி விடுவான்…!” என்று காட்டினார்கள் ஞானிகள்.

1.தீமை நீக்கும் உணர்வின் சக்திகளைக் கண்ணிலே கவர்ந்து உயிரிலே மோதச் செய்யும் பொழுது “உயிர் வழி அது கவரப்படுகின்றது…”
2.மூக்கு வழி வருவதில்லை… தீமை புகாது அங்கே தடைப்படுத்தி விடுகின்றது.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று புருவ மத்தியில் சிறிது நேரம் நிறுத்தி அந்த வலுவைப் பெற வேண்டும் என்று நம் எண்ணங்களைக் கூட்டிக் கொள்ள வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் இரத்த நாளங்களிலே கலக்க வேண்டும்… எங்கள் உடலில் உள்ள உறுப்புகள் முழுவதும் படர வேண்டும்… எங்கள் உடலில் எலும்புக்குள் இருக்கும் ஊனை உருவாக்கிக் கொண்டிருக்கும் அணுக்கள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்ற இந்த உணர்வின் தன்மையை உடலுக்குள் செலுத்திப் பழக வேண்டும்.

ஏற்கனவே முதலில் சொன்னது போல் கண்ணின் நினைவு காற்று மண்டலத்தின் வழி ஒருவரை ஒருவர் தாக்கி அது இயக்குவது போல்
1.துருவ நட்சத்திரத்தின் சக்தியை உய்ரி வழி கவர்ந்து எடுத்து
2.நம் கண்ணின் நினைவு கொண்டு உடலுக்குள் பாய்ச்சி…
3.போர் முறைகளை மாற்றிச் சமப்படுத்தும் சக்தியாகக் கொண்டு வர வேண்டும்.