ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 18, 2022

துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பெற இச்சைப்படுங்கள்

“இக்ஷ்வாகு வம்சம்...!”
1.உயிரின் தன்மை தான் இச்சைப்பட்டு
2.அதன் நிலையில் வளர்ந்தது தான் மனிதன் வரையிலும்.

புழு பூச்சி என்று பல கோடிச் சரீரங்களில் ஒவ்வொரு தீமையைச் சந்திக்கும் போதும் “அதிலிருந்து தான் தப்ப வேண்டும்” என்று இச்சைப்பட்டு அந்த இச்சைப்பட்ட உணர்வுக்கொப்ப மனிதனாக உருவாக்கியது “இக்ஷ்வாகு வம்சத்தின் உயிர்...”

ஆகவே இப்போது இச்சை எதிலே பட வேண்டும்...?

அகஸ்தியன் தாய் கருவிலே விஷத்தை நீக்கிடும் சக்திகளை சந்தர்ப்பத்திலே தான் பெற்றான். அவன் பிறந்த பின் எதிலே இச்சைப்பட்டான்...?
1.தீமையிலிருந்து விடுபட வேண்டும் தீமையிலிருந்து விடுபட வேண்டும் என்ற நிலையை.
2.தீமை என்ற உணர்வுகள் எது... எது... எது...? என்ற நிலைகளைக் கேள்விகளைக் கேட்டு
3.இந்தக் கேள்விகளுக்கு மத்தியிலே அகஸ்தியன் அறிந்தான்.

தாவர இனங்களுக்கு அதனுடைய உணவு எங்கிருந்து வந்தது...? துருவத்தின் வழியாக வந்தது...! என்று துருவத்தின் ஆற்றலை அறியத் தொடங்கினான்.

துருவத்திற்கு எது வருகின்றது...? 27 நட்சத்திரங்களின் உணர்வு தான் வருகின்றது... அதைச் சூரியன் கவர்கிறது. மற்ற கோள்கள் எதெனதன் உணர்வு பெற்றதோ அது அது உருவாகின்றது.

அதைப் போன்று தான்
1.நாம் நுகரும் (சுவாசிக்கும்) உணர்வுகள் இரத்தத்தில் கலந்தாலும்
2.உடலில் இருக்கக்கூடிய கல்லீரல் மண்ணீரல் நுரையீரல் இருதயம் சிறுநீரகம் பித்தசுரபி இவையெல்லாம்
3.இரத்தத்திலிருந்து வரக்கூடிய உணர்வைத் தான்... தன் தன் உணர்வை அதிலே வருவதை எடுத்து அவைகள் வளர்கின்றது.

ஆனால் நாம் சுவாசித்ததில் வேதனை என்ற உணர்வு அதிகரித்து விட்டால் வேதனையை உருவாக்கும் அணுக்கள் அதிகமாகி... உடலுக்குள் போர்முறையாகி... மனிதன் சிந்தனைகள் குறைக்கப்படுகின்றது. நம் உடலில் உள்ள உறுப்புகள் பாழாகின்றது.

இதே போல் தான் பிரபஞ்சத்திலும் சில கோள்கள் பாழாகி விடுகின்றது. பிரபஞ்சத்தின் இயக்கம் தடுமாற்றமானால் பிரபஞ்சத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நம் பூமியின் இயக்கத்திலும் மாற்றமாகி
1.தாவர இனங்களின் விளைச்சல் இங்கே குறைவாகும்.
2.தாவர இனங்களை உணவாகப் புசித்த மற்ற உயிரினங்களும் குறைவாகும்
3.இது அனைத்தும் மனிதனாக்கப்படும் பொழுது அவனுடைய சிந்தனைகள் குறையும் என்ற நிலையை
4.அன்றே அகஸ்தியன் உணர்ந்துள்ளான் அணுவின் இயக்கத்தை...!

ஆக... நம் பூமியின் துருவப் பகுதியின் வழியாகத்தான் அனைத்தும் வருகின்றது என்று உணர்ந்து கொண்ட அகஸ்தியன் தான் கண்ட பேருண்மையின் உணர்வுகளை வைத்துப் புது புதுத் தாவர இனங்களை உருவாக்கினான்.

அதை மனிதன் தனக்குள் சுவைத்து மகிழ்ச்சியாக வாழச் செய்யும் தாவர இனங்களாக உருவாக்கினான். அதே சமயத்தில் மற்ற உயிரினங்களைக் கொன்று புசிக்கும் பழக்கத்தை விடுத்தான்.

காரணம்... மற்ற உயிரினங்கள் விஷத்தைத் தன் உடலாக ஆக்கும் தன்மை பெற்றது. அவைகளைக் கொன்று புசித்தால் அதே விஷம் நம் உடலில் அணுக்களாகி உறுப்புகளாக மாறிவிடும்... மனிதனல்லாத நிலையாக உருவாக்கிவிடும் என்று உணர்ந்தவன் தான் அணுவின் இயக்கத்தை அறிந்த அகஸ்தியன்.

இதைப்போன்று துருவத்தின் ஆற்றலை தனக்குள் கண்டுனர்ந்து திருமணம் ஆன பின் அதையெல்லாம் தன் மனைவியிடம் சொல்கின்றான். ஆண் பெண் என்ற நிலையில் தான் உருவாக்க முடியும் என்று உணர்கின்றான்.

செடி கொடிகள் கல் மண் எதுவானாலும் ஆண் பெண் நட்சத்திரங்களுடைய உணர்வின் கலவைகளால் தான் உருவாகிறது என்பதை உணர்ந்தான்.
1.இந்தப் பிரபஞ்சத்தின் இயக்கத்தையே முழுமையாகக் காணும் திறன் பெற்றான்
2.நம் துருவத்தின் ஆற்றலை உணர்ந்து மக்களுக்கும் அதை எடுத்துக் கூறுகின்றான்... துருவனாகின்றான்.

திருமணமான பின் துருவ மகரிஷியாக மாறுகின்றான் தீமைகளை வென்றிடும் உணர்வு கொண்டு...
1.உயிர் எப்படி உணர்வின் அறிவாக இருக்கின்றதோ
2.உயிரைப் போலவே உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் அனைத்தையும் ஒளியாக மாற்றிக் கொண்டான்... கணவனும் மனைவியாக.

ஆண் பெண் என்ற நிலை இல்லை என்றால் எதுவுமே நடக்காது... அது வளர்ச்சி அடைய முடியாது.

இப்படி ஆனவன் தான் துருவத்தின் எல்லையில் நின்று... இந்த பிரபஞ்சத்திலும் சரி... மற்ற பிரபஞ்சத்திலிருந்து நம் பூமி கவரும் நிலைகளில் விஷத்தன்மைகள் வந்தாலும்... அதை எல்லாம் ஒளியாக மாற்றிக் கொண்டேயிருக்கின்றான் துருவ நட்சத்திரமாக.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பெறச் செய்வதற்கே இந்த உபதேசம்.