இரண்டாயிரம் சூரியக் குடும்பங்களில் ஒதுங்கிய (கழிவு) தூசி மண்டலங்களை “வால் நட்சத்திரம்...” (COMET) என்று சொல்வார்கள். வால் நட்சத்திரம் என்பது கடும் விஷத் தன்மை கொண்டது.
அது போகும் பாதைக்கு நேராக எந்தச் சூரியக் குடும்பம் வருகின்றதோ அதற்குள் அது கவரப்படுகின்றது. சூரியன் அதைக் கவர்ந்தால் பரிசுத்தப்படுத்தி பிரபஞ்சத்திற்குக் கொடுக்கின்றது.
ஆனால் பிரபஞ்சத்தில் அதைப் பரிசுத்தப்படுத்துவதற்கு முன் கோள்கள் ஊடுருவினால் பூமிக்குள் வந்து விடுகின்றது.
மற்ற கோள்களில் ஊடுருவினால் அந்தக் கோள்களில் திசை மாற்றம் ஆகின்றது. கோள்களுக்குள்ளும் மாற்றங்கள் ஆகின்றது. விஷத் தன்மைகள் பரவி விட்டால் அதன் ஓட்டத்தின் திசையும் மாறுகின்றது.
உதாரணமாக செவ்வாய்க் கோள் நாதகாரகன் என்றால் அதிலே இந்த விஷத் தன்மைகள் கவரப்பட்டால் அதே விஷத் தன்மைகளை அதுவும் கலந்து வெளிப்படுத்துகின்றது.
செவ்வாய்க் கோளிலிருந்து வருவதைச் சூரியன் கவர்ந்து பிரபஞ்சத்திற்குள் அனுப்பப்டும் பொழுது அதனின் உணர்வு நம் பூமியின் ஈர்ப்பிற்குள்ளும் வருகிறது.
1.செவ்வாய்க் கோளில் உருவான விஷத்தன்மை கலந்த அந்த நாதம் நம் பூமிக்குள் கவரப்படும் பொழுது
2.தீமையின் உணர்ச்சிகளைத் தூண்டும் நிலையாகப் பரவுகிறது.
3.செவ்வாய்க் கோளில் மாற்றம் ஆவதைத் தாவர இனங்கள் எடுத்துக் கொண்ட பின் எதிர் நிலையான உணர்வின் நாதங்களாக மாறி
4.தாவர இனங்கள் கடும் நோயாகி அது விளையும் தன்மையும் மாறுகிறது.
இதையெல்லாம் குருநாதர் தெளிவாகக் காட்டுகின்றார். சாப்பாடு ஞாபகத்திற்குப் போகாதபடி இந்தப் பிரபஞ்சத்தின் இயக்கத்தை முழுமையாக யாம் தெரிந்து கொள்ளும் வரையில் பட்டினியாக இருக்கச் செய்தார்.
எதை...?
பட்டினி என்றால்
1.இந்த உடலில் இருக்கக்கூடிய மனித உணர்வு கொண்ட நிலைகளைப் பட்டினியாகப் போட்டு
2.அந்த அருள் ஞானி அகஸ்தியன் கண்ட உணர்வினை நீ பெறு என்றார்.
3.அகஸ்தியன் தெரிந்து கொண்ட உணர்வினை நீ உணவாக உட்கொண்டால்
4.இருளை நீக்கும் அந்த அருள் சக்தி கிடைக்கும் என்ற நிலையை இப்படிக் கொண்டு வந்தார்.
சிவன் இராத்திரி என்று விரதம் இருக்கிறீர்கள் என்றால் நீங்கள் “நல்ல அணுக்களுக்குச் சாப்பாடு கொடுப்பதில்லை...!”
கஷ்டம் துன்பம் துயரம் என்ற தீமையான உணர்வுகளை உனக்குள் எடுக்காதபடி அந்த ஞானி கண்ட அருள் உணர்வை உனக்குள் எடுத்து வளர்த்துக் கொள்...! என்று குருநாதர் தெளிவாக்கினார்.
ஒரு கம்ப்யூட்டரை எலக்ட்ரிக் வைத்து இயக்கப்படும் போது உணர்வின் அதிர்வுகளை வைத்து நமக்கு வேண்டியதை எல்லாம் அதிலே பதிவாக்கித் தெரிந்து கொள்கிறோம்.
அதே போல நமது உயிரும் எலக்ட்ரிக்கை உருவாக்கிக் கொண்டுள்ளது.
1.இங்கே யாம் உபதேசிக்கும் போது கூர்ந்து கவனித்தால் உங்கள் கண்...
2.எலும்புக்குள் உள்ள ஊன்களில் அதைப் பதிவாக்கி அதன் உணர்வை இணைத்துக் கொண்டே உள்ளது.
உங்கள் கவனங்கள் யாம் உபதேசிப்பதைப் பெற வேண்டும் என்ற ஏக்க உணர்வுடன் இருந்தால் அது பதிவாகின்றது. மீண்டும் நீங்கள் நினைவாக்கப்படும் பொழுது அந்த மாமகரிஷி அகஸ்தியன் கண்டறிந்த உண்மையின் உணர்வுகளை... காற்றிலிருப்பதைக் கவரும் சக்தியாக உங்களுக்குள் வரும்.
எமது குருநாதர் எனக்கு (ஞானகுரு) எப்படிப் பதிவு செய்தாரோ அதைப் போல உங்களுக்குள்ளும் பதிவாக்குகின்றேன். மீண்டும் நினைவுக்குக் கொண்டு வரும் போது நீங்கள் எளிதில் அதைப் பெற முடியும்... நிச்சயம் பெறுவீர்கள்.
இன்று... இந்தக் காற்று மண்டலத்தில் நச்சுத் தன்மைகள் பரவி மனிதனின் சிந்தனை இழந்து... மனிதனுக்கு மனிதனே கொன்று குவித்து அதை ரசிக்கும் தன்மையாக வந்து விட்டது.
1.ஆனால்... நாம் அனைவருமே ஒருவருக்கொருவர் தொடர்பு கொண்டவர்கள் தான்
2.உலகில் படர்ந்து கொண்டிருக்கும் அந்தச் சிந்தனை இழந்த உணர்வுகள்
3.நம்மைத் தாக்காது இருக்க வேண்டும் என்பதற்குத் தான் இதைச் சொல்வது.