ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 15, 2022

எந்த மகரிஷியின் உணர்வை வலுப்படுத்துகிறோமோ அவருடன் நாம் இணைய முடியும்

 

ஒரு வேதனைப்படுவர் உணர்வை நாம் நுகரப்படும் பொழுது அது வாலி ஆகி... நம் நல்ல குணங்களைச் செயலற்றதாக மாற்றிவிடுகின்றது. நம் வலிமை இழககப்படுகின்றது

இதனை மாற்றுவதற்குத் தான் வாலியை இராமன் “மறைந்திருந்து தாக்கினான்..” இந்த நிலைகளைக் காட்டுகின்றார்கள்.

மறைந்திருந்து என்றால் இத்தகைய தீமைகளை வென்றவன் மகரிஷி. அந்த மகரிஷிகளின் உணர்வுகளை நமக்குள் எடுத்துக் கொண்டால் அந்த உணர்வின் வலிமை நமக்குள் கவரப்படும் பொழுது வாலி என்ற அந்த நஞ்சினை ஒடுக்க முடியும்...!

அதுதான் பரசுராம். அதனுடைய வலிமை எதுவாக இருப்பினும் தனக்குள் அடக்கித் தன் செயலாக மாற்றிக் கொள்ளும். அந்த நஞ்சினை இயக்குவதற்குப் பதில் தனக்குள் வலிமை கொண்டதாக மாற்றிவிடும்.

உதாரணமாக... விஞ்ஞான அறிவுப்படி செய்தாலும் சரி மெய்ஞான அறிவுப்படி செய்தாலும்
1.ஒரு நல்ல மருந்திற்குள் விஷத்தைச் சிறிதளவு கலந்து விட்டால்
2.அந்த மருந்திற்கு வீரிய சக்தி உண்டாகின்றது.

இந்த விஷத்தின் துடிப்பின் வேகத்தால் நல்ல மருந்து உடலுக்குள் ஊடுருவிச் செல்கிறது. நல்ல மருந்திற்குள் இந்த விஷத்தின் தன்மை சேர்த்தபின் உடலுக்குள் ஊடுருவி
1.வேதனைப்படும் இடங்களில் நல்லவைகளைக் கொண்டு குவிக்கின்றது.
2.நல்லவைகளை அங்கு அதிகமாக குவிக்கப்படும் போது
3.வேதனையை (நோய்) உருவாக்கும் அணுக்களுக்கு இரை இல்லாது தடைப்படுத்தி அந்த அணுக்களை மடியச் செய்கின்றது.
4.பின் அந்த நல்ல உணர்வின் சத்தை நல்லவைகளாக மாற்றி நோய்களை அகற்றுகின்றது.

வேதனையான உணர்வுகளை நாம் சுவாசிக்கும் பொழுது வேதனையின் அணுக்கள் உருவாகி நல்ல அணுக்களைக் கொன்று புசிக்கத் தொடங்கி விடுகின்றது. நல்ல அணுக்களால் உருவான உடலின் தன்மை நலியத் தொடங்கிவிடுகிறது.

ஆகவே... நாம் எப்போதெல்லாம் தீமைகளை பார்க்கிறோமோ அப்போதெல்லாம்
1.இந்தத் தீமைகளை வென்றிடும்... வென்றிட்ட... அருள் ஞானிகளின் உணர்வுகளை
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் என்ற எண்ணத்தை
3.அதனுடன் இணைத்துப் பழகினால்... தீமை நமக்குள் வளராது அதை அடக்கித் தனக்குச் சாதகமாக்கிவிடும்.

ஒரு விஷத்தின் தன்மை... தீமை என்று இருப்பினும் நல்ல மருந்துடன் அது இணைக்கப்படும் பொழுது அதை நல்லவையாக மாற்றிவிடுகின்றது.

இதைப் போன்றுதான் அருள் ஞானிகளின் உணர்வுகளை இந்த வாழ்க்கையில் எப்பொழுதெல்லாம் தீமைகளை பார்க்கிறோமோ அப்போதெல்லாம் அந்த துருவ மகரிஷிகளின் உணர்வை நுகர்ந்து பழகுதல் வேண்டும்.

நாம் நுகர்வது எதுவாக இருந்தாலும் முதலில் நம் உயிரிலே பட்டுத் தான் உணர்வுகள் கலக்கின்றது. அத்தகைய கலக்கும் இடத்தில்...
1.எப்போது தீமையைப் பார்த்தோமோ தீமையைக் கேட்டோமோ அந்த நேரங்களில் எல்லாம்
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று இணைத்தல் வேண்டும்.

அப்போது இரண்டும் இணைக்கப்படும் பொழுது தீமையை விளைவிக்கும் அணுக்கள் விளையாது தடுக்கப்படுகின்றது.

ஆனால் மகரிஷிகளின் உணர்வுகள் நமக்குள் விளையும். இது சமப்படுத்தும் உணர்வாக நம் உடலில் உருவாகி
1.எந்த ஞானியின் உணர்வை நாம் வலுப்பெறுகின்றோமோ
2.அங்கே அவனிடம் நம்மை அழைத்துச் செல்லும்.