ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 18, 2022

மனிதன் இன்பமாக இருக்க...வேண்டும் என்றால்… அதை மெய் ஞானத்தால் தான் பெற முடியும் - ஈஸ்வரபட்டர்

 

இங்கே உணர்த்தப்படும் உண்மை மெய் ஞானத்தை... மனிதன் பெற வேண்டிய உண்மைச் சக்தியின் வளர்ச்சி நிலையை... ஒவ்வொருவரும் பெறல் வேண்டும்.

பூமியின் சுழற்சியும் பூமியின் வளர்ச்சியும் பூமியின் பல கோடி வளர்ப்பு நிலையில் ஜீவ பிம்பம் நிலை பெற்ற உணர்வுகளில் மனிதனுக்குக் காட்டப் பெற்ற உயர்வு சித்தம் என்பது அன்றிருந்த மனிதர்கள் சைவ சித்தாந்தத்தை மனிதர்களுக்கு உணர்த்தியது தான்...!

இயற்கையின் உண்மைகளை அறிய மனிதர்கள் உணர்வின் ஒட்டத்தில் ஜீவ வாழ்க்கைக்கு ஆறறிவின் முதிர்வை மெய் ஞானம் கொண்டு சித்தத்தை அறிய... சைவ சித்தாந்தத்தில் உண்மைகள் வடிக்கப் பெற்றது.

1.உயிரணுவின் உணர்வை உயர்த்தக்கூடிய ஒலி ஒளி நீரைக் கொண்டு
2.எடுக்கும் எண்ணத்திற்கு எண்ணம்தான் உணர்வாகி... உணர்வு தான் ஆத்மாவின் வலு என்பதனை உணர்ந்து
3.தெய்வ குணங்களை வணங்கும் எண்ணத்தை வழிகாட்டிய முறை நான்கு வேதங்களாய் பிரிக்கப்பட்டு
4.மந்திர ஒலிகள் ஜெபிக்கப்பட்டு மந்திர ஒலிகளுக்கு வலுவாக்க வேள்விகளை நடத்தி
5.அதிலிருந்தே மனிதனை மனிதனே உயர்த்தி... தாழ்த்தி... வழி வந்ததின் வழியினை
6.நாம் இன்று நம் சிந்தனையில் உணர்ந்திடல் வேண்டும்.

இன்றைய விஞ்ஞானத்தில் வளர்த்துக் கொண்ட முறைகள் எல்லாமே மனிதனுடைய தேவையின் அடிப்படையில் “உடலின் சுகத்திற்கே” முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கின்றது.

இந்த விஞ்ஞானத்தின் கதியால் மனித உணர்வு உயர்வு எங்கிருக்கின்றது...? என்பதை மனிதன் மெய் ஞானத்தில் உணரவில்லை.

அணு ஆயுதங்களும் இன்று விஞ்ஞானத்தில் சுகம் கொள்ளும் ஒலி ஒளி யாவையுமே இவ்வுடலின் தேவைக்குத்தான் உள்ளது. மனித விஞ்ஞானம்... மருத்துவம்... யாவையுமே உண்ண... உடுக்க... இருக்க... உடலின் தேவைக்கு சுகம் பெற வேண்டியதாகத் தான் உள்ளது.

1.ஆனால் மனித ஜீவ வாழ்க்கையில் மலர வேண்டிய...
2.மெய் ஞானத்தால் மனிதன் பெறக்கூடிய உண்மையை உணர்ந்தோமா...?

இந்த உடலுக்கு என்று சுகம் காண... மனித ஞானம் எல்லாமே விஞ்ஞானம் கண்டு... அதனால் விபரீத சுகமாக அல்லவா... இன்று நடக்கும் கலியில் சுகம் காணும் நிலை...!

உடல் வாழ்க்கை உள்ள வரைக்கும்... இன்ப வாழ்க்கை இனிது நடக்க... மனித உணர்வின் தேவை என்பது “செயற்கையிலேயே ஒன்றி விட்டது...” இயற்கையின் வித்தாக இருந்த உலகத்தை மாற்றும் வழியாகவே மாறி விட்டது இன்றைய நிலை.

எந்தச் சுகத்தைப் பெற மனித உணர்வின் வேகம் விஞ்ஞானத்தில் சென்றதோ... அவை எல்லாம் செயற்கையின் குறுகிய கால சுகம் தான்..!
1.மனித வாழ்க்கையில் உணர்வின் குணத்தைச் சமம் கொண்டு
2.மெய் ஞானத்தை உணரும் ஆத்ம பலம் பெறும் சுகம் ஒன்றே
3.ஏகாந்தத்தில் உணரும் ஏகாந்த சுகம்.

உயிர் பெற்ற ஜீவ ஆத்மாவின் முதிர்வு கொண்ட மனித உயர்வை... மெய் ஞானத்தால் மனிதனுக்கடுத்த தெய்வ குணங்களால்... தெய்வச் செயலைத் தன் சித்தத்தின் சித்தாக்கிக் கொண்டால் பிறப்பின் முதிர்வுக்கு அடுத்த நிலையான... “பறக்கும் நிலையை” மனிதன் என்றோ பெற்றிருக்கலாம்..!

மனிதனின் உணர்வில் இனிமையை ரசிக்க... இன்பமாய் இருக்க...வேண்டும் என்றால் அது... மெய் ஞானத்தின் சித்தத்தால் தான் பெற முடியும்.

1.இன்று செயற்கையில் காணும் நிலை யாவையுமே குறுகிய கால நிலை தான்
2.வழியறிந்து வளரும் நிலை “உண்மையின் சக்தி நிலை” பெறுவது ஆகும்...!