ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 21, 2022

எனக்கு அது தேவை… இது தேவை… என்று உயிரிடம் கேட்கக் கூடாது…!

 

மனிதனுடைய வாழ்க்கையில் பலருடைய எண்ணங்களையும் இன்று நாம் அறிந்து கொள்கின்றோம்… பலராமன்…! அதே சமயத்தில் தீமையின் நிலைகளை மாற்றி அமைக்கும் சக்தி நாக்கு இருப்பதனால் நரசிம்மா...!

1.எதனையும் உட்புகாதபடி வாசல்படி (சுவாசம் உட்புகும் இடம்) மீது அமர்ந்து…
2.தீமைகள் வராதபடி ஒவ்வொன்றையும் தீமையை இங்கேயே பிளந்து விடுகின்றான்…
3.உள்ளுக்குள் சென்றால் தானே தீமையின் நிலைகள் வரும்.

ஆகவே அந்த மகரிஷியின் அருள் சக்தியைத் தனக்குள் ஒவ்வொரு நிமிடமும் நாம் செலுத்தப் பழகிக் கொள்ள வேண்டும்.

ஒருவன் தீமை செய்கிறான் என்று தெரிந்து கொள்கின்றோம். ஆனால் தீமை செய்வான் என்று முதலிலேயே பதிவு செய்து கொண்டால்
1.அந்த தீமையை அடக்க மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்
2.என் பார்வை எல்லோரையும் நல்லவராக்க வேண்டும்.
3.என்னைப் பார்க்கும் பொழுது அவர்களுக்கு நல்ல எண்ணம் வர வேண்டும் என்ற உணர்வினை
4.நமக்குள் நாம் ஆழமாகப் பதித்து விட்டால்…
5.அவர்கள் தீமை செய்தாலும் இங்கே நமக்குள் பதிவாகாது... அதை ஈர்க்கும் தன்மையும் வராது.

காரணம்… ஞானிகளின் உணர்வுகளைத் தனக்குள் வலுப் பெறச் செய்யும் பொழுது அந்தத் தீமை நம்மை இயக்காது. நம்மைப் பார்க்கும்போது பிறருடடைய தீமையின் உணர்வுகளை இது அடக்கும்.

இதைத்தான் “நீ விழித்திரு…” என்று சொல்வது.

1.எந்த நேரத்திலும்… எதனின் நிலைகள் கொண்டாலும்… நாம் ஒவ்வொரு நிமிடமும்
2.நம்மை ஆண்டு கொண்டிருக்கும் ஆண்டவனான உயிரிடம்
3.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று இங்கே வேண்ட வேண்டும்.
4.இந்த உணர்வு உடல் முழுவதும் படர வேண்டும் என்று பரப்ப வேண்டும்.

“அப்பொழுது அவன் (உயிரான ஈசன்) பார்த்துக் கொள்வான்...!”

அதை விடுத்துவிட்டு…
1.எனக்கு இது தேவை… அது தேவை…! என்றும்
2.இன்னாருக்கு நல்லதைச் செய்தேன். அவன் எனக்குத் தீமைதான் செய்கிறான் என்று எண்ணினால்
3.நம்மை இருள் சூழ்ந்த நிலைகளுக்கே அழைத்துச் செல்லும்.

ஆகையினால் நாம் எந்த நல்லதைச் செய்கின்றோமோ அந்த நல்ல உணர்வுகள் அங்கே விளைதல் வேண்டும். அப்படி நல்லது விளைய வேண்டும் என்றால் “அந்த மகரிஷிகள் சக்தி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா…!” என்ற இந்த உணர்வினை வலு சேர்த்துக் கொண்டால் நமக்குள் தீமை விளையாது.

நம்மைப் பார்க்கும் பொழுதே அந்தத் தீமை விளைவிக்கும் உணர்வுகள் அங்கே ஒடுங்கும். இது தான் நரசிம்மா…!

வாசல்படி மீது. நமக்குள் நுகரும் சக்தி இங்கே வராதபடி இதைத் தள்ளிவிட்டால்
1.அந்தத் தீமை விளைவிக்கும் எண்ணங்கள் வராது
2.தீமையை விளைவிக்கும் அருள் வித்து இங்கே உருவாகாது
3.அந்த வினையாக வராது… வினைக்கு நாயகனாக இயக்காது...!

அது தான் கோதண்டத்தை முறித்தபின் “சீதா…” என்ற மகிழ்ச்சியைத் திருமணம் செய்து கொண்டான் கல்யாணராமா...!

தீமைகளை அடக்கிடும் அந்த மெய் ஞானியின் உணர்வைத் தனக்குள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
1.அந்த அரவணைக்கும் சக்தியை நுகர்ந்து... அருள் ஞானிகளுடன் சேர்ந்து…
2.என்றுமே மனிதன் என்ற நிலைகள் முழுமை அடைந்து… மெய் ஞானிகளுடன் ஒன்றி
3.பிறவியில்லாப் பெரு நிலையை நாம் அடைய முடியும்.