ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 23, 2022

விண்ணுலக ஆற்றலைப் பெற்றால் தான் வளர்ச்சி - ஈஸ்வரபட்டர்

 

மனிதனின் செயலில் பல விநோத உண்மைகளை வளர்த்துக் கொண்டுள்ளான். “மனித விஞ்ஞானம்” பல உண்மை நிலைகளைச் செயல்படுத்தும் நிலையில்... இன்று நாம் பல நிலைகளைக் காண்கின்றோம்.

தனக்கு மேல் வீரியத் தன்மை கொண்ட பல உண்மைகளை அதற்குகந்த பாதுகாப்பு செயல் திறமையுடன்... இன்றைய மனிதனின் விஞ்ஞானம் எப்படி முன்னேற்றம் கண்டுள்ளது...?

வீரிய சக்தி கொண்ட மின்சாரத்தைத் தன் செயலுக்கு மனிதன் உபயோகப்படுத்துகின்றான். அதைச் செயல்படுத்துவதற்கு அதற்குகந்த பாதுகாப்பு நிலையில்
1.எது எதில் அந்த மின்சாரம் பாயும் தன்மை கொண்டுள்ளது என்று கண்டறிந்து...
2.அதனுடைய வீரியத் தன்மையைத் தன்னுடைய செயல் தன்மைக்கு
3.அதையே பக்குவப்படுத்திப் பலன் காணுகின்றான்.

இது எல்லாமே இவ்வுடலின் வாழ்நாளைக் கருதி வளர்த்துக் கொண்ட வழிமுறைகள் தாம்.

மனித உணர்வின்... எண்ண வீரியத்தின் ஒலியை இன்றைய மனிதன் உணர்ந்தானானால்... தன் உணர்வின் ஒலி கொண்டு ஒளிரும் நிலையைத் தன் வலுவில் வளர்க்கும் வளர்ச்சியை வளர்த்துக் கொள்ள முடியும்.

நம் பூமியின் ஓட்டத்தில் பல கோடி மைல்களுக்கு அப்பாலுள்ள சூரியனின் ஒளியை நம் பூமி “தன்னுடைய சுழற்சியின் ஜீவ ஓட்ட ஈர்ப்பின் ஒளியால்” ஒளி பெறுகின்றது.

அதைப் போன்றே தன் ஓட்ட கதியில் நட்சத்திர ஒளிகளையும் சந்திரனின் ஒளி அலையையும் தன் ஓட்டத்தில் தொடர்பு கொள்ளும் மற்றக் கோள்களின் சந்திப்பில் அந்தந்தக் காலங்களில் அவ்வொளியின் ஒலியை நம் பூமி சந்தித்துக் கொண்டே ஓடுகின்றதல்லவா...?

நாம் இன்று காணும் நட்சத்திரங்களின் ஒளியையும் சூரியனின் ஒளியையும் சந்திரனின் ஒளியையும் பூமி தன் ஜீவகாந்த ஒளியின் சுழற்சியில் ஒளி பெற்று தன்னுடைய சுழற்சியின் ஈர்ப்பில் சந்திக்கும் அவைகளின் தொடர்பலையின் அமிலத்தின் ஒளித் தன்மையில் ஒன்றின் தொடர் கொண்டு ஒன்று பெற்று வளர்கிறது.

மனிதப் பிறப்பிற்கு ஜாதகத்தில் நட்சத்திர ராசிகளை அந்தந்த நேரத்திற்கொப்ப பிறக்கும் குழந்தைகளுக்கு எப்படிக் கணிக்கின்றார்களோ அதைப் போன்றுதான் இன்று நம் பூமியில் பல நிலைகள் (அது சந்திக்கும் நிலையில்) வளர்ந்துள்ள வளர்ச்சியின் தன்மையும்.

ஆனால் இதை எல்லாமே பூமியின் சுழற்சி ஓட்ட கதியில் சந்திப்பின் தொடரில் வளர்ந்த “இயற்கையின் வளர்ச்சி” என்கின்றோம். ஆனாலும் அதே இயற்கையை... மனிதன் தன் செயலுக்குப் பல நிலைகளை வகுத்துக் கொள்கின்றான்.

ஆகவே பூமியில் ஜெனித்த மனிதன் இயற்கையைத் தன் செயலின் தொடரில் செயலாக்கும் “விந்தைதனை” தன் உணர்வின் எண்ணத்தால் “மெய்ஞானத் தொடர் கொண்டு வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்...”

ஏனென்றால் இப்பூமியின் ஜெனிப்புத் தொடர் அலை ஈர்ப்பு... இப்பூமியில் வாழும் காலத்திற்குத்தான் பயன்படும். உடலை விட்டுப் பிரிந்தால் மீண்டும் தேய் பிறை தான்.

உணர்வின் எண்ணத்தின் ஓட்டத்தை மற்றக் கோள்களின் தொடர்புடன் எண்ணி எடுக்கும் ஒலி அலையால்... இஜ்ஜீவ காந்த சரீர ஓட்டத்தில் எண்ணி எடுக்கும் அலையின் தொடர் அமில குணத்தை...
1.இச்சரீர உணர்வின் தொடரில் வளரும் உயிர் காந்த ஒளி அலையின் தொடர்பால்
2.இச்சரீரத்தை இயக்கும் ஆத்ம ஒளி ஒளிரும் தன்மையை
3.இவ்வெண்ணத்தில் எடுக்கும் தொடர்புபடுத்தி வலுப்படுத்திக் கொள்ளலாம்.

நம் பூமியின் ஓட்டத்தினால்தான் சூரியனின் ஒளியையும் மற்றக் கோள்களின் ஒளியையும் பூமி பெறுகின்றது.

அதைப் போன்று ஜீவகாந்த சரீர உயிர் எண்ண ஓட்டத்தால்... நாம் எண்ணி எடுக்கும் எக்கோள்களின் ஒளி அமிலத்தையும்... இச்சரீர உணர்வில் பதிவாக்கும் வலுவினால்...
1.இது வரை ஆத்மாவின் ஒளி வட்டம் வளர்ந்த நிலையை வலுவாக்கும் வழிமுறையில்
2.தியானம் கொள்ளும் வலுவால் இச்சரீரத்தின் ஆத்ம உயிர் வலுவாகும் ஒளியை நாம் காணலாம்.