ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 21, 2020

அழியக்கூடிய உடலுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை... “அழியாத உயிருக்கு” நாம் கொடுப்பதில்லை

இன்றைய வாழ்க்கையில் நோயை நீக்க மருத்துவமனைக்குச் சென்றாலும் அங்கே இன்னொரு விஷத்தின் தன்மை கொண்ட மருந்துகளைக் கொடுக்கப்படும்போது அதில் உள்ள விஷமும் நமக்குள் சேர்ந்து விடுகின்றது.
 
இப்படி மனிதன் நோயை நீக்கப் பல உபாயங்களைச் செய்தாலும் இந்த விஷத் தன்மைகள் கொஞ்சம் கொஞ்சமாக நம் உறுப்புகளைப் பாழாக்கிக் கொண்டுதான் இருக்கின்றது.
 
ஆக... கொஞ்ச காலம் வாழ்வதற்காக நாம் எத்தனையோ உபாயங்களை வைத்துச் செயல்படுத்துகின்றோம்.
 
மனிதன் உறுப்புகள் செயலிழந்து விட்டால் நுரையீரலில் இருந்து எல்லா ஈரல்களுக்கும்.. கிட்னி... இருதயம்... போன்றவைகளையும் மாற்று உறுப்புகளை வைத்து மனிதனை வாழ வைக்க முடியும்...! என்று விஞ்ஞானி செயல்படுத்துகின்றான்.
 
ஒரு எலும்பே இல்லை என்றாலும் அந்த எலும்பைப் போல இன்னொரு உடலில் அந்த எலும்பை உருவாக்கும் அணுக்களை வைத்து மோல்ட் (அச்சு) செய்கின்ற மாதிரி செய்து மனிதனுக்குத்தக்க எலும்புகளை உருவாக்கி... கை கால்களுக்கோ மற்ற இடங்களுக்கோ அதைப் பொருத்தி மீண்டும் சாதாரண மனிதனைப் போல வாழச் செய்ய முடியும்...! என்று விஞ்ஞானிகள் செயல்படுகின்றனர்.
 
ஏனென்றால் எலும்புகள் உருவாக்கிய அணுக்களை வைத்து மீண்டும் அதைப் பெருக்கப்படும் பொழுது அந்த மலம் உருவாகின்றது. அப்படி வளர்த்து மீண்டும் பொருத்துகின்றான்.
 
பண வசதி உள்ளவர்கள் இதைப் போல் பல லட்சம் செலவழித்து அதை எடுத்துப் பொருத்திக் கொள்கின்றனர். ஆனால் அப்படிப் பொருத்தினாலும்...
1.அங்கங்களை இழந்த நிலையை எண்னும் போது
2.மற்றவர்கள் எல்லாம் சுயமாக இருக்கப்படும்போது நமக்கு  மட்டும் இப்படி ஆகிவிட்டதே என்று
3.மீண்டும் அந்த நோயின் உணர்வுகள் கிளர்ந்து வருகிறது.
 
இதைப் போல் தொடர்ந்து வரும் போது அதௌ முழுமையாக நீக்கும் திறன் இல்லை.
1.செல்வத்தைச் செலவழித்து. உறுப்புக்களை மாற்றி அமைத்தாலும்...
2.உடலில் வரும் அந்த வேதனை உணர்ச்சிகள் (வேதனை என்றாலே நஞ்சு) 
3.உடலை விட்டுச் செல்லப்படும்போது... உயிருடன் சேர்ந்தே செல்கின்றது.
 
சேர்த்துக் கொண்ட இந்த வேதனைக்கொப்ப மாற்று உடலாக மற்ற உயிரினங்களாக உருவாக்கி விடுகின்றது நம் உயிர்.
 
ஆனால் நாம்... ஒவ்வொரு சந்தர்ப்பத்திலேயும் இத்தகைய விஷத் தன்மைகளை எல்லாம் நீக்கிய துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகர்ந்து நம் உடலில் பதிவாக்கிக் கொண்டால்
1.நமது வாழ் நாளில் தீமைகளைக் கண்டாலும் உடனே அதைத் தடுத்து
2.நல்ல உணர்வாக அந்த அணுக்களையே மாற்றிவிட முடியும்.
 
இன்று எப்படி விஞ்ஞானி இந்த உறுப்புக்களின் தன்மையைப் பெற்று அந்த எலும்பையே உருவாக்கச் செய்கின்றானோ இதைப்போல நல் அணுக்களைப் பெருக்கி அதைச் சீராக்க இயக்கிட முடியும்.
 
உறுப்புகளை உருவாக்க முந்தி மற்ற பொருள்களால் செய்து வைத்தான். இப்பொழுது அதே போல் உறுப்புகளையே உருவாக்கிச் செயல்படும் நிலைகளை வைத்து கொள்கின்றான்.
 
மனிதனின் மேல் தோல் பாழாகிவிட்டால் அதைப் போல் தோலை உருவாக்கும் அணுக்களை வைத்து வளர்த்து மீண்டும் அழகான உடலாகவும் உருவாக்கும் நிலையைச் செய்கின்றான்.
 
1.ஆனால்.. இந்த உயிரைப் போல (அழியாத) உணர்வின் தன்மை உருவாக்கும் செயல் விஞ்ஞானியிடம் இல்லை.
2.உடலைக் காக்கப் பல முறைகள் கொண்டு விஞ்ஞானி செயல்படுத்தினாலும்
3.வேதனை உணர்வுகள் மனிதனுக்குள் வளர்ந்து கொண்டுதான் இருக்கின்றது.
4.உடலுக்கு பின் சேர்த்து கொண்ட வேதனைக்கொப்ப இந்த உயிர் மாற்று உடலை உருவாக்கி விடுகின்றது.
 
இதிலிருந்து யாரும் தப்ப முடியவில்லை.
 
நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் நாம் அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பதிவாக்கிக் கொண்டால்... நாம் அந்த நினைவினை அடிக்கடி எடுக்கப்படும் பொழுது...
1.ஒரு கஷ்டப்படுவோரோ வேதனைப்படுவோரோ துயரப்படுவோரோ... அல்லது
2.ஒருவர் நம்மிடம் பழகி உடலை விட்டு அவர் பிரியும் போதோ அந்த நேரமெல்லாம்
3.அதைத் தடுக்க ஈஸ்வரா என்று கண்ணின் நினைவினைப் புருவ மத்தியில் நாம் வைத்து
4.அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று
5.உயிர் வழியாகக் கவர்ந்து நம் உடலுக்குள் கண்ணின் நினைவைக் கொண்டு செலுத்தி
6.நம் உடலில் உள்ள அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் சக்தி பெற வேண்டுமென்று உள் முகமாகப் பாய்ச்சப்படும்போது
7.அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றல் நம் இரத்தத்தில் பெருகி தீமையான அணு உருவாகாதபடி தடுக்கின்றது.
 
அதே சமயத்தில் துருவ நட்சத்திரத்தின் சக்தி நம் உடலில் உள்ள அணுக்களுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கின்றது. ஒளியான உணர்வாக மாறுகின்றது.
 
வாழ் நாளிலே எத்தனை கோடித் தவறுகளை நாம் பார்த்தாலும் அந்தந்தச் சமயத்தில் எல்லாம் துருவ நட்சத்திரத்தின் பேரருளை பெற வேண்டுமென்று உள்ளுக்குள் செலுத்தி அதைத் தூய்மைப்படுத்திக் கொண்டே வர  வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை வலு சேர்த்துக் கொண்டே வர வேண்டும். எந்த நேரத்தில் உடலை விட்டுப் பிரிந்தாலும் நம் உயிரான்மா துருவ நட்சத்திர ஈர்ப்பு வட்டத்திற்குள் செல்லும். அழியாத நிலைகள் பெறலாம்.