நம்முடைய அம்மா அப்பா தான் நாம் மனிதனாக உருவாகக் காரணமானவர்கள். தெய்வமாக நம்மைக் காத்து இது வரை நமக்கு நல்வழியைக் காட்டி அவர் வழியிலே வளர்ந்தவர்கள்தான் இந்த ஞானத்தை உணரும் சக்தியும் இன்று பெறுகின்றோம்.
ஆகவே அம்மா அப்பா அருளால் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருளால் அவர் வழியில் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமான அதனின்று வரும் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஒரு நிமிடம் ஏங்கித் தியானியுங்கள்.
துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவை துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி அதனின்று வரும் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.
1.கண்ணின் கருமணி வழியாக அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளையும் பேரொளியையும் எண்ணி
2.அந்தச் சக்தியை அது ஈர்க்கும் சக்தி பெறும் போது கருமணிகளில் அந்தக் கனமான ஒரு உணர்வுகள் வரும்.
அடுத்து உங்கள் புருவ மத்தியில் ஈசனாக இருந்து இயக்கிக் கொண்டிருக்கும் உங்கள் உயிரின் பால் கண்ணின் நினைவைச் செலுத்துங்கள்.
கண்ணை மூடுங்கள். கண் வழியாகக் கவர்ந்ததை உயிர் வழியாக (புருவ மத்தி) துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.
1.புருவ மத்தி வழி அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை ஈர்க்கும்போது
2.அந்த உயிரின் இயக்கம்… துருவ நட்சத்திரத்தின் வலுவை அப்படியே பெறும்போது
3.உங்களுக்குள் ஈர்க்கும் சக்தி அதிகரிக்கும்…!
4.துருவ நட்சத்திர உணர்வுகள் புருவ மத்தியில் நேரடியாக மோதும் போது
5.அந்த உணர்ச்சிகளின் அழுத்தமும்… ஒளிக்கற்றைகளின் வெளிச்சமும் தெரியும்.
இவ்வாறு ஒரு நிமிடம் எண்ணி ஏங்கினால் நம் உடலுக்குள் புகும் தீமைகளை எல்லாம் விலக்கிவிடும். அதே சமயத்தில்
1.உடலுக்குள் தீமையை விளைய வைக்கும் அணுக்களுக்கு
2.தீய உணர்வுகள் உட்புகாது இப்பொழுது தடைப்படுத்துகின்றோம்.
அதாவது நம் உடலுக்குள் தீய உணர்வுகள் சென்று தீய அணுக்கள் வளராது தடுக்கின்றோம்.
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் இரத்த நாளங்களில் உள்ள ஜீவணுக்களும் ஜீவான்மாக்களும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் ஈஸ்வரா..! என்று கண்ணின் நினைவினை இரத்தத்தில் செலுத்தி இரத்த நாளங்களிலும்… அந்த இரத்த நாளங்களில் இருக்கும் ஜீவ அணுக்களும் ஜீவான்மாக்களும் அந்தச் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.
இப்பொழுது கண்கள் மூலமாக இந்த உணர்வின் தன்மை வலுப்பெறும் போது…
1.இரத்தங்களில் தீமையை உருவாக்கும் கரு முட்டைகளோ அல்லது நோயாக மாறும் அணுக்களோ எது இருப்பினும்
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெறும்போது நல்ல அணுக்களாக மாற்றும் சக்தி பெறுகின்றது
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் உள்ள உறுப்புக்களை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்
இப்பொழுது கண்ணின் நினைவினை உங்கள் உடல் உறுப்புக்களை உருவாக்கிய அணுக்களில் செலுத்தி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளை அதைக் கவரும்படி ஏங்கித் தியானியுங்கள்.
இப்பொழுது அந்த உடல் உறுப்புகளுக்குள் அந்த அணுக்கள் துருவ நட்சத்திரத்தின் பேரருளை பெறும்போது உங்கள் உடல் முழுவதற்கும் ஒரு புது நல்ல உணர்ச்சிகள் ஏற்படும். இதை நீங்கள் உணரலாம்.
ஏனென்றால் இந்தப் பயிற்சி மூலம் உங்கள் உடல் உறுப்புகளான சிறு குடல் பெரும் குடல்.. கணையங்கள்.. கல்லீரல் மண்ணீரல்… நுரையீரல்… சிறுநீரகங்கள்… இருதயம்… கண்களில் உள்ள கருமணிகள்… நரம்பு மண்டலம்… எலும்பு மண்டலம்.. விலா எலும்புகள்.. குருத்தெலும்பு… எலும்புக்குள் உள்ள ஊண்.. தசை மண்டலம்… தோல் மண்டலம்… அதை உருவாக்கிய எல்லா அணுக்களும் அந்தத் துருவ நட்சத்திரத்தை ஈர்க்கும் சந்தர்ப்பத்தை உருவாக்குகின்றேன் (ஞானகுரு).
இந்தத் தியானத்தைப் பயிற்சியாக எடுத்துக் கொள்ளுங்கள்...!