ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 20, 2020

மனிதனின் எண்ண வலிமை... எண்ண உறுதி... கொண்டு எதைப் பெற வேண்டும்...?

மிருகங்களெல்லாம் என்ன செய்கின்றது...? தன் உடல் வலுவைத் தான் காட்டுகிறது.
 
நான் (ஞானகுரு) வேட்டைக்குப் போயிருக்கின்றேன். புலி கடினமானது அதை ஈட்டி வைத்துக் குத்த முடியுமோ... முடியாது...!
 
நல்ல கூர்மையான ஈட்டி வைத்துக் கொண்டு புலி அப்படி வருகின்றதென்றால் ஒரு பக்கமாகப் பம்பும். பம்பியவுடன் நாம் என்ன செய்ய வேண்டும்...?
 
நம் பார்வைக்குத் தாக்க வரும்போது இப்படி நேராக வைத்தால் சீறித் தாக்கும்.
 
ஆனால் இலேசாகச் சாய்த்து வைத்தால் போதும். மேலே வந்தவுடன் அது லபக்... என்று ஊடுருவிவிடும். விட்டுவிட்டோம் என்றால் தய்யா... தக்கா... என்று குதிக்கும்.
1.மனிதன் தன் எண்ண வலு கொண்டு... உறுதி கொண்டு
2.அந்த ஈட்டியை வைத்தான் என்றால் புலியைக் கொன்று விடலாம்.
 
புலி உடல் வலு கொண்டு தான் தாக்கும். மனிதனை ஒரு அடி அடித்தால் குடல் எல்லாம் பிய்த்துக் கொண்டு போட்டுவிடும்.
 
தெரிந்தோ தெரியாமலோ நான் வேட்டைக்குப் போகும்போது எனக்கு இந்த மாதிரி யுக்தி வரும். ஈட்டியைக் கையில் வைத்துக் கொண்டு புலி வருகின்றது என்று இப்படித் தாக்கினால் பிரண்டு ஓடும். ஈட்டி குத்தியிருந்தால் இன்னும் ஆவேசமாகத் துடிக்கும். கொஞ்ச நேரத்தில் இரத்தமெல்லாம் வெளியில் போய் விட்டது என்றால் சுணங்கி விடும்.
 
ஒரு கரடிக் கூட்டத்திற்குள் போகும் போதும் இதே யுக்தி கொண்டு ஈட்டியை வைத்தால் போதும்.
 
அது என்ன செய்யும்...? எதாவது கொடுத்தால் கையில் பிடித்து கொள்ளும். நாம் வலுக்கொண்டு நன்றாகப் பிடித்து கொள்ள வேண்டும். இல்லை என்றால் பொசுக்கென்று கையை உருவிவிடும்.
 
நாம் வலுவாக இரண்டு கைப்பிடியை வைத்துக் கொண்டு பிடித்திருந்தால் மண்டி போடும் இப்படியே இழுக்கும். மண்டி போட்டு இழுக்கும் உட்கார்ந்து. நன்றாக இழுத்து வலுவாக விட்டு லபக் என்று விட்டோம் வயிற்றில் ஈட்டி குத்தும்.
 
மனிதனுடைய எண்ணங்கள் எப்படி இருக்கின்றது...? என்ற வகையிலே குருநாதர் ஒவ்வொரு செயல்களிலும் செய்து காட்டுகின்றார். எது...?
 
மனிதனின் எண்ண வலுக் கொண்டு எப்படி மிருகங்களைக் கொல்கின்றான்...? என்பதைக் காட்டுகின்றார்.
 
உணர்வுக்கொப்ப இசை கொண்டு ஊதும் போது பாம்பு மகுடியில் ஆடுகின்றது. அவன் கையில் “விழுது...” (பாம்பு மிரட்டி) வைத்திருப்பான். அந்த விழுதைக் கையில் வைத்தவுடன் பையிலிருந்து பாம்பை எடுத்துக் கொண்டால் படம் எடுப்பதைத் தாழ்த்திவிடும்.
 
1.மனிதன் எண்ண உணர்வினால் எதையும் அடக்கக் கூடிய வல்லமை பெற்றவன்.
2.நாம் அதிலிருந்து பிறந்து வந்தவர்கள் தான்
3.பல சரீரங்களில் ஒன்றுக்கொன்று இரையாகி வந்தவர்கள் தான்.
4.எல்லாவற்றையும் தெரிந்து கொண்ட நிலையில் அதை அடக்கக்கூடிய சக்தி மனித உணர்விற்கு உண்டு.

இதை எல்லாம் காட்டிற்குள் அழைத்துக் கொண்டு போய் குருநாதர் கொடுக்கின்றார்.