ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 1, 2020

சூரியகலை சந்திரகலை – பிராணாயாமம்


இந்த வாழ்க்கையில் எப்படித்தான் இருந்தாலும் எதாவது குறைபாடுகள் வரும். எவ்வளவு நல்லது செய்தாலும் கூட இந்த நிலை வரும்.

நம்மைச் சங்கடத்திலோ சலிப்பிலோ வெறுப்பிலோ ஆழ்த்தக்கூடிய நிலைகள் நமக்கு வந்தால்...
1.அந்த உணர்வுகள் எல்லாம் மூக்கின் வழியாகச் சென்று
2.புருவ மத்தியில் உயிரிலே பட்டுத்தான் அந்த உணர்ச்சிகள் நம்மை இயக்குகின்றது.
3.ஆண்டென்னாவான (ANTENNA) நமது கண் தான் அதை எடுக்கின்றது.
4.அதன் அழி ஆன்மாவிலிருந்து சுவாசித்துக் கொண்டே இருக்கும்
5.அந்தக் கெட்ட அணுக்கள் தான் வளரும்... சிந்திக்கும் தன்மை போய்விடும்.

அந்த இடத்தில் என்ன செய்ய வேண்டும்...?

“ஈஸ்வரா...” என்று சொல்லி ஒரு பிரேக்...!

நம் கண்ணின் நினைவை உயிருடன் ஒட்டி ஈஸ்வரா...! என்று எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ண வேண்டும். அப்பொழுது அந்தச் சங்கட அலை மூக்கின் வழி உள்ளே போவதை இங்கே தடுக்கின்றது.

நெருப்பிலே ஒரு பொருள் பட்டால் தான் அந்த வாசனை தெரியும். அதே மாதிரி உயிரிலே பட்டால் தான் இயங்கும். ஆகவே
1.தீமை செய்யும் உணர்வுகள் உயிரிலே படாமல் அதை முதலில் தடுத்துப் பழக வேண்டும்.
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை இதன் வழி (புருவ மத்தி) உள்ளுக்குள் இழுக்க வேண்டும்.
3.இது தான் பிராணயாமம் என்பது.

பிராணயாமம் என்றால் மூச்சை ஒரு பக்கமாக இழுத்து இன்னொரு பக்கமாக விடுவதில்லை. மூக்கு வழி போவதை நிறுத்தி... புருவ மத்தி வழி உள்ளே கொண்டு செல்ல வேண்டும். இது தான் சூரியகலை என்பது.

சந்திரகலை என்பது சாதாரணமாகப் போய்க் கொண்டிருக்கின்றது. நாம் வழக்கமாக எடுக்கும் சுவாசம் தான் அது.

ஆனால் உயிர் வழி எடுக்கும் போது சூரியகலை.

சூரியன் இழுத்துத் தான் எல்லாவற்றிற்கும் ஒளி அலைகளை அனுப்புகின்றது. அதாவது காற்றில் வரக்கூடிய அலைகளை அது எது எது வருகிறதோ... அதை எல்லாம் எடுத்து அந்தந்த அலைகளாக இயக்கச் செய்கின்றது

சூரியகலை என்கிறபோது நாம் என்ன செய்கின்றோம்...?

நம் ஆறாவது அறிவு கொண்டு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற வேண்டும் என்று சொல்லி “உயிர் வழி...” உள்ளுக்குள் நேரடியாகக் கொண்டு போகிறோம்.

அதே சமயத்தில் நம் ஆன்மாவில் இருப்பது சுவாசத்தின் மூலம் உள்ளே போகாதபடி தடைப்படுத்துகின்றோம்.

1.நாம் எந்தத் துருவ நட்சத்திரத்தை எண்ணி எடுத்தோமோ அந்த உணர்வுகளை
2.உடலில் உள்ள எல்லா அணுக்களிலும் இணைத்து இயக்குவதுதான் பிராணயாமம்.
3.நல்ல அணுக்களை நமக்குள் உயர்த்த வேண்டும்... அதனால் தான் ஆறாவது அறிவு கார்த்திகேயா என்பது...!

ஆனால் இவர்கள் பிராணயாமத்தை எத்தனையோ அர்த்தங்களில் கொண்டு போகின்றார்கள்.