மற்ற ஜீவராசிகளைக் காட்டிலும் மனித
உடலுக்குத்தான் பல நிலை கொண்ட அமில சக்தியும் காந்த சக்தியும் கலந்த நிலை
நிறைந்துள்ளது. இவ்வுடலுடன் பல அணுக்களின் நிலையும் ஏறி உள்ளது. ஒவ்வொன்றுக்கும்
ஒவ்வொரு சக்தி நிலையும் குண நிலையும் உண்டு.
நம் ஆத்மாவை நாம் செயல்படுத்திடும்
நிலை கொண்டு
1.எந்த நிலைக்குகந்த எண்ண சக்தியை
ஈர்க்கின்றோமோ
2.அந்த நிலைக்குகந்த சக்தியுடன் கூடிய
நிலைகளை எல்லாம் இவ்வாத்மாவுடன் ஒன்றச் செய்திடலாம்.
இன்றைய செயற்கையில் விஞ்ஞான
நிலைப்படுத்தி இரசாயன முறையில் பல செயல்களைச் செய்கின்றனர்.
1.ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரிக்கவும்
ஒன்றுடன் ஒன்றைச் சேர்க்கவும்
2.பல நிலைகளை இன்றைய விஞ்ஞானத்திலும்
செயலாக்குகின்றனர்.
விஞ்ஞான சக்திக்கும்... மெய் ஞான
சக்திக்கும்... அனைத்திற்குமே... இக்காற்றிலிருந்து நமக்குக் கிடைத்திடும் சூரியன்
அளித்திட்ட அமில சக்தி கொண்டுதான் இவ்வுலக சக்திகள் செயல்படுகின்றது.
அதன் மூலம் நம் ஆத்மாவின் துணையினாலே..
1.நம்முள்ளே அனைத்து சக்தியையும்
ஈர்த்துச் செயல் கொண்டிடும் “உன்னத தெய்வீக அருள் கொண்ட நாம்...”
2.இன்றைய கலியில் மிகவும் ஈன நிலையில்
அடிமை கொண்ட பேராசையில்
3.இக்குறைந்த வாழ் நாட்களை விரயம்
செய்தே வாழ்கின்றோம்.
இதை ஏன் சொல்கிறோம் என்றால்... இன்றைய
விஞ்ஞானத்தில் கண்டிட்ட சக்தியின் நிலைக்கு மேலே “இவ்வாத்மாவின் சக்தியை ஈர்த்தே...”
பல நிலைகளை ஒவ்வொருவரும் செயலாக்கிட முடியும்.
பண்டைய காலம் தொட்டே பல ரிஷி நிலை கொண்ட
தேவர்கள் எல்லோரும் அவர்கள் இப்பூமியில் வாழ்க்கையுடன் வாழ்ந்திட்ட நாட்களில்...
அவர்களால் உணர்த்தப்பட்ட... பதிவு செய்வித்த அனைத்து உண்மை நிலைகளையுமே... இன்றுள்ள
இக்கலியின் எண்ணத்திற்கு செயல்படுத்திட முடியாத வண்ணம் பல நிலைகள் மறைக்கப்பட்டன.
நம் எண்ண நிலையை ஒரு நிலை
கொண்டிட்டால் அவர்களின் துணையுடனே பல நிலைகளை நாம் இன்று பெறலாம்.
தாவரங்களின் நிலையெல்லாம் ஒவ்வொரு
தாவரமும் ஒரே நிலை கொண்ட சக்தியைத்தான் (அமிலம்) ஈர்த்து வளர்கின்றது. சில வகைத்
தாவரங்களின் நிலையுடன் சில அமிலங்களைக் கலக்கும் போது இப்பூமியில் இருந்து நாம்
எடுத்திடும் கனி வளங்களைப் போன்ற பல வகை உலோகங்களை நாம் செய்திடலாம்.
தங்கம் தாமிரம் ஈயம் செம்பு இப்படிப்
பல நிலைகள் நாமே செய்திடலாம். செய்து என்ன பயன்...? இப்பேராசையை வளர்க்கும்
நிலைதான் ஏற்படும்.
தாவரங்களைப் போன்றே சில ஊரும் நிலை கொண்ட
அட்டை என்னும் இன வர்க்கத்தை உடைய புழுவும் இன்னும் சில புழுக்களும் ஒரே அமில
சக்தியை ஈர்க்கும் நிலையுடையதாக உள்ளன.
அந்த அட்டைப் புழுவின் நிலையெல்லாம்
தாமிர சக்தியை ஈர்த்து வளர்ந்த நிலை. இவ்வுலகினில் இப்படிப் பல நிலைகள் உள்ளன. எத்தகைய
விஷத்தையும் எடுத்திடும் தாவர வர்க்கங்கள் பல உள்ளன.
அனைத்து நிலைகளுக்கும் குறிப்பு நிலைகள்
நம் சித்தர்களால் பதியச் செய்து மறைக்கப்பட்டுள்ளன.
அது எல்லாவற்றையும் அறிய வேண்டும் என்ற
சாதாரண நிலையில் அந்த எண்ணத்தின் நிலைக்கு நாம் அடிமைப்பட்டிடலாகாது என்பதற்காக...
“பல நிலைகளை மறைத்தே வெளிப்படுத்துகின்றோம்...!”
இருந்தாலும் சக்தியின் நிலையில்...
1.இம் மனித ஆத்மாவின் தெய்வீக சக்தியை
உணர்த்திடவே
2.சில குறிப்புகளை இங்கே வெளிப்படுத்தினோம்.