நாம் ஈர்த்து வெளியிடும்
சுவாசத்திற்கு “ஈர்க்கும் நிலையை ஒத்த சக்தியே...” நாம் வெளியிடும் சுவாச
சக்திக்கும் உண்டு.
1.நாம் எடுக்கும் சுவாசத்தை நேராக நம்
உயிரணு ஈர்க்கிறது
2.உயிராத்மா ஈர்த்த நிலையில் அச்சக்தி
நம் நெற்றியில் வந்து பாய்ந்து...
3.இவ்வுடல் அனைத்திற்கும் நாம் ஈர்க்கும்
சுவாசம் பரவுகிறது.
எந்த நிலையில் அந்த ஈர்த்த நிலை
செயல்படுகின்றதோ அந்நிலை போன்றே நாம் வெளிப்படுத்தும் சுவாசமும் வெளிப்படுகின்றது.
நாம் எடுத்து வெளிப்படுத்தும் சுவாசித்தின் நிலையினால்தான்... நம் நினைவலைகளும்...
சப்த ஒலிகளும்... நாம் காணும் பிம்ப ஒலிகளும்.. நமக்குத் தெரிகின்றன.
இச்சுவாசத்தின் நிலை கொண்டேதான்
அனைத்து சக்தி நிலைகளையும் நாம் செயல்படுத்துகின்றோம். இந்நிலையில் நாம்
செயல்படுத்திடும் நாம் ஈர்த்து வெளிப்படுத்தும் சுவாச நிலை நம் உயிராத்மாவுடன்
கலந்துதான் நம் உடல் நிலையும் நம்மைச் சுற்றியுள்ள ஒலி ஒளி அலைகளும் உள்ளன.
இச்சுவாச நிலை என்னும் பொக்கிஷ நிலையை
நாம் உணர்ந்திட வேண்டும். எந்தெந்த நினைவலைகளுடன் நாம் இருக்கின்றோமோ அந்த நினைவலைகளுடன்
நம் எண்ண நிலை உள்ள பொழுதில்... நாம் ஈர்த்து வெளிப்படுத்தும் சுவாசத்தில்
நம்முடன் ஒலியாகவும் ஒளியாகவும் அனைத்து நிலைகளும் சுற்றிக் கொண்டுதான் உள்ளன.
நம் வாழ்க்கையில் நடந்த பழைய
நினைவுகளை நாம் எண்ணிடுங்கால் “அன்று நாம் கண்ட அக்காட்சியின் பிம்பமும்... ஒலி
அலைகளையும்...” நாம் கண்டு கொண்டுதான் உள்ளோம்.
நாமாக நினைவுபடுத்திக் கற்பனையாக
அக்காட்சியை நம்முள் காண்பதாக எண்ணுகின்றோம். நாம் எண்ணும் நிலைப்படி அல்லாமல்...
ஒலி அலைகளைப் போலவே இவ்வொளி அலைகளும் நம் உயிராத்மா தோன்றிய நாள் கொண்டு நாம்
எடுத்திட்ட சுவாச நிலையுடன் நம்மைச் சுற்றிக் கொண்டே உள்ளன.
1.நம் நினைவை ஒரு நிலைப்படுத்தி பல
எண்ணங்களின் நினைவின் மோதலைத் தாக்கவிடாமல்
2.ஒரே நினைவுடன் நல்லுணர்வு கொண்ட நிலையில்
3.அவரவர்களுக்கு உகந்த அன்புருவம்
கொண்ட எவற்றையும் ஒரே நிலையில் நம் எண்ண சக்தியில் செலுத்தி
4.அந்நிலையில் நாம் எடுத்திடும்
சுவாசத்தின் சக்தியினால்
5.நம் உயிராத்மாவில் கலந்து
வெளிப்பட்ட அனைத்து நிலைகளையும் அறிந்திடலாம்.
நாம் நம் ஆத்மாவுடன் கூடிய
நிலையினைத்தான் அறிந்திடும் நிலையை இந்நிலையில் வெளிப்படுத்தியுள்ளேன்.
இந்நிலை போன்றே நாம் உள்ள நிலையில்
நம் எண்ண நிலையை ஒருநிலைப்படுத்தி இப்பூமியும் இப்பூமியைச் சார்ந்த அனைத்து
நிலைகளையும் நம் எண்ண சக்தியையும் ஒரே நிலையில் பாய்ச்சும்போது நாம் ஈர்த்து
வெளிப்படுத்தும் அக்காந்த நிலை கொண்ட இச்சுவாச சக்திக்கு நம் எண்ணமுடன் நாம்
எண்ணிடும் இடத்திலுள்ள நிலைகளையெல்லாம் அறிந்திடலாம்.
இன்றைய விஞ்ஞானத்தில் வானொலியிலும்
தொலைக்காட்சிகளிலும் காந்த நிலை கொண்ட அமிலக் கற்களைப் பதிய வைத்துப் பல
அலைவரிசைகளை ஓர் இடத்தில் ஒலிபரப்பப்படும் ஒலியையே இருந்த நிலையில் இவ் வானொலியின்
மூலமாக அவ்வலை வரிசையிலேயே மோதவிடும் பொழுது அங்கு நடக்கும் ஒலியின் அலையையே
வானொலியின் மூலமாக நாம் கேட்கின்றோம்.
இந்தக் காற்றினில் கலக்கவிட்டுத்தான்
விஞ்ஞானியும் பல செயல்களைச் செய்கின்றான்.
1.இக்காற்றையே சுவாசித்து நம்
உயிராத்மாவுடன் மோதவிட்டு
2.அந்நிலையிலேயே எம்மண்டலத்திற்கும்
நம் எண்ண நிலையைப் பாய்ச்சி
3.நாம் அந்நிலையில் எடுத்திடும்
சுவாசத்தின் அலைகள் நாம் வெளிப்படுத்திடும் நிலையில் அங்கும் பாய்ந்து
4.எங்குள்ள நிலையையும் நம்
உயிராத்மாவின் சக்தியுடன் நாம் இருந்த நிலையிலேயே அறிந்திடலாம்.
இத்தியான நிலையில் ஆரம்ப பக்குவ
நிலையில் ஞானம் கொண்ட நிலைக்கு வந்திட்டால்... நம் விழியை நாம் மூடி அமர்ந்துள்ள
நிலையிலேயே அறிந்திட முடியும்.
பக்குவ நிலைக்குப் பதம் பெற்றுச்
செல்லச் செல்ல... இவ்விழியைத் திறந்தே
2.உள்ள நிலை அனைத்தையும்... நம்
எதிரிலுள்ள பிம்ப நிலைகளையும் தாண்டி
3.எங்குள்ள நிலையையும் நாம் அறிந்திட
முடியும்
ஞானமும் சித்தும் இவ்வாத்மீக
நெறியிலுள்ள எந்த நிலைக்குகந்த சக்தி நிலை பெறவும் இவ்வெண்ண சக்தியை ஒரு
நிலைப்படுத்தி... “சிறுகச் சிறுகத்தான் பெருகச் செய்து... வழி நடந்திடல்
முடிந்திடும்...”