மாறப் போகும் இக்கலியின் கால நிலைக்காக… இதை உணர்த்துகின்றேன்.
1.இக்கலியுடனும்… இக்கலிக்கு முந்தைய காலங்களிலும்
2.இப்பூமியில் உயிரணுவாய் உதித்து உயிராத்மாவாகி உங்களுடனே வாழ்ந்த
3.இவ்வுலகுடன் ஒன்றிய நிலை கொண்ட ரிஷிகளின் அருளாசியினால்
4.இவ்வுலகத் தன்மை மாறப் போகும் தற்போதைய காலத்தில்
5.உங்களுடன் கலந்து வாழ்ந்த எங்களின் ஆசையினால்
6.இம்மாற்றத்திலிருந்து அணுவாய்… ஆத்மாவாய்… அனைத்து அறிவும் ஆற்றலும்
சக்தி கொண்ட மனித உடல் பெற்ற ஆத்மாக்களை
7.இப்பேறு பெறும் பாக்கிய நிலை அடைந்தவரை நம்முடன் அழைத்திடவே (ரிஷிகளுடன்)
8.இந்நிலையில் இப்போதனை வழியினைத் தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றோம்.
பூமியின் பூமத்திய ரேகையின் நிலையைப் பற்றி இங்கே உணர்த்துகின்றோம்.
இவ்வுலக நிலை கால நிலைகேற்ப உஷ்ண நிலையும் மாறு கொள்கின்றது. காற்றும் மழையும்
பனியும் குளிரும் அனைத்துமே மாறி மாறி வருகின்றன.
அது எவ்வாறு என்ற நிலையில்… இப்பூமியின் பூமத்திய ரேகையின் நிலையில் அதன்
சுற்றும் தன்மையில் சூரியனின் நிலைக்கு சூரியனின் தூர விகிதப்படி இவ் இயற்கையின்
நியதிகள் மாறுபட்டு வருவதாகப் பண்டைய காலம் தொட்டு இன்றளவும் உணர்ந்து
வருகிறீர்கள்.
பல நாட்களுக்கு முதலிலேயே வான சாஸ்திரப்படி என்றென்று சந்திர சூரிய
கிரகணங்கள் வருகின்றன என்றும் சரியாக உணர்த்துகின்றனர்.
1.இவ்வான மண்டலங்களில் சுழற்சியில் ஏற்படும் நிலைகளையெல்லாம் பல நிலைகளில்
அறிந்துள்ளனர்
2.இருந்தாலும் எல்லாவற்றையும் வெளியிடும் அச்ச நிலையில் உள்ளனர்.
இப்பூமி சுழலும் தன்மையில் ஏற்படும் ஒளி (சூரியனின் ஒளிக்கதிர்கள்) சில
இடங்களில் படுவதே இல்லை. என்றுமே இருண்ட பூமியாக சில இடங்கள் உள்ளன.
ஆனால் இப்பூமியின் அசைவு காலத்தில் (மாறப் போகும்) அவ்விருண்ட நிலை கொண்ட
இடங்களெல்லாம் ஒளிக்குச் சிக்கிடும் இடங்களாக வந்துவிடும்.
சில இடங்களை இப்பூமியின் மாற்றத்தின்போது ஏற்படும் அசைவுக்குக்
குறிப்பிடுகின்றேன்.
1.இன்று மக்கள் நிறைந்து வாழ்ந்திடும் சீனாவும் அமெரிக்காவும் இம்
மாற்றத்திற்குச் சிக்கிடும் நிலையில் உள்ளன.
2.அதிக மாற்றம் கொள்ளும் நாடுகள் இவை இரண்டும்தான்…!
மற்ற நாடுகளில் மாற்றம் வந்தாலும் சில நிலைகளில் அந்நீரின் மட்டம் ஏறாமல்
நிலமாக இருந்திடும்.
இவ்வுலக மாற்றத்தினால் இன்று இருண்ட நிலையில் உள்ள பூமிகள் எல்லாம் ஒளிக்கு
வந்துவிடும்.
1.இன்று செயற்கையுடன் ஒன்றிய வளர்ச்சியடைந்த நாடுகள் என்று நாம் செப்பிடும்
2.பூமிகளில் சில இருண்ட நிலைக்குச் சென்றிடும்.
இம் மாறப்போகும் இப்பூமியின் தன்மையுடன் இயற்கை சக்தியும் இன்றுள்ள
நிலையிலிருந்து மாறும் தன்மை படுகின்றது. சித்திரையில் உள்ள வெயிலும் மார்கழியின்
குளிரும் இம்மாற்றம் கொள்ளும் இப்பூமியின் நிலையினால் மாற்றம் கொண்டு சுழலப்
போகின்றது.
அனைத்து நிலைகளையும் நீங்களும் காணப் போகின்றீர்கள்...!
1.இவ்வெண்ண சக்தியின் செயலைக் கொண்டு ஜெப சக்தியை உயர்வாக்கி
2.ஜெபம் கொண்ட வாழ்க்கையை ஜெயித்தே வந்திடுங்கள்.
3.வழியின் தொடர்பினை அறிந்துள்ளீர்… இனி வருவதற்குச் சிரமம் இல்லை.
ஞானத்தின் வழியறிந்து செயல்பட்டு எல்லோரும் ஞானியாகி… அந்த வழித்தொடரினை
வழிப்படுத்தியே “சப்த ரிஷிகளுடன் சங்கமித்தே சகல நிலையுடன் கலந்திடுவோம்…” என்ற ஓ…ம்
என்ற நிலையினிலே மன நிலையை ஒன்றச் செய்திடுங்கள்.
இவ்வுலகம் மட்டுமல்ல… அனைத்து உலகங்களுமே நமதாக்கி அனைத்து
உலங்கங்களுக்கும் சொந்தமான அவ் ஆதி சக்தியுடனே கலந்திடுவோம்… என்ற “ஒரு நிலை கொண்ட
தைரியமுடன் கலந்திடுங்கள்…!”
1.எவ்வாண்டவனும் வந்து நம்மை அழைத்துச் செல்வதல்ல அந்நிலைக்கு…
2.நம்முடன் கலந்துள்ள நம் ஆத்மாண்டவனை (உயிரான ஈசனை) நாம் வழி நடத்திட்டால்
3.அனைத்து ரிஷிகளின் அருளைப் பெற்று… அனைத்துடனும் நாமும் கலந்திடலாம்.
4.ஒன்றிடும் பக்குவ நிலையையே அறிந்து… பக்குவப்படுத்தி வளர்ந்து கல்கியின் நிலைக்கே
வந்திடுங்கள்.