இன்றைய மனிதனின் பல எண்ண சக்தியினால் கணிதத்தின் (கம்ப்யூட்டர்) தொடர்பு
கொண்டு…
1.செயற்கையினால் இயந்திரத்தின் துணை கொண்டு
2.ஒருவர் இருவர் அறிந்த சக்தியை இயந்திரங்களின் வழியில் செயல்படுத்தி
3.மற்ற ஆத்மாக்களின் சக்தியை இவ்வியந்திரத்தின் கணிதத் தொடர்பு கொண்டு
சக்திக்கு அடிமைப்படுத்தி
4.செயலற்ற சோம்பேறி நிலையில் சென்று கொண்டுள்ளது இன்றைய உலகம்.
உலகம் எப்படித் தோன்றியது…? எந்நிலையில் உயிரினங்கள் வளர்ச்சி கொண்டன…?
என்ற நிலையை அறியவும் ஆராயவும் இன்றளவும் இம் மனித எண்ணங்களின் நிலையுள்ளது.
பிறரின் தொடர்பை மட்டும் இயக்கி உள்ள நிலை இது…!
1.தான் பிறந்து வளர்ந்து செயல் கொண்டு வாழ்ந்திட… தனக்குள்ள சக்தியையும்…
2.தான் வாழவே தன்னுள் உள்ள தன் ஆத்மாண்டவனையும் வணங்கிடல் வேண்டும்…! என்று
உணராமல்
3.பிறரின் சக்தியில் சக்தியில் அடிமை கொண்டு வாழ்ந்து என்ன பயன்…?
நாம் பிறவியெடுத்த பயனை உணர்ந்து ஆத்ம ஜெபம் கொண்டால் நம் சக்தியுடன்
அனைத்து நற்சக்திகளையும் ஈர்த்துச் செயல்படுத்தி வாழ்ந்திடலாம்.
நம் ஆத்மாவான நம் சக்தியை நாம் உணர்ந்து செயல் கொண்டால்தான் இம்
மாறப்போகும் இக்கலியின் மாற்றத்திலிருந்து நம் ஆத்மாவை ஒளிரச் செய்திட
முடிந்திடும்.
ஆத்ம சக்தியை உணர்ந்து கொண்டால் அவரவர்களிடத்திலுள்ள இவ்வெண்ண சக்தியின்
தொடரைக் கொண்டு இக்கோளம் மட்டுமல்ல… இப் பிரம்மாண்ட அனைத்துக் கோளங்களையுமே
நமதாக்கும் சக்தி ஒவ்வோர் ஆத்ம சக்திக்கும் உண்டு.
அனைத்துக் கோளங்களுமே நமக்குச் சொந்தமானவைதான்.
இப்பூமியில் உயிரணுவாய் உயிராத்மாவாய் வாழ்ந்திடும் நாம் நம் சக்தியைச்
செயல் கொண்டதாக்கி வாழ்ந்து காட்டிடல் வேண்டும். ஜீவன்
பிரிந்த பிறகு ஆவி உலகில் இவ்வுடலில்லாமல் நம் சக்தியை வளர்த்திட முடியாது.
மாறப் போகும் கலியிலும் பிறகு வரும் கல்கியிலும் ஆவி உலகில் ஆத்மாக்களாய்ச்
சுற்றிக் கொண்டுள்ள நிலையில்…
1.இவ்வுடலில் இருந்து பிரிந்து சென்ற நிலையிலுள்ள எண்ண நிலைக்கொப்ப…
2.பிறவி எடுத்திடும் நாள் வரை இவ்வாவி உலகில் சுற்றிக் கொண்டேதான் எண்ணத் தவிப்புடனே
இருந்திடல் வேண்டும்.
இதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.