உதாரணமாக வாலிப பருவத்தில் காதலிக்கின்றனர். ஒருவரை ஒருவர் நேசிக்கின்றனர்.
ஆனால் குடும்பத்தில் பற்றுடன் இருப்போர் (தாய் தந்தையர்) இது எதற்கு…? இது
நமக்கு ஆகாத நிலைகள்…! என்று உணர்த்துகின்றனர்.
இதை ஏற்றுக் கொள்ள மறுக்கின்றது. இதன்படி என்ன வாழ்க்கை…? என்று இருவருமே
மடிந்துவிடுவோம்…! என்று தற்கொலை செய்கின்றனர்.
ஆனால் தற்கொலை செய்யும் இந்த உணர்வுகள் யாரால் இது ஏற்பட்டதோ… இந்த
உணர்வின் தன்மை உடலை விட்டு சென்ற அந்த ஆன்மா அவர்கள் உடலில் சேர்ந்து இது உயிரின்
தன்மையை அதனை வேதனைப்படச் செய்து இந்த உடலை வீழ்த்திவிட்டு மீண்டும் மனிதனல்லாத
உருவுக்கு அழைத்துச் செல்கிறது.
ஏனென்றால் பல கோடிச் சரீரங்களைக் கடந்து மனிதனாக வளர்ந்து வந்தாலும்… தற்கொலை
செய்யும் உணர்வு வரப்படும்போது.. “இதிலிருந்து விடுபடலாம்…” என்று எண்ணுகின்றனர்
ஆனால் வெளிவந்தபின் யார் மீது பற்று கொண்டதோ அந்த உடலுக்குள் தான் செல்ல முடிகிறது. அந்த
உடலையும் வீழ்த்தி விட்டு மிகவும் நஞ்சான நிலையில் வெளி வருகிறது.
தாய் தந்தையர் பற்றாக இருந்து பிளைகளை வளர்த்து ஆதரித்துப் பண்புள்ளவராக
மாற்றினர். இவ்வளவு செய்தும் கடைசியில் தன் குழந்தை இப்படிச் செய்துவிட்டதே என்று அவ்ர்களும்
கடும் வேதனைப்படுகின்றனர்.
இப்படிப்பட்ட வேதனையுடன் குழந்தையை எண்ணும் போது தற்கொலை செய்த அந்த ஆன்மா
தாயின் உடலுக்குள் வருகின்றது.
தற்கொலை செய்யும் உணர்வுகளை அங்கே ஊட்டுகின்றது. அதுவும் பலவீனமாகின்றது.
அந்த உடலையும் அதில் உள்ள நல்ல அணுக்களையும் மடியும் தன்மை செய்கிறது
இதன் வழி அந்த உயிரான்மா சென்றால் தான் எந்த நிலை பெற்றதோ அந்தத் தாயின்
உடலுக்குள் இந்த ஆன்மா புகுந்து அதன் வழி செயல்பட்டுத் தாயைக் கொல்லவும்
செய்கின்றது… நரகலோகத்திற்குத்தான் அனுப்புகிறது. தானும் மனிதன் அல்லாத நிலையைத்
தான் பெறுகின்றது…!
1.ஆக சிறிது நேரம் சந்தோஷத்தை ஊட்டும் இந்த உணர்வுகளில் சிக்குண்ட நிலையில்
(தற்கொலை)
2.அடுத்து மனிதன் அல்லாத உருவாகப் பாம்பாக… தேளாகத் தான் உருப்பெற
முடியும்.
தாய் தந்தையரை வேதனைப்படச் செய்வோர் இதைப் போல் விஷத் தன்மையைக் கலந்தால்
சிந்தனையற்ற நிலை கொண்டு விஷத்தைப் பாய்ச்சி உணவாக எடுக்கும் உயிரினங்களாக நம்மை
உயிர் மாற்றிவிடும் என்பதை மறந்திடலாகாது.
அதைக் காட்டுவதற்குத் தான் “சித்திரபுத்திரன் கணக்கின் பிரகாரம் எமன்
தண்டனை கொடுக்கின்றான்…!” என்று உணர்த்தினார்கள்.
1.நாம் நுகரும் உணர்வுகள் நம் உடலிலே பதிவாகி
2.அதன் உணர்வைத் தொடர் வரிசையில் எண்ணும் போது அதனின் உணர்வின் அணுக்களாகி
3.அந்த உணர்வின் செயலாகவே நம்மை இயக்குகின்றது என்பதைத் தெளிவாகக்
காட்டுகின்றார்
இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொண்டு தந்தையரின் அருள் துணை கொண்டு மகரிஷிகளின்
அருளைப் பெற்று… “மெய் ஞானிகள் காட்டிய நெறியில் வாழ்வதே மிகவும் நல்லது…!”