ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 16, 2020

நம் ஆத்மாவை ஸ்ரீ இராம ஜெயம் ஆக்கிட வேண்டும் - ஈஸ்வரபட்டர்

ஸ்ரீ இராமனாய் வால்மீகி மகரிஷியினால் எழுதப்பட்ட அக்காவியக் கதையில்
1.ஸ்ரீ இராமருக்கு உகந்த குண நிலைகளை அப்பாத்திரத்திற்கு ஏற்றி
2.ஒவ்வோர் ஆத்மாவும் ஸ்ரீ இராமனின் குணநிலைக்கொப்ப வாழ்ந்திட வேண்டும் என்ற ஆசை நெறியில்தான்
3.வான்மீகி மகரிஷியால் இயற்றப்பட்ட காவிய சக்தி ஸ்ரீ இராமநாதனின் சக்தி.
 
ஒவ்வோர் ஆத்மாவின் வாழ்க்கையிலும்...
1.குடும்பச் சூழ்நிலையில் ஏற்படும் தாய் தந்தை சகோதர பாசங்கள்
2.வாழ்க்கையுடன் கொடிய எதிர்ப்பு நிலைகள்
3.வாழ்க்கையுடன் உள்ள இயற்கையின் சூழ்நிலைகள்
4.வாழும் நெறி இவற்றையெல்லாம் பிணைத்துத் தாய் தந்தையரையே தெய்வமாக்கி
5.கற்புக்கு நெறி வழி அமைத்து வீரத்திற்குத் தக்க மன பலம் ஏற்றியும் அமைக்கப்பட்ட காவியம் தான் ஸ்ரீ இராம காவியம்.
 
வாழ்க்கை நெறியுடன் ஒவ்வோர் ஆத்மாவுமே வழிவந்திட வேண்டும் என்பதற்காக இயற்றப்பட்டது தான் இந்தக் காவியம். ஸ்ரீ இராமனுக்கு மட்டும் அப்பலமும் செயல் திறமையும் அன்பும் பாசமும் சொந்தமல்ல.
 
ஒவ்வோர் ஆத்மாவும் ஸ்ரீ இராமனின் குண நிலைக்கொப்ப வாழ்ந்திட வேண்டுமென்ற நெறி முறையின் காவியத்தை... அன்றிலிருந்து பல கோணங்களில் மாற்றப்பட்ட அக்காவியத்தையே... இக்கலியில் நாம் ஸ்ரீ இராமனின் குண நிலையை நெறி வாழ்க்கையாக வழிபடுத்தி வழிநடத்தி வந்திடும் மன நிலையுடன் நாம் வாழ்ந்து காட்டிடல் வேண்டும்.
 
இராமர் வாழ்ந்ததாகச் சொல்லிடும் அக்காவியத்தின் பிறப்பிடமான இராமேஸ்வர ஆலயத்தில்...
1.வான்மீகி மகரிஷியின் சக்தி நிலை இன்றும் செயல் கொண்டு வழி நடக்கின்றது.
2.அந்நூலின் உண்மை நிலையும் சக்தி நிலையும்
3.இவ்வியற்கையின் சீற்றத்திலிருந்தும் கால நிலையின் மாற்றத்திலிருந்தும்
4.அந்த ஆலயம் இன்றளவும் தப்பி வருவதின் உண்மை நிலையே அங்கு தவமிருந்த ரிஷிகளின் சக்தியின் நிலையினால்தான்.
 
உள்ளத்தில் சபல நிலை இல்லாமல் ஸ்ரீ இராமேஸ்வரத்தில் இராம தீர்த்தம் பெறுபவரின் உடலுக்கும் உள்ளத்திற்கும் அந்நல்லருளின் ஜெபத்தின் சக்தி பெற்றே வருகின்றனர்.
 
1.அந்த நல் எண்ணமேதான் ஒவ்வோர் ஆத்மாவிற்குமே வழி தெய்வம்
2.எவ் வழியில் வழி நடக்கின்றதோ அவ்வழியின் சக்தி நிலை ஒவ்வோர் ஆத்மாவுமே பெறுகின்றது.
 
எண்ண வழியில் ஆலயத்தில் நாம் வழிபடும் முறை கொண்ட அந்தச் சக்தி நம் ஆத்மாவிற்கும் உடனே வந்தடைந்து அச்சக்தியின் அருளைப் பெறலாம்.
 
ரிஷிகளினால் ஜெபம் கொண்ட ஆலயங்களில் எல்லாம் அவ்வாலயங்களுக்குச் சென்று நம் எண்ண வழியைச் செலுத்திடும் நிலைக்கொப்ப அவர்களின் அருளாசி நம்முடன் வந்து கலக்கின்றது.
 
ரிஷிகளினால் வழி நடத்தித் தந்திட்ட பொக்கிஷ வழியுடன் வாழ்ந்திடும் நாம் அந்நல்வழியின் தொடரையே நமதாக ஏற்று ஒவ்வோர் ஆத்மாவுமே ஸ்ரீ இராமனைப் போன்று வாழ்ந்து காட்டிடுங்கள்.
 
1.சொல்லிலும் செயலிலும் ஆத்மீக அறத்துடன் தியானிக்கும் போது நற்பாக்கியத்தைப் பெறுகின்றோம்
2.மகரிஷிகளின் அருளை நாம் பரிபூரணமாகப் பெறுகின்றோம்.
3.ஆகவே... “நம்முள் உள்ள ஆத்மாவையே ஸ்ரீ இராம ஜெயம் ஆக்கிடுங்கள்...!