ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 12, 2019

ஆக்கினை என்றால் என்ன...?


மூலாதாரம் என்றால் நமக்குள் வரும் (நாம் சுவாசிக்கும்) இந்த உணர்வின் தன்மை எலும்பும்... இரத்தங்களும்... நரம்பு மண்டலமும்.. இந்த மூன்றும் சேர்த்து அங்கே அணுத் தன்மை ஜீவன் பெறச் செய்யக்கூடிய நிலைகளாகக் கவர்ந்து “விந்துடன் கலக்கும்...” ஜீவ அணுக்களாக மாற்றுகின்றது.
1.இது தான் மூலம் என்பது... மூலாதாரம் என்பது...!
2.அங்கே உயிரணுக்கள் தோற்றுவிக்கும் நிலைகள் வருகிறது என்றால்
3.இது வைத்தியரீதியில் அகஸ்தியன் கண்டது.

ஆக்கினை என்றால் நாம் எதை நுகர்கின்றோமோ இந்த உயிரின் தன்மை அங்கே ஆன பின் இந்த உணர்வுகள் நமக்குள் இயக்குகின்றது. இதையாவது குறைந்தபட்சம் தெரிந்து கொண்டால் பரவாயில்லை.

ஆக்கினை என்றால் நம் உணர்வின் தன்மை இதிலிருந்து (உயிரிலிருந்து) தான் ஆணையிடுகின்றது. இங்கே மூலாதாரத்தில் மாற்றுகின்றது என்று இந்த உணர்வின் தன்மையைத் தனக்குள் கொண்டு வரும் பொழுது அவர்கள் வித்தியாசமான நிலைகளில் கீழிருந்து என்று மாற்றிக் கொண்டு போகிறார்கள்.

1.மூலாதாரம் என்றால் நம் உயிர் மூலம்.
2.நாம் நுகரும் உணர்வுகளே ஆதாரம்.
3.ஆக எந்த உணர்வின் தன்மையோ அந்த ஆதாரத்தின் வழி கொண்டு தான்
4.இந்த உணர்வுகள் இயக்குகிறது என்று சாஸ்திரங்களும் வேதங்களும் கூறும் நிலைகள்.

இதிலே கண்ணன் மூலாதாரத்தைப் பற்றிக் கூறுகின்றான் என்று சொல்வார்கள். அவன் கூறிய மூலாதாரம் வேறு..! நுகர்ந்த உணர்வின் தன்மை எதனை.. எப்படி இயக்குகிறது...? என்பதை
1.எண்ணம் கொண்டு இந்தக் கண்கள் உண்டானது
2.கண்கள் கொண்டு எண்ணங்கள் உண்டானது
3.இப்படி ஒன்றுடன் ஒன்று எப்படி இணைந்தது என்று கீதையிலே இது தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

இந்த உணர்வுகளை இவர்கள் வேறு விதமாக அவரவர்களுக்குத் தக்கவாறு மாறி “குண்டலினி யோகா... இராஜயோகா...” என்று பேர்களை மாற்றிக் கொண்டு ஆசனத்தை எடுத்துக் கொண்டாலும் இப்படிப் பல நிலைகளைக் கொண்டு வருகின்றனர்.

இதிலே வேதங்களில் மந்திரங்கள் கூறப்பட்டிருக்கும். மறைமுகமான மந்திரங்களை இவர்கள் சொல்லி விட்டால் இன்னொரு உடலில் பெற்ற உணர்வுகள் இவருக்குள் பதிந்து இந்த மந்திரத்தின் உணர்வும் அதே நிலைக்குப் பதிவு செய்தால் அதே உணர்வு கொண்டு அங்கே இயக்கும்.

ஏனென்றால்...
1.மந்திரங்கள் என்பது மனிதன் உணர்வை மீண்டும் தனக்குள் கவர்வது என்று பொருள்.
2.ஒரு மனிதன் உணர்வைப் பாய்ச்சப்பட்டு அதை அடக்கித் தனக்குள் கவர்ந்து கொள்வது என்பது அதர்வண வேதம்.

கோவில்களிலும் மற்றவைகளிலும் யாகங்கள் செய்வார்கள். அங்கே பல புகை மண்டலங்களை எழுப்பி அவன் சொல்லும் சொல்களை நாம் கூர்ந்து கவனிப்போம். ஆனால் கல்லுக்குச் சக்தி ஏற்றுவதாக நாம் நினைக்கின்றோம்.

ஆனால் நாம் கேட்டுணர்ந்து... நம் செவிகளில் பட்டு... அந்த உணர்வின் தன்மையை நுகர்ந்து... நமக்குள் ஒரு அணுத் தன்மையாக ஆகும் நிலையைக் கொண்டு வருகின்றனர்.

ஆகவே அவன் சொல்லும் உணர்வை நாம் அதிகமாகப் பெருக்கப்படும் பொழுது இந்த அணுக்களின் தன்மை வந்துவிடுகின்றது.
1.இப்படித்தான் அதர்வண வேதத்தில் ஒரு மனிதனின் உணர்வை மயக்கி அதாவது வசியம் செய்வார்கள்.
2.அடுத்து அந்த மனிதன் இறந்த பின் அதே மந்திரத்தைச் சொன்னால் கைவல்யம்.
3.பின் இந்த உணர்வின் தன்மை சொல்லாக வெளியிடப்படும் பொழுது ஏவல்..!

இப்படித்தான் மூலாதாரத்தில் என்று சொல்லிக் கொண்டிருப்பவர்கள் தொட்டவுடனே இதை ஏவல் பண்ணிவிடுவார்கள். நாம் கூர்ந்து கவனித்து அதன் மேல் நாட்டத்தைச் செலுத்தும் பொழுது செய்து விடுகின்றனர்.

ஆனால் யாம் இப்பொழுது இங்கே சொல்லப்படுவது உங்கள் நினைவு அனைத்துமே இயற்கையாக விளையும் தன்மைகளில் அங்கே சென்றடைகின்றது.
1.அந்த ஞானிகளின் அருள் உணர்வின் தன்மை அங்கே (உயிரிலே) ஆக்கினையாக மாறி
2.உடலுக்குள்அது கருத்தன்மை அடைகின்றது.

அந்த ஒளியின் உணர்வாக உயிர் எப்படி ஆனதோ அந்த உணர்வின் தன்மை பெறுவதற்காக வேண்டி இதைச் செய்கிறோம். ஏனென்றால் உங்களை அந்தத் துருவ நட்சத்திரத்திற்கே அழைத்துச் செல்கிறேன்.

அதிலிருந்து வரும் உணர்வுகள் ஒன்றி வரும் இந்த நேரத்தில் அதன் உணர்வுகள் அந்த அகஸ்தியன் எப்படித் துருவனாகித் துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரமானானோ அதன் உணர்வை உங்களைப் பெறச் செய்வதற்கே உங்கள் நினைவாற்றலை இங்கே பரவப்படும் பொழுது அந்த உணர்ச்சிகளைத் தூண்டியவுடன்
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் உங்கள் ஆன்மாவாக மாறுகின்றது.
2.பின் அந்த நுகர்ந்த உணர்வுகள் அணுத் தன்மை அடைகின்றது.

இந்த அணுத் தன்மை உங்கள் உடல்களில் பெருகி விட்டால் உங்கள் ஆன்மாவில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் பெருகுகின்றது. அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் பெருகிவிட்டால் பகைமை என்ற நிலைகளைத் தடுத்து நிறுத்தும்.

இந்த உடலுக்குப் பின் ஏகாந்த நிலை கொண்டு... அண்டத்திலே என்றுமே ஒளியின் சுடராக.. “அழியாத நிலைகளில் வாழத் தொடங்கும்...!”