ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 16, 2019

தானாக இருந்து நானாக இயங்குகின்றோம் என்பதை மாற்றி “உயிருடன் ஒன்றிய நானாக… இயங்க வேண்டும்…!”


நான் இல்லை நீ இல்லா இவ்வுலகில்... எல்லா நினைவையும் பெற்றிட அருள்வாய் ஈஸ்வரா…! என்று நம் உயிரை வேண்டிப் பாடுகின்றோம்.

இந்த உடலில் “உயிர் இல்லை…!” என்றால் நான் இருக்க முடியுமோ...?

அதைத் தான் “நான் இல்லை… நீ இல்லா இவ்வுலகில்…!” இந்த உயிர் இல்லை என்றால் இந்த உடலான உலகில் நான் இருக்க முடியாது.

நான் இல்லை நீ இல்லா இவ்வுலகில் எல்லா நினைவையும் பெற்றிடவே எனக்கருள் செய்வாய் ஈஸ்வரா..! “எல்லா நினைவு…!” என்றால் அதனுடைய பொருள் என்ன…?

இந்த உயிர் தான் புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் எத்தனயோ கோடிச் சரீரங்களைப் பெற்று
1.எத்தனையோ கொடுமையிலிருந்து நீக்கிட வேண்டும்…
2.வேதனைகளிலிருந்து விடுபட வேண்டும்… தப்ப வேண்டும்…! என்று
3.தீமைகளை அகற்றி… அகற்றி… இன்று தீமைகளை அகற்றிடும் நம்மை மனிதனாக உருவாக்கிய இந்த நிலையில்
4.எதை எல்லாம் நீக்கிட வேண்டும் என்று நாம் எண்ணினோமோ..
5.இந்த மனித வாழ்க்கையில் வரும் “தீமை என்ற நிலைகளை நீக்கிடும் அருள் சக்தி பெறவேண்டும்….!”

ஏனென்றால் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலேயும் ஒவ்வொரு உடலிலேயும் ஒவ்வொரு விதமான உணர்வுகளிலிருந்து நான் தப்பித்தேன்…!
1.அதைப் போன்று இந்த மனித வாழ்க்கையிலும் வரும் தீமைகளிலிருந்து நான் விடுபட வேண்டும்
2.அந்த அருள் சக்தி நான் பெறவேண்டும்…! என்று
3.உயிரான ஈசனிடம் வேண்டுவது தான் இந்தப் பாடலின் உட்பொருள்.

புழு பூச்சிகளிலிருந்து பல கோடிச் சரீரங்களைக் கடந்து… தீமைகளைக் கடந்து… தீமைகளை நீக்கிடும் மனித உடல் பெற்றோம், இந்த மனித உடலோ நாம் உணவாக உட்கொள்ளும் உணவுக்குள் மறைந்து வரும் நஞ்சினை மலமாக மாற்றுகின்றது.

உணவில் மறைந்த நஞ்சை உடல் மாற்றுவது போல்…
1.நஞ்சென்ற உணர்வுகள் (தீமைகள்) தெரிந்த பின் நஞ்சை நீக்கிடும் அந்த அருள் சக்தி…
1.என் நினைவில் வர வேண்டும் ஈஸ்வரா
2.எல்லாவற்றையும் உருவாக்கியது நீயே...!
3.நான் எண்ணியதை இயக்குவதும் நீயே…!
4.நான் எண்ணியதை உடலாக்குவதும் நீயே…!
5.எண்ணியதை உடலாக்கிய பின் இந்த உடலை ஆள்பவனும்… ஆண்டவனாக இருப்பதும் நீயே…!

ஆகவே இந்த உணர்வின் சக்தியை… நாம் நமக்குள் எப்படி இயங்குகின்றோம்…? என்பதையும் நான் என்பது யார்..! என்ற சிந்தனைக்குரிய நிலைகளை நாம் எண்ணி எடுத்தால் நமது உயிரின் தன்மை அதை இயக்குகின்றது

1.”நான்…” எண்ணும் செயல்கள் நான் ஆகின்றது.
2.உயிருடன் ஒன்றி… அந்த உணர்வின் தன்மை அது இயக்கப்படும் பொழுது - உயிருடன் ஒன்றிய “நான்” ஆகின்றது.
3.ஆனால் (மற்ற நேரங்களில்) நாம் எடுக்கும் உணர்வு தானாகின்றது.
4.அந்தத் தான்… நான் (உயிருடன் ஒன்றிய) ஆக வேண்டும்.

உதாரணமாக கோபமாக நாம் எடுத்தால்.. தான் இயங்குகின்றேன்… இயக்குகிறேன்…! என்று தான் வருகின்றது.

இருந்தாலும்… உயிரோ ஒளி என்ற உணர்வை ஊட்டுகின்றது.
1.அந்த ஒளி என்ற நிலைகளை ஊட்டப்படும் பொழுது அதை நுகர்ந்து
2.இருளை நீக்கிய பின்… தான் - நான் (ஒளியாக) ஆகின்றேன்..!
(சொல்வது அர்த்தமாகிறதல்லவா…!

ஆகவே இந்த உயிருடன் ஒன்றி அந்த ஒளியின் சரீரமாக ஆகும் அந்தச் சக்தி நாம் பெறுகின்றோம்…! என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.