ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 18, 2019

நமக்குள் ஈசன் இருக்கின்றான்..! என்று ஒவ்வொரு நிமிடமும் நாம் நினைக்கின்றோமா...?


நான் நல்லதைச் செய்வேன்... அதைச் செய்வேன்.. இதைச் செய்வேன்...! என்று சொல்லி நாம் நல்லதையே எண்ணுவோம்...! இருந்தாலும்
1.ஒருவர் வேதனைப்படும் பொழுது அந்த ரெக்கத்தில் நாம் பரிபக்குவமாக நடந்து கொள்ள வேண்டும்.
2.நம் சொல்லைச் சொல்லும் பொழுது பிறரை வேதனைப்படும் நிலைக்கு உருவாக்காதபடி அதிலே பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும்.

நோயுடன் ஒருவர் மிகவும் சிரமப்படுகின்றார் என்று வைத்துக் கொள்வோம். அப்பொழுது அந்தப் பேரருள் என்ற உணர்வை நமக்குள் வலுக் கூட்டி எடுத்துக் கொண்டு
1.அந்த அருள் ஒளி அவர் பெறவேண்டும்
2.அவர் உடலில் அறியாத இருள்கள் நீங்க வேண்டும்
3.அவர் உடல் நலம் பெறவேண்டும் என்று எண்ணினால் இது “பரிபக்குவம்...!”

வடையைச் சுடுகின்றோம் என்று வைத்துக் கொள்வோம். எண்ணெய் சரியாகச் சூடு ஆகாதபடி மாவைத் தட்டிப் போட்டால் என்ன ஆகும்..? எண்ணையைப் பூராம் குடித்துவிட்டு வடையின் ருசி கெட்டுப் போகும்.

இதைப் போல் தான் நாம் நல்ல மனம் கொண்டு ஒரு மனிதன் நோயால் வாடுகின்றான் என்று உதவி செய்தாலும் அவரின் வேதனையைப் பக்குவம் தவறி நாம் கேட்டுணர்ந்தால்
1,அந்த உணர்வுகள் நமக்குள் சென்று நம் உடலுக்குள்ளும் நோயைத் தான் உருவாக்கும்.
2.நம் நல்ல மனமும் சுவை கெட்டுப் போகும்.
3.நல்ல குணத்தின் இயக்கமும் கெட்டுவிடும்.

ஆகவே நாம் என்ன செய்ய வேண்டும்..?

காலை துருவ தியானத்தில் எடுத்துக் கொண்ட துருவ நட்சத்திரத்தின் வலு கொண்டு உயிரான ஈசனைப் புருவ மத்தியில் ஈஸ்வரா...! என்று வேண்டி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா...! என்று இந்த உணர்வைக் கூட்டி அதைச் சுவாசித்து நம் உடலுக்குள் செலுத்த வேண்டும்.

ஏனென்றால் அவருடைய வேதனையை நாம் முதலில் கேட்டறிந்தோம். இந்த உணர்வுகள் நமக்குள் போகாதபடி தடுத்து நிறுத்த வேண்டும்.

இந்த வலுவின் தன்மை கொண்டு துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் அவர் உடலில் படர வேண்டும்... அவர் நோய் நீங்கி உடல் நலம் பெறவேண்டும்...! என்றால் இது பக்குவ நிலை கொண்டு அவருடைய மனதைத் திருத்தவும் நமக்குள் அந்தச் சுவை மிக்க உணர்வை நமக்குள் உருவாக்கவும் உதவும்.

வாழ்க்கையில் அதைச் (நல்லதை எல்லாம்) செய்வேன்...! சொல்லி விட்டுத் திடீரென்று என்ன செய்வார்கள்...? எல்லாம் செய்து கொண்டே இருப்பார்கள். கடைசியில்...
1.நான் எல்லா நன்மையும் அவனுக்குச் செய்தேன்...
2.ஆனால் பதிலுக்கு இப்படிச் செய்கிறான் பார்...! என்று நாம் கோபமாக மாறும் பொழுது
3.இது எல்லாமே போய்விடுகின்றது... இருள் சூழ்ந்துவிடுகிறது.

ஆகவே இதைப் போன்ற நிலைகளை வராதபடி இந்த வாழ்க்கையிலே நாம் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும்.

அதாவது “நல்லதைத் தான் செய்வேன்...!” என்ற பாட்டைப் பாடிவிட்டு மற்றவர்களின் குறைகளையும் வேதனைகளையும் நமக்குள் புகாதபடி தடுத்துக் கொள்ளும் அந்தப் பரிபக்குவ நிலையை எனக்கு அருள் செய்வாய் ஈஸ்வரா...! என்று உயிரிடம் வேண்டிக் கேட்க வேண்டும்... அந்த அருளைப் பெற்றுப் பழக வேண்டும்.

என் நினைவை எங்கெங்கோ அலைய விட்டு என் ஆசை என்னுள்ளே வளர்ந்திடாமல்... என்னுள்ளே என்றும் நீ இருந்துவிடு ஈஸ்வரா...!

அதாவது...  
1.நாம் இந்த வாழ்க்கையில் அதைச் செய்ய வேண்டும்... இதைச் செய்ய வேண்டும்... அப்படிச் செய்ய வேண்டும்... என்றெல்லாம் விரும்புவோம்
2.அந்த ஆசையினால் நாம் என்ன செய்கிறோம்..?
3.நமக்குள் தீமை என்ற உணர்வுகளும் வந்து சேர்ந்து விடுகின்றது.

தீமை என்ற உணர்வுகள் வரப்படும் பொழுது நம்மை நாம் மறந்து விடுகின்றோம்...
1.இந்த உடலின் ஆசை தான் நமக்குள் வருகின்றது.
2.நமக்குள் உயிரான ஈசன் இருக்கின்றான்..! என்ற நிலையையே மறந்து விடுகின்றோம்.

வேதனை என்ற உணர்வை எடுக்கும் பொழுது அந்தச் சிவனாக உருவாக்கிய இந்த உடலில் கடும் வேதனையை உருவாக்குகின்றது.

ஈசனால் உருவாக்கப்பட்ட உடல் என்ற கோவிலில் அசுத்தத்தைத் தான் நிரப்புகின்றோமே தவிர
1.அந்த ஈசனான நிலைகளை நாம் வணங்க மறுக்கின்றோம்.
2.அவன் அறிவை எடுத்து நாம் தெளிவாகும் நிலையை இழந்து விடுகின்றோம்.

ஆகவே நாம் இந்த உடலின் இச்சைக்கு வாழாதபடி
1.இருளை அகற்றும் அருள் சக்தி பெறவேண்டும் என்றும்
2.எனக்குள் இருக்கும் அணுக்கள் அனைத்தும் ஒளி நிலை பெற வேண்டும் என்றும்
3.உயிர் எவ்வாறோ... நீ எப்படி ஒளியாக இருக்கின்றாயோ... என் உணர்வுகள் அனைத்தும் அந்த ஒளிமயமாக மாறுதல் வேண்டும் என்றும்
4.உயிருடன் ஒன்றிடும் நிலையாக நம்முடைய வாழ்க்கையை அமைத்து
5.என்னுள்ளே என்றும் நீ இருந்துவிடு ஈஸ்வரா...! என்று உயிரான ஈசனிடம் வேண்டிக் கேட்க வேண்டும்.