ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 2, 2019

நம்மைக் காக்கக்கூடிய “ஒரே சக்தி வாய்ந்த தெய்வம் யார்...?” என்று உணர்ந்து கொள்ளுங்கள்


1.நம்மைப் பெற்றெடுத்த தாயை... அந்தக் காப்பாற்றிய தெய்வத்தை மறந்தால்
2.நமக்கு நல்ல வழியைக் காட்டிய குருவை மறந்தால் எங்கே சென்றாலும் நல்லதை எடுக்க முடியாது.
3.“இதை ஒவ்வொருவரும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்...!”

தாய் தந்தையர் இன்று எத்தனை பேர் என்ன செய்கிறார்கள்...? வளர்ந்து சம்பாதித்துச் சொத்தைச் சேர்த்த பின் அனாதை இல்லத்தில் தான் இருக்கின்றர்கள்,

அங்கே இருந்தாலும் கூட பென்சன் (PENSION) வாங்கப் போனால் உனக்கு எதற்கு இவ்வளவு காசு...? ஐநூறு அறுநூறு பத்தாதா..? என்று சொல்லி அந்தப் பணத்தையும் தட்டிப் பறிப்பதற்குத் தான் குழந்தைகள் இருக்கின்றார்கள்.

உழைத்தேன்... பிள்ளைகளை வளர்த்தேன்... படிக்கச் செய்தேன் என்று தாய் தகப்பன் இருந்தாலும் இன்று இந்த மாதிரி நிறைய நடக்கின்றது.

 நான் ஆடம்பரமாக வாழ வேண்டும்.. உனக்கு என்ன வேலை…? என் பிள்ளைகளை வளர்க்கப் பணம் வேண்டியிருக்கிறது உனக்கு எதற்குப் பணம்..? என்று கேட்பார்கள்... கொடுக்கவில்லை என்றால் உதைப்பதற்கு வந்துவிடுவார்கள்.

ஒரு தகப்பன் பணத்தைச் சம்பாரித்துப் போட்டு எல்லாப் பிள்ளைகளுக்கும் கொடுத்து விட்டு கொடுத்த பிற்பாடு மூன்று இலட்சம் பணம் அவர் கையில் இருக்கிறது...!

அந்தப் பணத்தால் உனக்கென்ன வேலை..? உனக்கு மாதம் தர வேண்டிய பணத்தை நான் தருகிறேன். ஆகையினால் அதைக் கொடுத்துவிடு என்று கேட்கிறது பிள்ளை.

கொடுத்தால் அதற்கப்புறம் அவருக்குச் சோறு போடுவார்களா…? இந்த மாதிரியே சொல்கிறார்கள். இது நடந்த நிகழ்ச்சி. இது எல்லாம் இன்று கொடுமையிலும் கொடுமை...!

ஏனென்றால் இந்த அரக்க உணர்வுகள் தாய் தந்தையை மறக்கச் செய்கிறது.

யாம் (ஞானகுரு) சொல்லும் முறைப்படி தாய் தந்தையரை வணங்கி எண்ணினால் ஒரு காட்டுக்குள்ளேயே சென்றாலும் புலியே தாக்க வந்தாலும் அம்மா...மா...! என்று சொன்னால் போதும். அந்தப் புலி உங்களைத் தாக்காது... அனுபவத்தில் தெரிந்து கொள்ளலாம்.

அதுமட்டுமல்ல..! நீங்கள் இருக்கும் தெருவுக்குள் ஒரு நாயே வருகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். ஐய்யய்யோ ஐய்யயோ முருகா...! என்று சொன்னாலும் கூட “லபக்” என்று பிடிக்கும்.

நாய் கடிக்க வரும் பொழுது அம்மா...! என்று சொல்லுங்கள். உங்களைக் கடிக்கிறதா...? என்று பாருங்கள். பரிசீலித்துப் பாருங்கள். யானையே வந்தாலும் சரி...!
1.அந்தத் தாயின் பாச உணர்வுகள் உங்கள் உடலில் இருக்கிறது.
2.உடனே குவித்து உங்களுக்கு முன்னாடி வரும்.
3.யானை அந்தத் தாய்ப் பாசம் கொண்டது..
4.இந்த உணர்வுகளின் மணம் பட்டவுடன் உங்களைத் தாக்காது.

உங்கள் தொழிலிலே பெரும் சங்கடமாக இருந்தால் எந்தச் சாமியாரையோ நினைப்பதைக் காட்டிலும் யாம் சொன்ன முறைப்படி உங்கள் தாயை வணங்கினால்...
1.அம்மா...மா...! என்று சொல்லி ஏங்கி
2.இந்தச் சிக்கலிலிருந்து விடுபடும் வலிமையும் அந்தச் சிந்திக்கும் ஆற்றலும் கிடைக்க வேண்டும் என்று உங்கள் தாயை எண்ணிப் பாருங்கள்.
3.அந்தத் தாயின் உணர்வுகள் உங்களுக்குள் எவ்வளவு வேலை செய்யும் என்று நீங்கள் காணலாம்.
4.தாயைப் பேணிக் காக்கும் முறைகளைத் தான் ஞானிகள் காட்டியுள்ளார்கள்.

எந்தக் கோவிலுக்குச் சென்றாலும் அம்மா அப்பா அருளால் அந்த உயர்ந்த சக்தி பெறவேண்டும் என்று எண்ணும்படி ஞானிகள் சொல்லியிருந்தாலும் அதை எல்லாம் மறந்தே தான் இன்று நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

கோவிலுக்கு வாப்பா…! என்று சொன்னாலும் “உனக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறது... நீ போ...!” என்று சொல்லக்கூடிய காலமாக இன்று உள்ளது.

அரக்க உணர்வு மனிதரிலிருந்து தாயையே இரக்கமற்றுக் கொல்லும் நிலை வருகிறது. இரக்கமற்றுத் துன்புறுத்தும் தன்மை வருகிறது... இதை எல்லாம் நாம் பார்த்துக் கண்ணீர் விடும் நிலை இருக்கின்றது.

ஒரு தாய் கர்ப்பமாக இருக்கும் பொழுது எத்தனை அவஸ்தைப்படுகிறது..? பிறந்த பின் அந்தக் குழந்தையை வளர்க்க எத்தனை அவஸ்தை...? வளர்ந்து வரும் நிலையில் அவனைக் காக்க எத்தனை அவஸ்தை..? பிள்ளை கல்வி கற்க எத்தனையோ கடனை வாங்கிச் சிரமப்பட்டுப் படிக்க வைக்கின்றார்கள்… அதில் எத்தனை அவஸ்தை…?

இருந்தாலும் தன் பையன் கற்ற பின் அவனுடைய நிலைகளைப் பார்க்கும் பொழுது அந்தத் தாயின் நிலைகள்... கண் கொள்ளாத நிலைகள்.

ஞானிகள் காட்டிய நிலைகளைத் தவிர்த்ததனால் இன்று இதிலே படக்கூடிய வேதனைகள் ஏராளம்... ஏராளம்...!

என் (ஞானகுரு) அம்மாவைப் பற்றி நான் நினைக்கும் பொழுது எனக்கு (ஞானகுரு) அழுகை வந்துவிடும். காரணம்...
1.அந்தத் தாய் என்னைக் காத்த நிலைகள் கொண்டுதான்
2.இதை எல்லாம் (அத்தனை மெய் ஞானிகளையும்) அறிய முடிந்தது,
3.தாயின் உணர்வைச் சேர்த்துக் கொண்டதனால் தான் வருகிறது.

என் அம்மாவுக்கு உடல் நிலை சரியில்லை என்றால் பெண் பிள்ளை மாதிரி நான் தான் சமைத்துக் கொடுப்பேன். எதுவாக இருந்தாலும் என் தாயுடன் ஒட்டியே இருப்பேன்.

என் அம்மாவுக்கும் பாட்டிக்கும் (அப்பாவைப் பெற்றவர்) சண்டை வந்துவிடும். என் பாட்டி அம்மாவைக் கண்டபடி பேசும். ஒரு சமயம் என் அம்மா அதைக் கேட்டுக் கோபித்துக் கொண்டு கிணற்றில் விழுந்துவிட்டது.

எனக்கு ஒன்பது வயது இருக்கும். ஓடிப் போய்க் கிணற்றில் குதித்து என் அம்மாவைக் காப்பாற்றித் தூக்கிக் கொண்டு வந்தேன். அதற்கப்புறம் என் அம்மாவை நான் பிரிந்திருக்கவில்லை. ஏனென்றால் ஏதாவது சொன்னால் மறுபடியும் விழுந்துவிடுமே என்று…! தாயின் பாசத்தை தாய் எனக்கு உணர்த்தியிருக்கின்றது.

அந்த உணர்வின் தன்மை கொண்டு வரப்படும் பொழுது ஒவ்வொருவரும் கடவுளைத் தேட வேண்டியதில்லை.
1.நம்மை உருவாக்கிய தாய் தான் கடவுள்…!
2.நம்மைத் தெய்வமாகக் காத்தது இந்தத் தாய் தான்…!
3.குருவாக இருந்ததும் தாய் தான்.

அதனால் இதை எல்லாம் நீங்கள் மனதில் வைத்து இன்று விஞ்ஞான உலகம் அஞ்ஞான வாழ்க்கையில் போய்க் கொண்டிருக்கும் பொழுது மெய் ஞானிகள் காட்டிய அருள் வழி கொண்டு தாயின் பேரன்பு கொண்டு அதை உங்களுக்குள் சேர்த்துப் பழகுங்கள்.

எதிலேயும் எந்த நிலையானாலும் அம்மா அப்பா அருளால் இந்தச் செயல் நன்றாக இருக்க வேண்டும் என்று தொடர்ந்து செய்து வாருங்கள்.
1.சிக்கல் வரும் பொழுது அம்மாவை எண்ணுங்கள்
2.இந்தச் சிக்கலிலிருந்து விடுபட எனக்கு ஒரு நல்ல உபாயம் வேண்டும் என்று எண்ணுங்கள்.

அந்தத் தாயின் உணர்வு இருப்பதால் அதே உணர்வு எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக்
1.தாய் நம்மைப் பேணிக் காத்த உணர்வு நமக்கு ஞானத்தை ஊட்டி
2.தப்பிக்கும் உபாயத்தையும் மார்க்கத்தையும் காட்டும்.

யாராவது நமக்கு இடைஞ்சல் செய்கிறார்கள் என்றால் இதே உணர்வு வந்து ஊக்கம் ஊட்டி நம்மை அவர்கள் தாக்காதபடி காக்கவும் செய்யும். எதிரிகள் எத்தனையோ நிலைகள் இருந்தாலும் தாய் எண்ணியிருந்தால் தாக்கக்கூடிய உணர்வையே மறைக்கக்கூடிய சக்தி இருக்கின்றது.

அதே போல் தாய்மார்களும் என்ன செய்ய வேண்டும்…?

குழந்தைகளுக்கு ஞானத்தை ஊட்ட வேண்டும். ஏனென்றால் பிள்ளைகள் தவறி விடுகிறது. அதை எல்லாம் எண்ணியபின்
1.பையன் சொன்னபடி கேட்கவில்லை என்று கோவிலில் போய் வேதனையைத் தான் படுகின்றோம்.
2.அவனை எண்ணி வேதனையைத் தான் வளர்க்கிறோம்.

இதைப் போன்ற நிலைகள் எல்லாம் மாற்றி என் குழந்தைகள் மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று.. கல்வியில் சிறந்த ஞானம் பெற்று... உலக ஞானம் பெற்று... “உலகைக் காத்திடும் மெய் ஞானிகளாக வளர வேண்டும்...” என்று இன்று விஞ்ஞான உலகிலிருந்து மீட்டிக் கொள்வதற்கு நாம் இந்த முறைப்படி அவசியம் எண்ணித் தான் ஆக வேண்டும்.