ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 17, 2019

எளிதான பயிற்சி மூலம் “சிறு மூளையிலிருந்து கால் பெரு விரல் வரை நரம்புகளை உற்சாகப்படுத்தி…” முழுமையான உடல் நலம் பெறலாம்


உதாரணமாக உட்கார்ந்தே வேலை செய்கிறோம் உட்கார்ந்தே இருக்கின்றோம் என்று சொன்னால் உடலை உற்சாகப்படுத்த அதற்கு ஒரு பயிற்சியைச் செய்யுங்கள்.

ஓய்வு கிடைக்கும் பொழுது ஒரு ஐந்து நிமிடமாவது இந்தப் பயிற்சியைச் செய்யலாம்.
1.ஈஸ்வரா…! என்று புருவ மத்தியில் உங்கள் உயிருடன் தொடர்பு கொண்டு
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பால் மேல் நோக்கிப் பார்த்து உங்கள் நினைவைச் செலுத்துங்கள்.
3.அந்த அருள் பெறவேண்டும் என்று ஏங்கிச் சுவாசியுங்கள்.
4.மேல் நோக்கி ஏங்கும் பொழுது நாம் சுவாசிக்கும் உணர்வுகள் நம் நுரையீரலிலும் மற்ற உறுப்புகளிலும் அதிகமாகப் பெருக நேருகிறது.

எனக்குக் கழுத்து பிடித்துவிட்டது…! என்று சிலர் சொல்வார்கள். டாக்டரிடம் போனேன். என் எலும்பு தேய்ந்து விட்டது… என்று சொல்லி விட்டார்…! என்பார்கள்.

இது எல்லாம் நம் நரம்பு மண்டலங்களில் ஏற்படும் சில நிலைகள்…
1.அதனுடைய வலுத் தன்மை இல்லாததால்
2.இந்த அழுத்தம் (பிடிப்பு) நமக்குள் அதிகமாக வருகின்றது.
3.அதாவது சுண்ணாம்புச் சத்து (CALCIUM) குறைவு… அல்லது நரம்பு மண்டலங்களில் அந்த வீரியத் தன்மை குறைந்திருந்தால்..!

அதற்கு உற்சாகம் ஊட்ட வேண்டும் என்றால் காலை நேராக நீட்டிக் கொள்ளுங்கள். அப்படியே உங்கள் கைகள் இரண்டையும் மேலே உயர்த்துங்கள் காதை ஒட்டி (படத்தில் காட்டியபடி).

அப்படியே மெதுவாக கைகளை முன்னாடிக் கொண்டு போங்கள் (காலை நோக்கி). உடனே செய்ய வேண்டும்… காலைத் தொட வேண்டும் என்று அவசரப்படாதீர்கள்.
1.அந்த மெதுவாகக் கொண்டு போகும் நிலையில்
2.எவ்வளவு தூரம் கொண்டு போய் வளைய முடியுமோ.. வளையுங்கள்.

வளையும் பொழுது ஈஸ்வரா…! என்று உயிரை எண்ணி துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து எங்கள் உடலில் படர வேண்டும் என்ற நினைவினைச் செலுத்தி அந்த மூச்சினை இழுங்கள்.

இப்படி மெதுவாக இரு ஐந்து அல்லது ஆறு தடவை செய்யுங்கள். இப்பொழுது…
1.உங்களுக்குள் சிறு மூளையிலிருந்து இந்தப் பெருவிரல் வரையிலும் அந்த நரம்புகளை ஓரளவுக்குச் சீராக இயக்க முடியும்.
2.முதுகை வளைத்து முன்னாடி வளையும் பொழுது…!
3.உடலில் உள்ள பிடிப்பெல்லாம் போய்விடும்.

இதெல்லாம் சுலபமான பயிற்சி.

உங்களுக்கு வாக்குக் கொடுத்ததை நீங்கள் சீராகப் பயன்படுத்தினால் உடலில் உள்ள சலிப்பு சோர்வு நோவு எல்லாம் நீங்கிப் போகும்.

சிலர் அடிக்கடி வேதனைப்பட்டு சலிப்புப்பட்டு கோபப்பட்டுக் கொண்டே இருப்பார்கள். அந்த உணர்வுகளைப் பார்த்த பின் இதே உணர்ச்சிகள் கண்ணின் கருவிழியான படமாக்கும் உணர்வுகளில் பட்டு
1.அதனின் இயக்கமாக அதை ஒட்டி உள்ள நிலைகளில் பலவீனமடைந்திருக்கும்…
2.கண் எரிச்சல்… கண் மங்கல் எல்லாம் இருக்கும்.
3.அப்படிப் பலவீனம் அடைந்தால் நாம் எதையுமே சீக்கிரம் கிரகித்து இழுக்கும் சக்தி அங்கே குறையும்.

அதற்கும் இதே போல் காலை நீட்டிச் சிறிது நேரம்
1.“தம் அடக்கி… தம் பிடித்து…”
2.இரண்டு கைகளையும் அப்படியே கொண்டு வந்து கால் பெரு விரலைத் தொட்டு
3.கொஞ்ச நேரம் அப்படியே அந்த மூச்சை விட்டு மூச்சை வாங்குங்கள்…!

அந்த நேரத்தில் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும்.. அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று ஏங்குங்கள். அந்த உணர்வுகள் உங்கள் உடலுக்குள் பாய்ந்து சிறு மூளையிலிருந்து எல்லாப் பாகங்களுக்கும் அந்த உணர்ச்சிகளைத் தூண்டும்.

கை கால் குடைச்சலாக இருந்தால் எழுந்து நின்று கையை மேலே தூக்கிக் கொள்ளுங்கள். குடைச்சல் இருந்தது என்றால் இந்தப் பயிற்சியைச் செய்யுங்கள். ஏனென்றால் சில நேரங்களில் உடல் பாகங்களில் சில வாயுத் தன்மை அடைத்திருந்தால் ஒரு விதமான வலி ஏற்படும்.

மருத்துவரிடம் சென்றால் ஹார்ட் அட்டாக்… இரத்தக் குழாய் அடைத்திருக்கிறது…! என்று கூடச் சொல்லி விடுவார்கள்,

அந்தத் துருவ நட்சத்திரத்தை எண்ணி மூச்சை ஒரு ஐந்து தடவை இழுத்து விடுங்கள். அப்படிச் செய்யும் பொழுது இந்த இருதய வாயிலுனுடைய நிலைகள் இழுக்கப்படும்.

இருதய பாகத்தை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை அங்கே செலுத்தப்படும் பொழுது இந்த உணர்வுகள் நுரையீரலில் இருதயத்திலும் ஓரளவுக்குப் பரவும்.

அங்கே அடைப்பாகித் திகைப்பாகி இருதயத்தில் வலி இருந்தால் இதே மாதிரி எண்ணிக் கொஞ்சம் மெதுவாக இந்தப் பயிற்சியைச் செய்ய வேண்டும்.
1.மேலே கையைத் தூக்கிக் கீழே வளைகின்றீர்கள்…! என்று சாதாரணமாக நினைக்கின்றீர்கள்.
2.ஆனால் அந்த இருதய வாயிலில் அந்தப் பாகத்தில் இருக்கக் கூடிய அடைப்புகளை அகற்றி
3.இருதயத்தைத் தெளிவாக்கி உங்கள் உடலைச் சீராக்க இது உதவும்.