லவா குசா தன்னுடைய குழந்தைகள் தான் என்று
தெரிந்ததும் இராமன் சீதாவிடம்... “நாம் இனிமேல் சேர்ந்து வாழ்வோம்..!” என்று சொல்கிறான்.
சேர்ந்து வாழ்வது என்பது என்ன...?
எதன் சுவையோ அதனின் உணர்ச்சி தான் இயக்கும்.
ஆக மீண்டும் அந்த உணர்ச்சியின் தன்மை கொண்டால் அதன் வழி வாழலாம்.
பல விதமான உணர்வுகள் ஆகி.. “இந்த வாழ்க்கையில்
பட்டது போதும்...!” என்று இந்தப் பூமா தேவி என்ன செய்கின்றது...?
நெருப்பில் புகுந்து வந்த பின்... பூமா தேவி
சீதாவிடம் “நீ பட்ட அவஸ்தை போதும்... என்னிடமே நீ வந்து ஐக்கியமாகிவிடு...!” என்று
அழைப்பதாகக் காவியத்தில் கொடுத்துள்ளார்கள்.
மனித உடல் பெற்ற நிலையில் இந்த உணர்வின்
தன்மை வந்து வாழ்க்கையில் பல பல நிலைகள் ஆகி
1.எந்தச் சுவையின் (குணங்கள்) தன்மை ஈர்ப்பாக
ஆனதோ
2.அதிலே அந்த மகிழ்ச்சியின் உணர்வுகள் ஆன
பின்
3.எத்தனை எதிர்ப்பு நிலைகள் வருகின்றது...?
உழுது பயிரிட்டு அதிலே விளைந்ததை உணவாகச்
சுவைமிக்க உணர்வின் தன்மை உட்கொண்டு மனித உடலில் வளர்த்த பின் எந்த மண்ணிலே விளைந்ததோ
அந்த மண்ணின் உணர்வைப் பெற்று உடல் மண்ணுக்குள் தான் செல்கிறது.
ஆனால் அந்த உணர்வின் தன்மை ஒளியாகும் உணர்ச்சிகளை
வளர்த்துக் கொண்ட பின் எங்கே செல்கிறது...?
1.உயிர் என்ற விஷ்ணுவின் தன்மை பெற்று
2.வெளியே வந்து பளீர்...! என்று “மின்னும்
சக்தியாகப் பெறுகின்றது...”
3.அவனிடம் போய்ச் சொர்க்கம் அடைகின்றது.
இந்த உடலின் அமைப்பு உருவானதைத் தெளிந்து
கொண்ட நிலையில் பூமா தேவி.. சீதா படும் அவஸ்தையைப் பார்த்து நீ என்னுடன் வா...! என்று
பூமி பிளந்து தனக்குள் இழுத்துக் கொண்டு போகின்றது.
எவ்வளவு தெளிவாகக் கொடுத்துள்ளார்கள் காவியத்தை...!
நன்றாக யோசனை செய்து பாருங்கள்...!
ஒரு உடலில் நோயின் தன்மையை பார்த்து அட பாவமே...!
என்று அதனுடைய வலிமை பெறப்படும் பொழுது “சிவ தனுசு...”
1.நாம் அவனைக் காக்க எண்ணுகின்றோம்.
2.மீண்டும் உடலின் இச்சைக்கே செல்கின்றோம்.
சிவ தனுசை எடுத்தால் உடல் பெறும் உணர்வுகளே
வளரும். நாம் பிறவி இல்லா நிலையை அடைய முடியாது...!
எத்தனையோ கோடிச் சரீரங்கள் பெற்றுத் தீமைகளை
நீக்கிடும் உணர்வின் தன்மையை இருளை நீக்கி ஒளியின் தன்மையாகப் பெற்றது தான் துருவ நட்சத்திரம்.
உயிரின் இயக்கம் வெப்பம் “விஷ்ணு” என்ற நிலையில்
அந்த உணர்வின் தன்மை வரப்படும் பொழுது
1.தீமையை நீக்கிடும் அந்த அருளைப் பெறுவேன்..!
என்று
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எண்ணி
எடுத்துக் கொண்டால் அது “விஷ்ணு தனுசு...”
3.நாம் அங்கே சொர்க்கம் அடைகின்றோம்.
விஷ்ணு இலட்சுமியிடம் கேட்கின்றது. நீ உலகை
அறிய விரும்பினாயே..! நீ பார்... எத்தனை தொல்லைகள் வருகிறது என்று...?
நமது எண்ணத்தால் இந்த மனிதனின் வாழ்க்கையில்
எத்தனை துயரங்கள் இருக்கிறது...? என்பதனைக் காட்டியுள்ளார்கள்.
இதிலிருந்து நாம் விடுபட்டு உயிருடன் ஒன்றி
இனி பிறவியில்லா நிலை என்ற சொர்க்க நிலையை நாம் அடைய வேண்டும்.
1.இந்த உடல் வாழ்க்கையில் வந்த தீய வினைகள்
மண்ணோடு மண்ணாகப் போகட்டும்...!
2.அதை விடுத்து விட்டு உயிரான விஷ்ணு என்ற
உணர்வை நாம் எடுத்து வளர்க்கும்படி உணர்த்துகின்றார்கள்.
‘
ஆகவே அந்த உணர்வின் அறிவாக நமக்குள் வளர்த்துக்
கொண்டால் பிறவியில்லா நிலையை அடைய முடியும் என்பதனைத் தான் இராமாயணத்தில் தெளிவாக கூறப்படுகின்றது.
இந்த அர்த்தமே நாம் தெரியாதபடி வேறு விதமாக
நாம் எங்கேயோ கொண்டு போகின்றோம். மக்களுக்கு இராமாயணத்தைப் பற்றி ஒவ்வொருவரும் நீங்கள்
தெளிவாக்கிடல் வேண்டும்.