ஒருவன் வேதனைப்படுகின்றான் என்று வைத்துக்
கொள்வோம். ஒரு பண்புள்ள மனிதன் அதைப் பார்க்கும் நிலையில் அந்த வேதனைப்படும் உணர்வை
நுகர்ந்த பின் இவனுடைய உணர்வுகளும் இருன்டுவிடுகிறது.
1.அவனைக் காக்க எண்ணுகின்றான்
2.ஆனால் அதே உணர்வு இங்கே இருண்டு விடுகின்றது.
3.அந்த உண்மையை அறிய முடியாத நிலைகளில் இவன்
உடலுக்குள்ளும் அந்த உணர்வுகள் ஊடுருவி விடுகின்றது.
ஆனால் பலருக்கும் இதைப் போல உதவி செய்யும்
நிலையில் பிறருடைய துயரங்களை எண்ணி ஏங்கும் பொழுது அவர்கள் படும் துயரமெல்லாம் இங்கே
வந்து இவன் சிந்திக்கும் தன்மையும் குறையத் தொடங்குகிறது.
ஏற்கனவே நல்லது செய்திருந்தாலும் அதைச் செய்ய
முடியாத நிலைகளில் “எல்லோருக்கும் நல்லது செய்தேன்... என்னை ஆண்டவன் சோதிக்கின்றானே...!”
என்று சொல்லிக் கொண்டு அவன் நல்லதையே செய்வதையே மறக்கின்றான்.
எதைச் செய்து என்ன புண்ணியம்..? அப்படியே
நாசமாகப் போகட்டும்..! அவன் கடைசி உணர்வாக இதை எடுத்துக் கொள்கின்றான்.
ஆகவே இதைப் போன்ற உணர்வு வரப்படும் பொழுது
எந்த நல்லதைச் செய்ய வேண்டும் என்று எண்ணினார்களோ பிறருடைய வேதனைப்படும் உணர்வை நுகரப்படும்
பொழுது நல்ல குணங்கள் அனைத்தும் மடிந்து விடுகின்றது.
பின் அவனைப் போல் வேதனைப்பட்ட உணர்வை நுகர்ந்து
நமக்குள் நோயாகும் நிலையும் தவறு செய்பவனாகவும் மாற்றிக் கொண்டே இருக்கும்.
இதை எல்லாம் மாற்ற வேண்டுமல்லவா..!
இதை எல்லாம் மாற்றி அமைத்தவன் அகஸ்தியன்
துருவனாகித் துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரமாக ஆன அந்த உணர்வை எடுத்து நம் உடலிலே
அடிக்கடி பெருக்குதல் வேண்டும்.
கடும நோயாக இருந்தாலும் இப்பொழுது பதிவு
செய்த இந்த உணர்வின் வலு கொண்டு இந்தக் காற்றிலுள்ள நல்ல மணத்தை நுகரலாம்.
செடி கொடிகள் எந்த உணர்வின் சத்தைப் பெற்றதோ
அந்த உணர்வின் துணை கொண்டு அந்தத் தாய்ச் செடியின் மணத்தைக் காற்றில் கலந்திருப்பதனால்
அதிலே விளைந்த வித்து புவியின் துணை கொண்டு அது கவர்ந்து அதே உணர்வுகள் அதே மணம் அதே
குணமாக வளர்க்கின்றது.
இதைப் போல...
1.அன்று வாழ்ந்த அகஸ்தியன் தன் உடலிலே பல
பச்சிலை மூலிகைகளை எடுத்து
2.அவன் உடலிலே விளைய வைத்த உணர்வுகளைச் சூரியனின்
காந்த சக்தி கவர்ந்து இந்தப் பூமியில் அலைகளாகப் படர்ந்துள்ளது
3.அதை எல்லோரும் பெற முடியும்... அதைப் பெறக்கூடிய
தகுதியாகத் தான் இப்பொழுது உபதேசிக்கின்றோம்.
இந்த உணர்வின் தன்மையைப் பதிவாக்கிக் கொண்டு
உங்கள் நினைவைக் கூட்டினால் அகஸ்தியன் பல நோய்களைப் போக்கிய உணர்வை இந்தக் காற்றிலிருந்து
நீங்களும் பெற முடியும்.
1.அந்த அகஸ்தியன் உணர்வை நுகர்ந்தால்
2.அதிசயக்கத் தக்க நிலைகளில் உடல் உறுப்புகளை
மாற்றமடையச் செய்யும்...
3.அறியாது வந்த நோய்களையும் மாற்றியமைக்கலாம்.
4.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப்
பெருக்கி இந்த உடலுக்குப் பின் ஒளியின் சரீரமும் பெறலாம்.
அதே சமயத்தில் உடலில் சில உபாதைகள் இருக்கும்
பொழுது அந்தத் துருவ நட்சத்திரத்தை எண்ண முடியாது போய்விடுகின்றது. அப்பொழுது அந்த
வேதனை உணர்வுகள் வரும் பொழுது தீய அணுக்களைத் தான் நமக்குள் வளர்க்க முடியும்.
இதைப் போன்ற நிலைகளிலிருந்தெல்லாம் விடுபட
இப்பொழுது அந்த அகஸ்தியனின் உணர்வைப் பதிவாக்குகின்றோம்… பயிற்சியும் கொடுக்கின்றோம்.
இங்கே சொல்லும் நிலைகளில் நீங்கள் பெற்றதை
1.ஞானகுரு நமக்குச் சொன்ன வழியில் நாம் இதைப்
பெற்றோம்...
2.தீமைகளையும் நோய்களையும் நீக்கிடும் அந்த
வலிமை பெற்றோம்...
3.அருளைப் பெற்றோம் இருளை நீக்க முடியும்...
4.பிறவியில்லா நிலையை அடைய முடியும்...!
என்று உங்கள் ஊக்கமான உணர்வுகளை
5.உங்கள் நண்பர்களிடத்திலேயோ சொந்தபந்தங்களிடத்திலோ
அவர்களுக்குள்ளும் பதிவு செய்யுங்கள்.
6.அந்த நினைவு அவர்களுக்கும் வரட்டும்...
அவர்களும் அந்த உயர்ந்த நிலைகளை பெறட்டும்.
இதை எல்லாம் நீங்கள் பழக வேண்டும். ஏனென்றால்
இன்று உலகம் முழுவதுமே விஷத் தன்மைகள் பரவிக் கொண்டிருக்கிறது.
இந்த விஷத் தன்மைக்குள் மறைந்து தான் அந்தத்
துருவ நட்சத்திரத்தின் உணர்வும் இருக்கின்றது. அதைப் பிரித்து எடுப்பதற்குத்தான் உங்களுக்கு
இந்தப் பயிற்சியைக் கொடுக்கின்றேன் (ஞானகுரு).
எத்தனை விதமான உணர்வுகள் இருந்தாலும் ரோஜாப்பூ
தன் நறுமணத்தை எடுத்துக் கொள்கின்றது. எத்தனை விதமாக இருந்தாலும் கருகப்பிள்ளைச் செடி
தான் கவர்ந்து கொண்ட உணர்வின் சத்துக்கொப்ப அது காற்றிலிருந்து பிரித்து எடுத்துக்
கருகப்பிள்ளைச் செடியாக மாறுகிறது.
இப்படி ஒவ்வொரு தாவர இனங்களும் அது அது தன்
தன் சத்தைப் பெறுவது போல உங்களுக்குள் அந்தத் துருவ நட்சத்ததிரத்தின் அருள் உணர்வைப்
பெருக்கப்படும் பொழுது விஷத்தின் தன்மையைத் தடுக்கும் தன்மை உங்களுக்குள் வரும்.
நீங்கள் இதைப் பழகிக் கொண்டால் உங்கள் ஆன்மாவில்
இதைப் பெருக்கப்படும் பொழுது “ரிமோட்…!” உள்ளுக்குள் புகாதபடி செய்யும்.
ஈஸ்வரா...! என்று எண்ணினால் இதன் வழி உள்ளுக்குள்
போகாதபடி அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வு வலுக் கொண்டதாக நிற்கும். எங்கள் உடல்
முழுவதும் படர வேண்டும் என்று எண்ணினால் சுத்தப்படுத்திக் கொண்டேயிருக்கும். நமக்குள்
நல்ல உணர்வை நாம் பெருக்க முடியும்.
கொஞ்ச நாள் இந்தப் பழக்கத்திற்கு வந்துவிட்டால்
அந்த இயற்கையின் உண்மையின் உணர்வை நாம் பெறலாம். இந்த உடல் வாழ்க்கைக்குப் பின் பிறவியில்லா
நிலையும் அடையலாம்.
இந்த அருள் சக்தி பெறவேண்டும் என்று உங்களுக்கு
உபதேசித்த உணர்வை நீங்கள் பெறுவதற்குத்தான் உங்களுக்கு அனுபவரீதியில் கொண்டு வந்தது.
இதை ஒவ்வொரு நாளும் அதிகாலையில் கண்களை விழித்தவுடனே
(குளிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை) உங்கள் ஆன்மாவில் உள்ள நாற்றத்தை நீக்க அந்தத்
துருவ நட்சத்திரத்தின் உணர்வை உடலிலே சேர்த்தால் உங்கள் ஆன்மா தூய்மையாகின்றது. நல்ல
நறுமணங்களும் மகிழ்ச்சியும் வரும்.
இப்பொழுது அகஸ்தியன் பெற்ற அந்தப் “பச்சிலை
மூலிகைகள்” அவனில் விளைந்து அந்த அருள் சக்தி படர்ந்து கொண்டிருப்பதை நீங்கள் நுகர்கின்றீர்கள்.
அந்த அகஸ்தியன் பெற்ற பேரருளை நாங்கள் பெறவேண்டும் என்று ஏங்கி இருங்கள்.
அகஸ்தியன் பெற்ற விஷத்தை நீக்கிய அந்தப்
“பச்சிலைகளின் மணங்கள்” நாங்கள் பெறவேண்டும் அது எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும்
என்று ஏங்கிச் சிறிது நேரம் கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைத்து உயிருடன் ஒன்றி
ஈஸ்வரா... என்று ஏங்கித் தியானியுங்கள்.
அகஸ்தியன் பெற்ற அவன் அறிந்துணர்ந்த அந்தப்
“பச்சிலை மணங்கள்” நாங்கள் பெறவேண்டும் அது எங்கள் இரத்த நாளங்களிலே கலக்க வேண்டும்
என்று எண்ணி ஏங்கித் தியானியுங்கள்.
இப்பொழுது...
1.அந்தப் பச்சிலையின் மணங்கள் வரும்…
2.உங்களால் நுகர முடியும்... நுகர முடிகிறது
என்றால்
3.உங்கள் வாயிலே உமிழ் நீராக மாறும் பொழுது
உணர முடியும்…!
அகஸ்தியன் கண்டுணர்ந்த உணர்வுகள் இந்தக்
காற்று மண்டலத்தில் நமக்கு முன் படர்ந்துள்ளது. அவன் பெற்ற உண்மையின் உணர்வுகளை உங்களுக்குள்
பதிவு செய்துள்ளோம். அதனின் நினைவு கொண்டு இதனைப் பிரித்து எடுங்கள்.
ரேடியோ டி.வி அலைகள் எந்த ஸ்டேசனை வைக்கின்றோமோ…
அதைப் பிரித்து எடுக்கிறது. அதைப் போல் அகஸ்தியனின் உணர்வைப் பெறும் தகுதியை உங்களுக்குள்
ஊழ்வினை என்ற வித்தாக ஊன்றப்பட்டுள்ளது.
அந்த அகஸ்தியன் பெற்ற அருளை நாங்கள் பெறவேண்டும்
என்று ஏங்கிப் பெறுங்கள். அவன் நுகர்ந்த பச்சிலையின் மணங்களை நுகர்ந்து எப்படி இருளை அகற்றினானோ அந்த உணர்வை
நீங்கள் பெறுவதற்கு மீண்டும் உங்களுக்கு ஞாபகப்படுத்துகின்றேன்.
1.அகஸ்தியன் கண்டுணர்ந்த பல பச்சிலைகள் மூலிகைகளின்
மணங்கள்... அந்த அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும்
2.அகஸ்தியன் தனக்குள் இருளை அகற்றிடும் உணர்வை
விளைய வைத்து... அவனின்று வெளிப்பட்ட அந்த உணர்வுகளையும்
3,நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித்
தியானியுங்கள்.
4.இப்பொழுது அந்தப் பச்சிலையின் மணங்கள்
உங்களுக்குள் வரும். நுகர்ந்த அந்த மணங்கள் உங்களுக்குள் உமிழ் நீராக மாறும்… வாயிலே
அந்தச் சுவைகளை உணரலாம்.
எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்கே
இந்தப் பயிற்சியைக் கொடுக்கின்றேன் (ஞானகுரு). எல்லோரும் பெற வேண்டும் என்று உங்களுக்குள்
அந்த ஆசையைத் தூண்டுகின்றேன்.
நம் பூமியிலே எத்தனையோ வகையான மலர்கள் உண்டு.
மனிதர்களின் பிணியைப் போக்கக்கூடிய மலர்களும்… மகிழ்ந்து வாழச் செய்யும் மலர்களும்
உண்டு.
அதிலிருந்து வளர்ந்த உணர்வினை நறுமணங்களை
சூரியன் கவர்ந்து அலைகளாக மாற்றி வைத்துள்ளது. ஆகவே அந்த மலர்களின் மணங்களை நாங்கள்
பெற அருள்வாய் ஈஸ்வரா…! என்று புருவ மத்தியிலிருக்கும் ஈசனிடம் ஏங்கிக் கண்களை மூடித்
தியானியுங்கள்.
இப்பொழுது உங்களுக்கு...
1.மல்லிகை மணமோ
2.மனோரஞ்சித மணமோ
3.ரோஜாவின் மணமோ
4.தாமரையின் மணமோ கிடைக்கும்.
மலரைப் போல் மணம் பெறவேண்டும்… அந்த மகிழ்ந்து
வாழும் அருள் சக்தி பெறவேண்டும் ஈஸ்வரா..! என்று ஏங்கித் தியானியுங்கள். இப்பொழுது...
1.மருக்கொழுந்தின் வாசனையும் சந்தனத்தின்
நறுமணமும் கிடைக்கும்.
2.அதே சமயத்தில் நுகர்ந்த உணர்வுகள் உங்கள்
வாயிலே உமிழ் நீராகவும்
3.அந்தந்த மலரின் சத்தும் சுவையாகக் கிடைக்கும்.
இதை எல்லாம் இந்தக் காற்றிலிருப்பதை நாம்
ஈர்க்கும் தன்மை அது கிடைக்கின்றது. இதை எல்லாம் பழகிக் கொண்டால் உங்கள் வாழ்க்கையில்
1.அவ்வப்பொழுது நறுமணங்கள் பெறவேண்டும் என்று
ஏங்கித் தியானித்தால்
2.அந்த நேரத்தில் எல்லாம் உடனே கிடைக்கும்.
சிலருக்குச் சங்கடமும் சலிப்பும் இருந்தால்
அவர்களுக்கு இதைத் தடைப்படுத்தும். அதை எல்லாம் மாற்றி அமைக்க என்ன செய்ய வேண்டும்...?
அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை
நாங்கள் பெறவேண்டும் அகஸ்தியன் பெற்ற பேரருளை நாங்கள் பெறவேண்டும் அந்த மலர்களின் மணம்
பெற வேண்டும் மகிழ்ந்து வாழும் அருள் சக்தி பெறவேண்டும் என்று இதனின் உணர்வை அடிக்கடி
பெருக்கிப் பழக வேண்டும்.
1.காற்றில் இருப்பதை நாம் நுகர்ந்து
2.நம் உடலிலுள்ள இரத்த நாளங்களிலே கலந்து
பழக வேண்டும்.
கனி வகைகளில் வெளிப்பட்ட மணங்கள் சூரியனின்
காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றி வைத்துள்ளது. கனியின் மணங்கள் நாங்கள் பெற அருள்வாய்
ஈஸ்வரா…! என்று ஏங்கித் தியானியுங்கள்.
இப்பொழுது உங்களுக்குள்
1,மாம்பழங்களின் மணமும்
2.கொய்யாவின் மணமும்
3.பலாப்பழத்தின் மணமும் வந்து கொண்டே இருக்கும்.
இந்தக் காற்றிலே பலவிதமான கனிகளின் மணங்கள்
படர்ந்துள்ளது. அந்தக் கனிகளின் மணங்கள் பெறவேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.
இதன் மூலம் கனிகளின் மணங்களையும் நாம் நுகர முடியும்.
ஏனென்றால் இந்தக் கனி வர்க்கங்களையும் நாம்
புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் உணவாக உட்கொண்டு வளர்ந்து வந்தவர்கள் தான்
பல நிலைகளில். அதனால் வந்த அணுக்களும் நமக்குள் உண்டு.
அதனின் உணர்வின் தன்மை பெறப்படும் பொழுது
இப்பொழுது மனிதனாக ஆன பின் அந்த உணர்வை நுகர்ந்தறிய முடியும். இந்தப் பிறபஞ்சத்தின்
உண்மையையும் உணர முடியும்.. அகஸ்தியன் கண்ட அகண்ட அண்டத்தின் ஆற்றலையும் அறிய முடியும்.
மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எனக்கு இப்படித்தான்
காட்டினார். அதன் வழிகளிலேயே தான் உங்களுக்கும் பெறச் செய்கின்றோம்.