ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 4, 2019

ஞானிகள் விநாயகரை வடமேற்காக வைத்து வடகிழக்காக நம்மைப் பார்க்கச் செய்து வணங்கும்படி வைத்ததன் நோக்கம் என்ன...?


வீட்டில் பையன் குறும்புத்தனம் செய்து கொண்டேயிருக்கின்றான்.. சொன்னபடி கேட்கவில்லை... சரியாகப் படிக்க மாட்டேன் என்கிறான்...! என்றால் அவனை எண்ணும் பொழுதெல்லாம் வேதனை அதிகமாகின்றது.

அப்பொழுது சிந்தனை இழந்து கோபமாகி குடும்பத்திலும் கலவரங்கள் வருகின்றது. அப்புறம் யாரிட்ட சாபமோ...? யார் என்ன செய்தார்களோ...? என்று இப்படிப் பல எண்ணங்களைத் தோற்றுவிக்கிறது.
1.நம்மை அறியாமல் இயக்குகிறது என்று தெரிகிறது.
2.அதை உடனே போக்க வேண்டுமல்லவா…! அதற்கு வழி..?

ஏனென்றால் நாம் நுகர்ந்த உணர்வெல்லாம் வினையாகின்றது (வினை என்றால் வித்து – உடலுக்குள் அணுவாகின்றது). அது வினைக்கு நாயகனாக நம்மை இயக்கத் தொடங்குகிறது.

ஒரு பருப்பை நாம் வேக வைத்தால் முளைக்குமா…? முளைக்காது. அதைப் போல் நமக்குள் வந்த வினையை வேக வைக்க வேண்டும். அதற்காக வேண்டித்தான் விநாயகரை வட மேற்கிலே வைத்து வடகிழக்கிலே பார்த்து நம்மை வணங்கும்படிச் சொல்கிறார்கள்.

அந்தத் துருவ நட்சத்திரம் வடகிழக்கிலிருக்கின்றது. துருவ நட்சத்திரம் காலை நான்கு மணிக்கு உதயமாகி அதிலிருந்து அலைகள் வருகிறது.
1.அந்த நேரத்தில் நாம் முழித்து “ஈஸ்வரா...” என்று உயிரை எண்ணி
2.அப்பா அம்மாவை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெறவேண்டும் என்று
3.நம் உடலுக்குள் பதிவு செய்து பழகிக் கொள்ள வேண்டும்.
4.அப்படிப் பதிவு செய்து பழகுவதற்குத்தான் விநாயகரை வட மேற்கிலே வைத்துள்ளார்கள்.

ஆக வடகிழக்கில் துருவ நட்சத்திரம் உள்ளது. நாம் விநாயகரைப் பார்க்கும் நிலையில்
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை
2.தன்னிச்சையாகப் பெறும்படி செய்தனர் ஞானிகள்.

விநாயகருக்கு முன்னாடி என்ன வைத்துள்ளார்கள்..?

புல்லைத் தின்றோம்... தழைத் தாம்புகளைத் தின்றோம்.. கனிகளைத் தின்றோம்...! இன்று மனிதனாக ஆன பின் இன்று சுவை மிக்க உணவைப் படைத்துச் சாப்பிடும் இந்த மனித உடலைப் பெற்றோம் என்று கொழுக்கட்டையை வைத்துக் காண்பித்து
1.இந்தப் பிள்ளை யார்…? நீ சிந்தித்துப் பார்…! என்று
2.கேள்விக் குறியே போட்டுச் சொல்கிறார்கள்.

ஆனால் நாம் அந்தக் கேள்விக் குறியைப் போட்டுக் கணக்கு எழுதுவதும்.. வீட்டு வரவு செலவு கணக்குப் பார்ப்பதும்... நல்ல நேரம் பார்ப்பதும்.. அதற்காக வேண்டித் தான் அதைப் போட்டு ஆரம்பிக்கின்றோம். வேறு எதுவும் இல்லை.

ஆகவே மனிதனான பின் வேக வைத்துச் சாப்பிடுகிறோம். வேக வைத்தால் அது மீண்டும் முளைக்காது. இதே போல் பையன் அறியாத நிலைகளில் செயல்படுகிறான்... என்றால் அந்த வேதனை என்ற விஷம் நமக்குள் முளைக்காது தடுக்க வேண்டும்.

பையன் அறியாது செயல்படுத்தக் கூடிய அந்த வேதனையான உணர்வு நம் உயிரிலே மோதியவுடனே அது தீய வினையாக நமக்குள் சேர்கிறது. ஏன்...?
1.1.பல கோடிச் சரீரங்களில் முதலில் தீய வினைகளை நீக்கித் தான் மனிதனாக வந்தோம்.
2.இப்பொழுது இது தீய வினைகளாக நமக்குள் மாறுகின்றது
3.அப்படி மாறுவதைத் தடுக்க வேண்டுமல்லவா…!

இதைத்தான் இராமாயணத்தில் வாலி என்று காட்டுகின்றனர். அவனுடைய தவறான உணர்வுகளை நாம் சுவாசிக்கும் பொழுது “வாலி” வலிமையாகி விடுகின்றது. நம் நல்ல குணங்களைச் செயலற்றதாக்கி விடுகின்றது.

அவனுடைய தவறான உணர்வுகளைச் சுவாசிக்கும் பொழுது நம் உடலுக்குள் கணங்களுக்கு அதிபதியாகிவிடுகின்றது. அவன் எந்தத் தவறு செய்தானோ அதே தவறை நம்மைச் செய்யும்படித் தூண்டுகிறது. அவன் செய்த தவறையே நம்மைச் செய்யும்படித் தூண்டுகிறது.

1.அவன் தவறு செய்துவிட்டான் என்று நாம் நினைக்கின்றோம்.
2.அவன் ஒரு மடங்கு தவறு செய்தான் என்றால் அதற்குப் பதில்
3.பல மடங்கு அவனைக் கோபித்துத் திட்டுகிறோம்... அடிக்கப் போகிறோம்… தள்ளி விடுகிறோம்.

நம் பையன் என்று தெரிகிறது. அவனுக்குப் புத்திமதி சொல்ல முடிகிறதா…? அது அதிபதியாகி விடுகின்றது. அதன் வழி தான் நாம் நடக்கின்றோமே தவிர நம் நல்ல குணத்தைச் சரியான முறையில் வெளிப்படுத்த முடிகிறதா...? முடிவதில்லை.

பையன் குறும்புத்தனம் செய்தால் “காலையில் எடுத்துப் பதிவாக்கிப் பழகிய...” நல் வினையானை அந்தத் துருவ நட்சத்திரத்தை எண்ணி ஈஸ்வரா...! என்று உயிரைப் புருவ மத்தியில் எண்ணினோம் வினைக்கு நாயகனாகத் தீமையை நீக்கும் உணர்வுகள் நமக்குள் வளரும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைத்து விட்டால் உள்ளுக்குள் போவதில்லை.

“உயிரிலே பட்டால் தான் இந்த உணர்வுகள் வரும்...!” (இது முக்கியம்). கண்ணின் நினைவைத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெறவேண்டும் என்று ஏங்கி இழுத்துப் புருவ மத்திக்குக் கொண்டு வரவேண்டும்.

1.அந்த உணர்வைச் சேர்த்தவுடனே
2.எதை வலு கொண்டு கண்ணிலே பார்க்கிறோமோ…
3.உயிரிலே… அதை இழுக்க ஆரம்பித்துவிடுகிறது.
4.அப்படி இழுக்க ஆரம்பித்தவுடனே குறும்பு செய்தான் அல்லவா…
5.அந்த உணர்வை உள்ளுக்குள் போகவிடாமல் தடுக்கிறது.

இப்படித் தடுத்து… அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும் அது எங்கள் இரத்தங்களில் கலக்க வேண்டும் என்று முதலிலேயே அனுப்புகின்றோம்.

ஏனென்றால் அவன் செய்த வேதனை என்ற உணர்வுகள் சாப்பாட்டுடன் கலந்து அப்புறம் தான் இரத்தமாக மாறும். இரத்தத்தில் கலந்த பின் அணுவாக மாறும்.
1.அப்படிக் கலந்து வருவதற்கு முன்னாடி
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும்
3.எங்கள் இரத்தங்களில் கலக்க வேண்டும்... இரத்தங்களில் கலக்க வேண்டும்...! என்று செலுத்திவிடுகின்றோம்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்று கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்தி விடுகின்றோம்.

இப்படிச் செலுத்திப் பழக வேண்டும். இப்படிப் பழகிக் கொண்டால் பையனால் நமக்குள் வேதனையோ கோபமோ ஆத்திரமோ வெறுப்போ வராது. மாறாக அவனுக்குப் பக்குவமாக எடுத்துச் சொல்லும் நல்ல சிந்தனை வருகிறது.

அதன்படி அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி உனக்குக் கிடைக்கும்.. நீ தெளிவாக வருவாய்... உன் செயல்கள் எல்லோருக்கும் நல்லதாகும்...! என்ற நல்ல வாக்கினை பையனுக்குக் கொடுக்க வேண்டும்.

இந்த உணர்வுகள் அவனுக்குள் சிறுகச் சிறுகச் செல்ல அவனை அறியாது இயக்கிய குறும்புத்தனங்கள் மாறி நம் சொல்லைக் கேட்கும் தன்மைக்கு வருவான்.

செய்து பாருங்கள்...!