பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் நம் பூமியில்
தோன்றிய அகஸ்தியன் தான் இன்றும் துருவ நட்சத்திரமாக இருக்கின்றான்.
நம் பிரபஞ்சம் மற்ற நிலைகளை எடுத்தாலும்
உயிரணுவாகத் தோன்றிய பின் இந்த 27 நட்சத்திரத்தின் உணர்வுகளை உணவாக உட்கொண்டு அந்த
உணர்வின் ஒளியாக மாற்றும் தன்மை வருகின்றது. மற்றதைக் கருக்கி விடுகின்றது.
நட்சத்திரங்கள் தன் உணர்வின் அலைகள் வரப்படும்
போழுது மின் கதிர்களாக வரும் பொழுது எப்படி மாற்றுகின்றதோ இதைப் போல் தான் இந்த உயிரணுவின்
தோற்றங்கள் இப்படி உருவாகித் துருவ நட்சத்திரமாக இருக்கின்றது.
1.உயிரணுவாகத் தோன்றி மனிதனாக ஆன பின்
2.கணவனும் மனைவியும் இரு உயிரும் ஒன்றாக
ஆன பின் அந்தத் துருவ நட்சத்திரமாக மாறுகின்றது,
அதன் உணர்வை நுகர்ந்தவர்கள் அனைவரும் இந்த
உடலை விட்டுச் சென்ற பின் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் வாழ்கின்றார்கள்.
ஆறாவது அறிவு கொண்டவன் ஏழாவது ஒளி என்ற நிலையை அடைந்தால் சப்தரிஷியாகின்றது,
சிருஷ்டித்துக் கொண்ட உணர்வு அந்தச் சப்தரிஷி
மண்டலங்களாகத் துருவ நட்சத்திரத்துடன் இயங்குகிறது. இது எல்லாம் மகாபாரதத்தில் சுட்டிக்
காட்டப்பட்டுள்ளது.
1.காலத்தால் இதை எல்லாம் மறைத்து விட்டனர்.
2.இந்த உண்மைகளை எல்லாம் மறந்தே போய்விட்டோம்.
அரசர்கள் தனக்குத் தெரிந்த இரகசியம் மற்றவருக்குத்
தெரியக் கூடாது...! என்ற நிலையில் வேதங்களில் மாற்றப்பட்டு விட்டது.
இந்த உண்மையின் இயக்கங்களை மறைக்கப்பட்டு
மறைந்த உணர்வுகளை நாம் எடுத்து உண்மைகளை நாம் தேடிக் கொண்டேயிருக்கின்றோம்... இன்னும்
கிடைத்தபாடில்லை.
ஆனால் இப்பொழுது நீங்கள் தேடிக் கொள்ள வேண்டாம்..!
1.உங்கள் உடலுக்குள்ளேயே எல்லாச் சக்திகளும்
உண்டு...!
2.இதை நீங்கள் எப்படி மாற்ற வேண்டும்...?
என்று யாம் சொன்னாலும்
3.இப்பொழுது இதை ஏற்றுக் கொள்வாரில்லை.
4.ஏற்றுக் கொள்வதே மிகவும் கடினமாக இருக்கின்றது.
அந்த அகஸ்தியன் துருவனாகித் துருவ மகரிஷியாகித்
துருவ நட்சத்திரமான அதிலிருந்து வரக்கூடிய அந்தப் பேரருளை அந்த இயக்கச் சக்தியை இந்தத்
துருவ தியானத்தில் உங்களுக்குள் உருவாக்கச் செய்து அதன் வழியில் இயங்கிப் பேரொளியாக
மாற்றும் பருவத்தை ஏற்படுத்துகின்றோம்.
உயிர் எப்படி ஒளியானதோ உங்கள் உடலில் உள்ள
அணுக்கள் அனைத்தும் ஒளிமயமாக மாறி அதற்கப்புறம் எத்தகைய தீமையும் தனக்குள் வராதபடி
வேகா நிலை என்ற நிலையை அடைய முடியும்.
பேரருள் பேரொளியாக இயங்கிக் கொண்டிருக்கும்
அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் என்றுமே நாம் இணைந்து வாழக் கற்றுக்
கொள்வது தான் இந்தத் துருவ தியானப் பயிற்சியின் நிலைகள்.
ஆகவே இதை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்து
கொள்ளுங்கள்...!
இந்த உணர்வினை மீண்டும் மீண்டும் நினைவு
கொண்டு இந்த வாழ்க்கையில் வரும் இருளை அகற்றி நாம் இனிப் பிறவியில்லா நிலைகள் அடைய
வேண்டும் என்று இதை அடிப்படை ஆதாரமாக வைத்து உங்கள் வாழ்க்கையை வழி நடத்துங்கள்.
இந்த மனித வாழ்க்கையில் சலிப்போ சஞ்சலமோ
வெறுப்போ பகைமை உணர்வோ இதைப் போன்ற நிலைகளை எல்லாம் மாற்றியமைத்து அந்தத் துருவ நட்சத்திரத்தின்
பேரருள் பேரொளியை நாம் பெறவேண்டும் என்று அதைப் பற்றுடன் பற்றுங்கள்.
1.இந்த வாழ்க்கையில் வரும் தீமைகளைக் கேட்டறிந்தாலும்
2.அந்த அருள் உணர்வுகள் அதனுடன் கலக்கப்படும்
பொழுது அதன் வலிமையை இழக்கச் செய்து
3.நம் உடலில் நுகர்ந்த உணர்வுகளை ஒளியான
அணுத் தன்மையாக மாற்றும் தன்மை பெற வேண்டும் என்பதற்குத் தான்
4.அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப்
பெறுவதற்கு இந்தத் துருவ தியானத்தையே ஏற்படுத்துகின்றோம்.
ஏதோ துருவ தியானம் என்றால் நீங்கள் இலேசாக
நினைக்கின்றீர்கள். ஏனென்றால் இந்த உடல் நீடித்த நாள் இல்லை... இருக்கப் போவதில்லை...!
என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
அதற்குள் அருள் ஒளியை வளர்த்துக் கொள்ளுங்கள்...
மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணைந்து வாழும் தகுதியைப் பெறுங்கள். எமது அருளாசிகள்.