ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 29, 2019

உடலிலே சில நேரம் ஊசி குத்துவது போல் வலி வருகிறது... அது எதனால்…? என்று தெரிந்து கொள்ளுங்கள்


ஒருவன் நம்மைத் திட்டினால் அவனின் உணர்வுகள் நமக்குள் பதிவாகின்றது, பதிவான உணர்வை மீண்டும் மீண்டும் நினைவாக்கப்படும் பொழுது அந்தத் திட்டிய உணர்வுகள் வந்து
1.நம் உடலிலே அத்தகைய அணுக்கள் பெருக்கி விட்டால்
2.இதற்கும் நமக்குள் இருக்கும் நல்ல குணத்திற்கும் இரண்டுக்கும் போர் முறையே வரும்.
3.பளீர்…ர்ர் பளீர்…! என்று உடலிலே மின்னும்.

ஆனால் நமக்கு அது என்ன என்று தெரிவதில்லை. ஏனென்றால் நமக்குள் அணுக்கள் உருவாக்கப்படும் பொழுது எதிர் நிலையான உணர்வுகள் பாய்ச்சப்படும் பொழுது நம் தசைகளில் சில நேரங்களில் பளீர்… பளீர்… (ஊசி குத்துவது போல்) என்று மின்னும்.

இவை எல்லாம் நாம் நுகர்ந்த உணர்வின் தன்மையே அங்கே அப்படி வருகின்றது.

ஆகவே நம் உயிரை ஈசன் என்று உணர்ந்து கொண்ட பின் ஈசனால் உருவாக்கப்பட்ட இந்த உடலை நாம் எப்படிக் கோவிலாக மதிக்க வேண்டும்…? இந்த உடலான சிவனை எப்படி மதிக்க வேண்டும்…? என்ற நிலையில் நாம் சிந்தித்துச் செயல்படுதல் வேண்டும்.

ஏனென்றால் இந்த மனிதனின் நிலையில் உயர்ந்தவன் “அகஸ்தியன் துருவ நட்சத்திரமாக ஆனது…” அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் நுகர்ந்தோம் என்றால் நமக்குள் வரும் தீமையை நீக்கி நம் ஆன்மாவைத் தூய்மையாக்குகின்றது,
1.தூய்மையான உணர்வுகள் வளர வளர
2.அந்தத் துருவ நட்சத்திர்த்தின் பற்று நமக்குள் அதிகரிக்கின்றது.

அத்தகைய பற்று வளர்ந்தால் இந்த உடலை விட்டுச் சென்ற பின் எதனை வளர்த்துக் கொண்டோமோ இந்த உயிர் அங்கே அழைத்துச் சென்று அதிலிருந்து வரக்கூடிய உணர்வை எடுத்து ஆறாவது அறிவாக உள்ள நிலையை ஏழாவது ஒளியாகப் பெறச் செய்கின்றது,

இந்த மனித வாழ்க்கையில் நாம் அன்பு பண்பு பாசம் என்று வளர்த்தாலும் பிறருடைய துயர்களை நாம் கேட்டறிந்து தான் உதவி செய்கிறோம்.

அந்தத் துயரமான உணர்வுகளை நாம் நுகரப்படும் பொழுது துயரத்தை ஊட்டும் அணுத் தன்மையை நம் உயிர் உருவாக்கி விடுகின்றது.

மீண்டும் மீண்டும் அவர்களை நாம் எண்ணும் பொழுது அந்த அணுக்களின் தன்மை பெருகி
1.நம்மையறியாமல் நல்ல அணுக்கள் மடிந்து விடுகின்றது.
2.நம்மை அறியாமலே நம் நல்ல குணத்தையும் காக்க முடியாமல் போய்விடுகின்றது,
3.நம் உயிரான ஈசனையும் மறந்துவிடுகினறோம்
4.அதனால் மனித உடலில் வரும் தீமைகளைத் தூய்மைப்படுத்த மறந்து விடுகின்றோம்.
5.பற்றால் நமக்குள் வரக்கூடிய தீமைகளிலிருந்து நமக்கு விடுபடத் தெரியவில்லை.  

“விடுபட வேண்டும்” என்றால் என்ன செய்ய வேண்டும்..? என்பதற்குத் தான் இப்பொழுது ஒவ்வொரு நிலைகளிலும் தெரிந்து அந்த அருள் சக்திகளைப் பெறக்கூடிய உணர்வுகளை உங்களுக்குள் கொடுக்கின்றோம்.

இதைத்தான் “தொட்டுக் காட்டுவது…!” என்று சொல்வது.

நுகர்ந்த உணர்வுகள் ஒவ்வொன்றும் உங்களுக்குள் எப்படி இயங்குகிறது…? உங்களுக்குள் தீமைகள் விளைவது எப்படி…? என்று அறிந்து
1.அந்தத் தீமைகளிலிருந்து விலகும் அருள் உணர்வுகளை இணைக்கப்படும் பொழுது
2.இது இரண்டையும் கலந்து நீங்கள் நுகர்கின்றீர்கள்.
3.நுகர்ந்த உணர்வுகள் உங்களுக்குள் அணுவாகப் பெருகத் தொடங்கி விடுகின்றது,
4.இந்த அணுக்கள் பெருகி விட்டால் உங்கள் உடலுக்குள் தீமை என்ற உணர்வின் அணுக்களை இது வளராது தடுத்துவிடும்.