இருபத்தியேழு நட்சத்திரங்களும் அதனதன் துகள்களை
(கதிரியக்கங்களை) வெளிப்படுத்துகின்றது. பூமிக்கு வெளிப்புறத்தில் பிரபஞ்சத்தில் பரவினால்
அதனதன் உணர்வுகளுக்கொப்பக் கோள்கள் எடுத்துக் கொள்கிறது.
இதைக் கடந்து வரும் துகள்கள் நம் பூமியின்
துருவப் பகுதியின் எல்லைக்குள் வந்தால்
1.அதாவது நம் பூமிக்குள் மோதிவிட்டால் அது
மின்னலாக மாறுகின்றது.
2.கடும் விஷத் தன்மைகள் பரவுகின்றது.. மின்
கதிர்களாக மாறுகின்றது.
இப்படிப் பல மின்னல்கள் கடலிலே தாக்கினால்
மணலாக மாறுகின்றது. அதை யுரேனியமாக மாற்றுகின்றான் விஞ்ஞானி. மின்னல் மரத்தில் தாக்கினால்
மரங்கள் கருகிவிடுகிறது.
அதே சமயத்தில் மின்னல்கள் பூமிக்குள் ஊடுருவி
அதீத வேகத்தின் தன்மை கொண்டால் இதைப் போல் எதிர்நிலையான நட்சத்திரங்கள் பூமிக்குள்
ஒன்றுக்கொன்று எதிர்மறை ஆகிக் கொதிகலனாக மாறிப் பாறைகளை எல்லாம் உருக்குகின்றது.
உள்ளுக்குள் ஒன்றாகக் குழம்பாக மாற்றுகின்றது.
ஆவியாக மாற்றுகின்றது. பூமிக்குள் கடும் உலோகத் தன்மையாக மாற்றுகின்றது. பல நிலைகள்
மாறுகின்றது.
அந்த 27 நட்சத்திரங்களின் துகள்களும் நம்
பூமிக்குள் வரும் சமயம் மற்ற நட்சத்திரத்தின் துகள் அதாவது ஒன்று அதிகமாக நம் பூமிக்குள்
கவரப்பட்டு இதே மாதிரி மின்னலாக மாறித் தூசிகளாகப் படர்ந்தால் இதனுடைய அழுத்தம் அதிகமாகிறது.
அதாவது இந்தப் பக்கம் மின்னலாகிறது என்றால்
இந்தப் புவியில் அதிர்வுகள் ஆகி இதற்கு எதிர்நிலையான தூசிகள் படர்ந்திருக்கின்ற பக்கம்
மோதப்பட்டுப் பளீர்...ர்ர்...! என்று மின்னல் வருவதைப் பார்க்கலாம்.
1.மின்னல் இலேசாக இருந்தால் அதற்குத்தக்க
காற்று வேகமாக வரும்.
2.ஆனால் அதிகமான மோதலானால் இந்தக் காற்றழுத்தம்
அதிகமாகிச் சூறாவளியாக மாறி
3.மரத்தையும் வீட்டையும் எல்லாவற்றையும்
தூக்கிக் கொண்டு ஓடிப் போகும்.
மின்னல்கள் கடலிலே தாக்கினால் மணலாக மாறியதை
மனிதன் செயற்கையில் யுரேனியமாகப் பிரித்து அணு உலைகளுக்கும் மற்றதுக்கும் பயன்படுத்துகின்றான்.
அதிலிருந்த கசிவுகள் இங்கே துகள்களாக மாற்றப்படும்
பொழுது இதே போல் 27 நட்சத்திரங்களின் ஓட்டங்கள் அங்கே வந்தால் மோதி சுழிக்காற்றாகவும்
சூறாவளியாகவும் வரத் தொடங்கும்.
எங்கெங்கே இந்த அணுக் கதிரியக்கங்களின் கசிந்த
கசிவுகள் இருக்கின்றதோ அதனுடன் மோதப்படும் பொழுது பெரிய பெரிய கட்டிடங்களைக் கூடத்
தூக்கி அபேஷ் செய்து கொண்டு போகிறது. கார் பஸ் எல்லாவற்றையும் தூக்கிக் கொண்டு போகிறது.
ஒரு சமயம் என்னை (ஞானகுரு) டெல்லிப் பக்கமாகப்
போகச் சொன்னார் குருநாதர். ரோட்டிலே நடந்து வந்து கொண்டிருக்கின்றேன். ரோடு இந்தப்
பக்கம் அந்தப் பக்கம் ஒரு காம்பவுண்டுச் சுவர்.
வந்து கொண்டிருந்த ஒரு கார் என்ன செய்தது
என்றால்.. அந்தக் கட்டிடத்தில் நான்காவது மாடி மேல் கிர்..ர்ர்ர்...! என்று சுற்றிக்
கொண்டு போய் நிற்கிறது.
ஒரு பஸ் என்ன ஆனது...? நான் நகர்ந்து கொண்டேன்.
அந்தப் பஸ் என்னைத் தாண்டிக் கொண்டுபோய் காம்பவுண்டுச் சுவருக்கு அந்தப் பக்கம் போட்டுவிட்டது.
அங்கே விழுந்து விட்டது.
1.நான் இதை எல்லாம் வேடிக்கை பார்த்துக்
கொண்டு தான் இருக்கின்றேன்.
2.அந்தச் சுழிக் காற்று என் பக்கம் வரவில்லை.
ஆனால் எனக்குப் பயமும் வரவில்லை.
3.ஏனென்றால் குருநாதர் அங்கே போய் இதை எல்லாம்
பார்க்கச் சொல்லிச் சொன்னதால் பார்க்கிறேன்.
4.எப்படி.. எதனால்... இந்த மாதிரிச் சூழ்நிலைகள்
எல்லாம் உருவாகிறது...? என்று காட்டுகிறார்.
ஒரு ஆட்டைப் (ஆடு) பார்த்தோம் என்றால் அதைப்
பம்பரம் போல் சுற்ற வைக்கிறது. இதைப் பார்த்துக் கொண்டிருந்த மற்றவர்கள் எல்லோரும்
விழுந்தடித்துக் கொண்டு ஓடினார்கள்.
ஆகவே எதிர் நிலையாகும் பொழுது இயற்கையில்
இந்த மாதிரி சீற்றங்கள் ஆகிறது.
27 நட்சத்திரங்கள் தான் இந்தப் பிரபஞ்சத்திற்கே
மூலம். 27 நட்சத்திரங்களும் சூரியனாக மாறிவிட்டால் இந்தச் சூரியனுக்கு வேலை இல்லை.
27 நட்சத்திரங்களும் தனித் தனி பிரபஞ்சமாக
இப்பொழுது மாறிக் கொண்டுள்ளது.
1.ஆக... நம்முடைய பிரபஞ்சம் முழுமையாக அழியும்
தருணம் வந்துவிட்டது.
2.அதற்குள் ஏ.. மனிதா...! நீ அதற்குள் என்ன
செய்ய வேண்டும்...?
2.இந்த உடலுக்குப் பின் நீ என்னவாக ஆக வேண்டும்..?
என்பதைத் தெளிவாகக் கூறுகின்றார் குருநாதர்.
ஒவ்வொன்றையும் நேரடி அனுபவமாகக் காட்டித்
தான் குருநாதர் எனக்குச் சொன்னார். பார்க்கலாம்... அமெரிக்காவில்... சீனாவில்... சூறாவளி
என்று...! பத்திரிக்கைகளிலும் டி.வி.யிலும்.
எங்கெங்கெல்லாம் அணுக்கதிரியக்கங்களை உற்பத்தி
செய்கின்றார்களோ அந்த அணுக் கசிவுகளால் சூறாவளி... சுழிக்காற்று எல்லாம் உருவாகும்.
இயற்கையை மனிதன் கைப்பற்றினாலும் அதனின்
வீரியங்கள் மீண்டும் இப்படிதான் வரும்...!
இந்தப் பிரபஞ்சத்திலும் இதே போல் இராக்கெட்டுகளையும்
செயற்கைக் கோள்களையும் அனுப்பியதால் நம் பிரபஞ்சத்திலும் சூறாவளி உண்டு.
இந்த எதிர்நிலைகள் சூரியனின் ஈர்ப்புக்குள்
செல்லும் பொழுது அந்தப் பாதையிலும் சூறாவளிகள் உருவாகிறது. அதனால் பல மாற்றங்களும்
திசைகளும் மாறுகிறது.
ஆக மொத்தம் நாம் மனிதனாக வாழும் காலம் மிகவும்
குறுகியதே...!
1.இந்தக் காலத்திற்குள் கார்த்திகேயா என்று
தெரிந்து கொண்ட அறிவை வைத்து
2.அருள் ஞானிகளின் உணர்வை நமக்குள் சேர்த்துப்
பதிவாக்கி
3.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை ஆத்ம
சுத்தி மூலம் அவ்வப் பொழுது நமக்குள் வலிமையாக்கி
4.நம் ஆன்மாவிலும் உயிரிலும் பரப்பி விட்டால்
5.எந்த நிமிடம் இந்த உடலை விட்டுச் சென்றாலும்...
“நாம் பிறவி இல்லா நிலை அடைவது திண்ணம்...!”