ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 1, 2019

விஞ்ஞானி புதுப் புது தாவர இனங்களையும் உயிரினங்களையும் உருவாக்குகின்றான்... மெய் ஞானி ஒளியான அணுக்களை உனக்குள் நீ உருவாக்கு...! என்றான்


புதிதாகக் கட்டிய வீட்டில் குடி புகும் முன் யாகத்தை வளர்த்துத் தீயைப் போட்டு மந்திரத்தைச் சொல்லி காசை வாங்கிக் கொண்டு செய்கிறார்கள். யாகம் நடத்துபவரிடம் காணிக்கை கொடுத்து அவரிடம் பொட்டு வைத்துக் கொண்டு செல்வார்கள்.

புகையைப் போட்டு அங்கே சுற்றிக் கொண்டு இருந்தால் புது வீட்டில் உள்ள தோஷம் நீங்கிப் போகும்...! என்று அவர்கள் சொல்லி விட்டுப் போவார்கள். தோஷம் எப்படிப் போகும்…?

அந்தப் புகையைப் போடும் பொழுது உங்கள் மனது எப்படி இருக்கிறது...?
1.கண்ணிலே தண்ணீர் வருகிறது.
2.அப்பொழுது வெறுப்பான உணர்வைத் தான் செலுத்துகின்றீர்கள்.
3.நல்ல உணர்வைச் செலுத்துகின்றீர்களா...?

ஏனென்றால் நெருப்பில் போட்டால் இது எல்ல்லாம் நீங்கிப் போகும் என்று “சாங்கிய சாஸ்திரங்களைத்தான்...” கொண்டு வருகின்றார்களே தவிர உண்மையான சாஸ்திரம் இல்லை.

எல்லோரும் தியானத்தில் அமர்ந்து
1.இந்த வீட்டிற்குள் வரும் அனைவருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும்
2.வாழ்க்கையில் எல்லா நலமும் வளமும் பெறவேண்டும் என்று எண்ணி எடுத்து
3.அதைத் திரும்பத் திரும்பச் சொல்லி அந்த ஒலி அலைகளைப் பரப்பினால் எப்படி இருக்கும்...?

ஏனென்றால் நம் உயிர் ஒரு நெருப்பு இந்த உயிரிலே பட்ட உணர்ச்சிகள் சொல்லாக வெளிப்படுகிறது. நம் உடலுக்குள் விளைந்து அது மூச்சாக வெளிப்படுகிறது.

நாம் இப்படித் தியானித்து வீட்டிலுள்ளோர் அனைவரும் ஒன்றாகச் சேர்த்து இந்த மூச்சின் தன்மை வெளிப்படுத்தி அருள் உணர்வின் எண்ணங்களைப் பதியச் செய்யப்படும் பொழுது வீட்டிற்குள் வந்தாலே சந்தோஷமாக இருக்கும். அப்பொழுது தான் வீடு கட்டும் போது பதிவான தோஷங்கள் அகலும்.

ஆனால் வழக்கில்... புது வீட்டில் யாகம் செய்தார்களே... அதற்கு என்ன சீர் செய்தார்கள்...? எதைச் செய்தார்கள்..? என்ன சாங்கியம் செய்தார்கள்..? இதை எல்லாம் கேட்டுத் துருவுவார்கள்.
1.அவர்கள் யாகம் செய்வது புறத் தீ...!
2.ஆனால் நாம் செய்வது அகத்திற்குள் இருக்கக்கூடிய தீ..!
3.அக உணர்வைச் செலுத்தி இருளைப் போக்கக்கூடிய நிலைகளுக்கு நாம் சொல்கிறோம்.
4.நாம் செய்யக்கூடிய இந்தத் தியானம் உண்மையான யாகமாகிறது.
5.இந்தத் தீயை அவர்கள் உணரவில்லை... இந்தத் தியானமோ உணர்வின் இயக்கமாக இருக்கிறது.
6.அது விகார உணர்வைத் தோற்றுவிக்கிறது. உங்களுக்குக் கண் எரிச்சலும் இருமலும் அது தான் வரும்.

யாகம் வளர்க்கிற வீட்டிலே பாருங்கள். எத்தனை சங்கடப்படுகிறார்கள்...? வருகிறதா... இல்லையா..? புறத்தால் சாங்கியத்தைச் செய்து எந்தத் தோஷத்தையும் போக்க முடியாது. மனத் திருப்திக்குத் தான் அது உதவும்.

மனிதனுக்குள் அகத்தீக்குள் (உயிருக்குள்) அந்த வலிமையான ஞானிகளின் உணர்வைப் படைத்து அந்த உணர்வின் நினைவலைகளைப் பரப்பினால்
1.வீட்டில் உள்ள தரைகளிலும் சுவர்களிலும் பதிவாகிறது.
2.நமக்குள்ளும் ஆழமாகப் பதிவாகிறது.
3.வீட்டிற்கு வருபவர்களுக்கும் நல்ல உணர்வு கிடைக்கிறது.

ஏனென்றால் அதிலுள்ள மேக்னட் இதைக் கவர்ந்து வைத்துக் கொள்ளும்.

சில பேர் அவர்கள் வீட்டில் உள்ள சங்கடத்தையும் கஷ்டங்களையும் சொல்வார்கள். நீங்கள் உம்...” கொடுத்துக் கேட்டால் போதும். அவர்கள் வீட்டுக் கஷ்டத்தை எல்லாம் இங்கே ஓடி ஓடி வந்து சொல்வார்கள்.

அதை எங்கே உட்கார்ந்து கேட்கின்றீர்களோ அந்த வீட்டில் படரும்.
1.அடுத்தாற்போல் நீங்கள் சந்தோஷமாக இருந்த இடத்தில் என்ன ஆகும்...?
2.ஒரு இனம் தெரியாதபடி எங்கே உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோமோ
3.அங்கேயே இழுத்துக் கொண்டு வந்து உட்கார வைக்கும்.

அப்பொழுது இனம் புரியாமல் கவலைப்படுவீர்கள். ஏன் கவலைப்படுகிறோம்..? எதற்காக வேண்டிக் கவலைப்படுகின்றோம்…? என்பது தெரியாது.

ஏனென்றால் இந்த உணர்வின் இயக்கங்கள்..! நாம் தவறு செய்யவில்லை. நாம் அதைப் புரிந்து கொள்வதில்லை.

புரியாத நிலைகளில் சாமி காப்பாற்றும்... சாமியார் காப்பாற்றுவார்... ஜோதிடம் காப்பாற்றும்... மந்திரம் காப்பாற்றும்... வாஸ்து சாஸ்திரம் காப்பாற்றும்...! என்று சொல்லிக் கொண்டு இப்படித் திசை திருப்பி விட்டார்கள்.

ஆனால் நாம் எந்த உயர்ந்த எண்ணத்தை எண்ணுகின்றோமோ இந்த உணர்வு நம்மையும் காக்கும்.. நம்முடைய எண்ணம் மற்றவரையும் காக்கும் இந்த உடலில் நல்ல உணர்வுகளையும் ஊட்டும். என்றைக்கு இந்த நிலையை மனிதன் நம்புகிறானோ அது வரையிலும் இது வரும்.

விஞ்ஞானிகள் என்ன செய்கிறார்கள்...? புதுப் புது உயிரினங்களை உருவாக்குகிறார்கள். புதுப் புதுத் தாவர இனங்களை உருவாக்குகிறார்கள். நாம் பார்க்கின்றோம் அல்லவா..!

அன்றைக்கு மெய் ஞானி என்ன சொன்னான்...?
1.மனிதனின் வாழ்க்கையில் தீமைகள் வந்தால்
2.தீமையை நீக்கிய உணர்வுகளை உனக்குள் நுகர்ந்து நல்ல அணுக்களை உருவாக்கு...! என்று தெளிவாகச் சொன்னான்.

கோவிலுக்குப் போய் ஞானிகள் காட்டிய வழியில் அந்த உயர்ந்த எண்ணங்களை எடுத்தால் நமக்குள் நல்ல அணுக்களை உருவாக்குகின்றது. அதே மாதிரி...
1.நம் வீட்டிற்குள் இருக்கும் பொழுது அந்த நல்ல எண்ணங்களை எண்ணி உருவாக்கினால் எப்படி இருக்கும்..?
2.உருவாக்க முடியுமல்லவா...! உங்களை நீங்கள் நம்புங்கள்...!