ஓர் மனிதன் தன் சுவாசத்தினால் எடுக்கும்
எண்ணத்தின் அலையை ஒத்துத்தான் அவனது அறிவாற்றல்... குணமும்... உடல் உறுப்பும்... உருவமும்...
எல்லாமே இருந்திடும்.
1.அதை எல்லாம் எந்த ஒரு தனி மனிதனுக்கும்
2.ஆண்டவனாக வழி அமைத்துத் தருவதில்லை...!
(இது முக்கியம்)
எல்லாமும் ஒன்றாக... ஒன்றிலே எல்லாமும் உள்ள
பொழுது.. எதன் அடிப்படைச் சக்தியை எவ்வாத்ம எண்ணம் ஈர்த்து வாழ்கின்றதோ... அதன் தொடர்ச்சி
நிலைக்குகந்த அளவு... அறிவாற்றலும் வாழ்க்கை நிலையும் ஒவ்வொரு ஆத்மாவுக்கும் அமைகின்றது.
ஒருவர் அதிக சுறுசுறுப்புடனும் செயலாற்றும்
திறமையுடனும் நல் நிலையில் வாழும் பொழுது அவர் எடுத்துக் கொள்ளும் எண்ண சுவாசத்தின்
வளர்ச்சி அமிலத் தன்மையினால்தான் அந்த மனிதன் உயர்கின்றான். அவன் எடுக்கும் நிலைக்கொப்ப
ஆவிகளின் (பிற ஆன்மாக்கள்) தொடர்பும் ஏற்படுகின்றது.
மின் அலை எப்படி எந்தெந்த விகித நிலைக்கொப்ப
பாய்ச்சப்படுகின்றதோ அதன் நிலைக்கொப்ப ஒளியைத் தரக்கூடிய நிலையையும் எந்தெந்த இயந்திரங்களுக்கு
எந்தெந்த விகிதத்தில் மின் அலை பரப்பப்படுகின்றதோ அதன் சக்தி ஓட்டத்தைத் தான் அந்த
இயந்திரம் எடுத்து ஓடுகிறது.
அதைப் போல்...
1.எதன் அடிப்படையில்... எதன் விகித நிலைக்கொப்ப..
2.ஒவ்வொரு ஆத்மாவின் எண்ணச் சுவாசமும் உள்ளதோ..
3.அதன் சக்தி நிலையைத்தான் அவன் பெற முடியும்.
அதன் செயலில் தான் அவன் வாழ்க்கையும் அமைகிறதேயன்றி
பல கோவில் ஸ்தலங்களுக்குச் சென்று ஆண்டவனை வணங்கி வந்து “பூஜித்துச் சக்தி பெறுவதல்ல…!”
எண்ணத்தின் ஈர்ப்பை உயர்வாக்கி எடுக்கும்
சுவாச குண அமிலத்தினால் பலவாக உள்ள இந்தக் காற்றின் அமிலத்திலிருந்து “நமக்குகந்த அமிலத்தை
நாமாக எடுத்துக் கொள்ளலாம்...”
இதன் வளர்ச்சியில் நமது எண்ணமும் சுவாசமும்
இருக்குமானால் அதன் நிலையில் நாம் எடுக்கும் ஜெப முறையில் நம் எண்ண ஈர்ப்பை நமக்கு
மேல் சக்தி வாய்ந்த சித்தர்களின் பால் நம் எண்ணத்தைச் செலுத்திடல் வேண்டும்.
அப்படிச் சித்தர்கள் பால் தொடர்பு கொண்டு
எடுக்கும் சுவாச அலையின் தொடர்பினால்... இந்த உடலுடன் மனித உலக வாழ்க்கையில் வாழும்
நாம்
1.பிம்பப் பொருளைக் கண்டு பொருளாக வாழும்
இந்த வாழ்க்கையிலிருந்து பெற முடியாத “ஞானத்தை”
2.நம் ஈர்ப்பின் ஜெப எண்ணத்தை சித்தர்பால்
செலுத்தி
3.அவர்களின் தொடர்பலையின் சக்தி குண அமிலங்களை
நாம் பெறும்படி வழிப்படுத்திக் கொண்டால்
4.நம் ஞான வளர்ச்சியின் தொடரில் செல்லும்
வழி முறைப் பாதையை அறிந்து கொள்ளலாம்.
5.அந்தப் பாதையை அறிந்து விட்டால் நாம் செல்ல
வேண்டிய வழியில் எந்தத் தடங்கலும் இருக்காது.
பலவாக உள்ள உலக வாழ்க்கை எண்ணத்தில் நம்
எண்ணத்தை ஒன்றாக்கி... “ஓ...ம்” என்ற ஒலியுடன் சித்தர்கள் பால் நம் எண்ண ஈர்ப்புச்
சக்தியை நாம் தந்தோமானால் மெய் ஞானம் பெறும் வழி ஞானம் அறியலாம்.
ஞானத்தின் ஈர்ப்பில் கலந்தோமானால் பல உண்மையின்
பொருளை உலகளவுக்கு உணர்த்தலாம்.
ஞானிகளும் சப்தரிஷிகளும் நம் வளர்ச்சியை
ஏற்படுத்திக் கொண்டிருக்காவிட்டால் நம் பூமியில் மனித ஞானம் இன்று “ஞானமும் கண்டிருக்காது...
விஞ்ஞானமும் கண்டிருக்காது...!”
1.இன்றைய காலகட்டத்தில் நம் சித்தர்களின்
ஒளி சக்திகள்
2.இந்த உலகில் அதிகமாகச் செயல்பட்டுக் கொண்டுள்ளது.
ஆனால் மனித ஞானம் எல்லாமே ஞானத்தின் பால்
செல்லும் வழிமுறையற்றுப் பேராசையின் பிடி ஞானத்தில் தன் வலுவான விந்தை காணத் துடிக்கிறது.
மனிதனின் பேராசையின் விபரீத எண்ணச் சுழல்
காற்றுகள் பூமியின் சுழற்சியுடன் அதிகப்பட்டு... மோதி... உயிர்ப்பலிகள் அதிகமாகி...
1.ஆவியின் சூழ்ச்சியில்.. அல்லலுக்கந்த வாழ்க்கையில்
வாழ்கின்றான் மனிதன் என்பதை
2.அறியாமல் தான் இன்றைய மனிதர்கள் வாழ்கின்றனர்…!
தனதாக உள்ளது எது…? என்பதும் இம் மனித ஞானத்திற்குப்
புரியவில்லை. தனி மனிதன் யாரும் வாழவில்லை... “தனியாக” யாருமே எங்கேயுமே வாழ முடியாது.
காற்றையும் நீரையும் நிலத்தையும் தன்னுள்
உள்ள பல கோடி அணுக்களையும் வாழ வைத்து... வாழும் மனிதன்...
1.தானாக வாழ்கின்றானா..? அந்தத் “தனது” என்ற
பேராசைக்கார மனிதன்…?
2.ஒன்றின் துணையில்லாமல்...
3.ஒன்றுடன் ஒன்றில்லாமல் வாழவே முடியாத மனிதன்
4.”நான்...” என்ற நானாக... வாழ்கின்றானாம்..!
ஒவ்வொரு மனிதனும் இயற்கையின் ஆண்டவனின் ஸ்வரூபத்தை
எண்ணி வாழ வேண்டுமப்பா….!