ரோட்டிலே போகிறோம். நம் சந்தர்ப்பம் ஒரு
தீமையான உணர்வை உற்றுப் பார்க்க நேர்கிறது...! என்று வைத்துக் கொள்வோம். அப்பொழுது
என்ன செய்ய வேண்டும்..?
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும்
எடுத்துப் புருவ மத்தியில் நிறுத்தி எங்கள் உடலில் உள்ள இரத்த நாளங்களில் அந்தச் சக்தி
கலக்க வேண்டும் என்று உள்ளுக்குள் அந்தச் சக்தியைப் பாய்ச்ச வேண்டும்.
அப்படிப் பாய்ச்சிய இரத்தம் நம் உடல் முழுவதும்
படர்கின்றது. எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களுக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின்
பேரருளும் பேரொளியும் பெறவேண்டும் என்று முன்னாடியே அந்த வலுவைப் பாய்ச்சி விடுகிறோம்.
அதாவது அந்த முகப்பில் இருக்கக்கூடிய காந்தப்
புலன் எப்படி அந்தத் தீமை செய்பவரை உற்றுப் பார்த்து எண்ணினோமோ அவரால் வந்த உணர்வுகள்
ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவாகி இருக்கிறது.
இதன் துணை கொண்டு...
1.அநதத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை
எண்ணப்படும் பொழுது
2.அந்த இரத்தத்தின் வழி எல்லா அணுக்களும்
உள்ளுக்குள் அந்த அருள் உணர்வுகள் சாப்பாடாகக் கிடைக்கிறது.
அதாவது... இந்தக் காற்றிலிருந்து செடி கொடிகள்
அதனதன் சத்தை எப்படி எடுத்துக் கொள்கிறதோ இதே மாதிரி நம் உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களும்
அந்த இரத்தமாக மாறுவதிலிருந்து... இரத்தத்திலிருந்து தான் சாப்பாடு எடுத்துக் கொள்கிறது.
ஆகவே அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை
இதே மாதிரி எடுத்து உடலுக்குள் செலுத்த வேண்டும். இப்படி முன்னக்கூடியே (முதலில்) செலுத்திவிட
வேண்டும்.
முதலில் சிறிதளவு தான் நாம் பார்த்த அந்தத்
தீமை போயிருக்கும்.
ஆனால் யாம் இப்பொழுது சொன்ன முறைப்படி அந்தத்
துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்த பின் அந்த் இரத்தம் இந்த மாதிரி எல்லா இடங்களுக்கும்
போனவுடனே என்ன ஆகிறது...?
1.அந்தச் சிறிதளவு போன தீமையை இங்கேயே தடுத்து
விடுகிறோம்...!
2.சொல்வது அர்த்தமாகிறதல்லவா...!
அதே சமயத்தில் நம் கண்ணில் இருக்கக்கூடிய
கருவிழியில் இருக்கக்கூடிய அந்த கண்மணி... அந்த கண்ணின் மணியிலிருந்து தான் நாம் பார்க்கும்
படங்களை எல்லாம் தெரிந்து கொள்கிறோம்.
அதிலே அந்தக் கண் மணிகளிலே அந்தத் துருவ
நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் படர வேண்டும் என்று சுத்தப்படுத்த வேண்டும்.
ஏனென்றால்...
1.அந்தக் கருமணி வழிக்கூடித் தான்...
2.கண்ணுடன் சேர்ந்த நரம்பு மண்டலம் வழியாக
3.உடலில் உள்ள எல்லா இடங்களுக்கும் நாம்
பார்த்த... கேட்ட.. நுகர்ந்த... உணர்வுகளைப் பரவச் செய்கிறது.
அந்தக் கண்ணை இணைத்த நரம்பு மண்டலம் வழி உடல் முழுவதும்
அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் படர வேண்டும் என்று செல்கிறது.
நம் உடல் முழுவதும் அந்தத் துருவ நட்சத்திரத்தின்
உணர்வுகள் படர்கிறது. நல்ல உணர்வுகள் வலிமையாகின்றது. தீமைகள் சிறுத்துவிடுகிறது.
இந்த முறைப்படி எல்லோரும் இதை எடுத்து உடனுக்குடன்
தூய்மைப்படுத்தலாம்... இதில் ஒன்றும் சிரமமில்லை...!
திட்டியவனைத் திரும்ப எண்ணுகிறோம்... அடுத்த
கணம் அந்தது நமக்குள் வராமல் இப்படித் தடுத்துக் கொள்கிறோம். இதை நீங்கள் செய்து பழக
வேண்டும்.
எங்கள் உடலில் உள்ள நரம்பு மண்டலம் முழுவதும்
அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் படர வேண்டும்... நரம்பு மண்டலத்தை
உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும்
படர வேண்டும் என்று நினைவைக் கொண்டு வர வேண்டும்.
1.ஆக... ஒவ்வொரு நிமிடமும் நமக்குள் வினையாகிறது.
2.அந்தத் தீய வினைகள் நமக்குள் சேராதபடி
இப்படித் தடுக்க வேண்டும்.
3.தீமைகளைத் தடுத்து அதை நிறுத்திப் பழக
வேண்டும்.
அதற்குத்தான் இந்தப் பயிற்சி...!