ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 8, 2019

இந்த உடலே நமக்குச் சொந்தமில்லை… அதிலே சேர்க்கும் கௌரவம் நிற்குமா…?


விநாயகர் சதூர்த்தி என்று நாம் சொல்லப்படும் போது அன்றைக்கு நாம் இயற்கையில் விளையக் கூடியதை எல்லாம் வேக வைத்து “கொழுக்கட்டையாகச் செய்து” அதை ருசியாகச் சமைத்து நாம் உணவாக உட்கொள்கிறோம்.

வேக வைக்கப்படும் பொழுது அந்தத் தானியங்கள் எதுவும் மீண்டும் முளைப்பதில்லை. இதே மாதிரி
1.பிறருடைய வேதனையான உணர்வுகள் அது நமக்குள் விளைந்தாலும்
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நமக்குள் சேர்க்கப்படும் போது வேதனைகளை வேக வைத்துவிடுகிறது.
3.அவ்வாறு வேக வைத்தால் அடுத்து அந்த வேதனை என்ற உணர்வுகள் அது நமக்குள் வளராது… அது முளைக்காது…!
4.இப்படி ஒரு பழக்கத்திற்கு நாம் எல்லோரும் வரவேண்டும்.

இதை எல்லாம் தெரிந்து கொள்வதற்குத் தான் மணிக்கணக்கில் உபதேசிக்கிறேன் (ஞானகுரு).

1.நமது வாழ்கையில் நம்மைப் பிறிதொன்று எப்படி இயக்குகின்றது…?
2.நம் உயிரை ஈசனாக மதித்தாலும் அவனால் உருவாகப்பட்ட கோவில் என்று எண்ணினாலும்
3.நாம் நுகரும் உணர்வுகள் நம்மை அறியாமலேயே எப்படி நம்மைத் திசை திருப்புகின்றது..?
4.அதிலிருந்து நாம் எப்படி மீளவேண்டும்…? என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

இந்த உடலே நமக்குச் சொந்தம் இல்லை…!
1.இதில் எத்தனை கௌரவம் வந்தாலும் நிற்கப் போகின்றதா…?
2.நாம் தேடி வைத்த செல்வம் இருக்கப் போகின்றதா..? இல்லை…!

நம் உயிருடன் ஒன்றிடும் உணர்வுகள் அனைத்தையும் ஒளியாக மாற்றும் நிலையாக எந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் எடுக்கின்றோமோ “அந்த உணர்வே கடைசி வரையிலும் நிலையானது…!”

தீமைகளையும் பகைமைகளையும் வென்றிடும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்திகளை நாம் நிச்சயம் பெற்றுப் பழகுதல் வேண்டும்.