ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 10, 2019

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை தியானத்தின் மூலம் நுகர்வதால் நமக்குக் கிடைக்கும் பேறுகள்


துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா...! என்று புருவ மத்தியில் எண்ணி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் நாம் ஏங்கித் தியானித்து வருகின்றோம்.

கண்ணின் நினைவைப் பூமியின் வடதுருவத்தின் வழியாக விண்ணிலே செலுத்தி அந்தத் துருவ நட்சத்திரத்துடன் ஒன்றி அதிலிருந்து வெளிப்படும் பேரருள் பேரொளி உணர்வுகளை நாம் விண்ணிலிருந்து நுகர்வோம் என்றால் அதை உயிர் “ஓ…ம் நமச்சிவாய...!” என்று நம் உடலாக மாற்றுகின்றது.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் நம் உடலுக்குள் பெருகப் பெருக
1.நம் உடலில் அறியாது சேர்ந்த இருளை அது மாற்றுகின்றது
2.நம்மைத் தெளிந்த மனம் பெறச் செய்கின்றது
3.தெளிவான வாழ்க்கை வாழ முடிகின்றது
4.இல்லற வாழ்க்கையில் இருளை அகற்றும் திறன் பெறுகின்றோம்
5.இருளை அகற்றி மெய்ப் பொருள் காணும் அருள் சக்தி பெற முடிகின்றது.
6.இந்த வழியில் பேரின்ப நிலை பெறும் தகுதி பெற்று இந்த உடலில் என்றும் பேரின்ப நிலையை அடைய முடிகின்றது.
7.இந்தப் பிறவியிலேயே துருவத்தின் ஆற்றலை நாம் நுகர முடிகின்றது.
8.துருவ நட்சத்திரத்தின் பேரருளை நமக்குள் பெருக்க முடிகின்றது.
9.இந்த உடலில் அந்த உணர்வின் சத்தைப் பெறச் செய்தால் ஓ..ம் நமச்சிவாய… என்று ஒளியின் சரீரமாக மாறுகின்றது.
10.இப்புவியின் பற்றை அகற்றுகின்றது.
11.இப்புவியில் நஞ்சைப் பற்றற்றதாக மாற்றுகின்றது.
12.பேரருளைப் பெற்று “என்றும் பேரொளி...” என்ற நிலைகளை நாம் அடைய முடிகின்றது.
13.என்றும் ஏகாந்த நிலை அடைய முடிகின்றது.
14.ஏகாந்த வாழ்க்கை என்றும்... ஏகாதசி என்றும்... என்றும் பத்தாவது நிலையாக கல்கி என்று நிலை கொள்ள முடிகின்றது.
15.எந்தத் தீமையும் நம்மை அணுகாது
16.பேரொளி உணர்வுகள் என்றுமே நம்மை அணுகி வருகின்றது... ஒளியின் சரீரமாகப் பெற முடிகின்றது.
.
ஆகவே அந்த நிலையைப் பெற நம் குருநாதர் ஈஸ்வரபட்டர் காட்டிய அருள் வழியில் துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் பேரருளை நாமும் நுகர்வோம்.
1.நமக்குள் துருவ நட்சத்திரத்தின் பேரொளியை உருவாக்குவோம்.
2.நம்மை அறியாது வந்த இருளை அகற்ற நாம் தியானித்து அரும் பெரும் சக்திகளை நாம் சுவாசிப்போம்.
3.நம் உடலில் அறியாது வந்த இருளை அகற்றுவோம்.
4.என்றும் ஏகாந்த நிலை பெறும் சக்தியை நாம் சதா தியானிப்போம்.
5.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருள் வட்டத்தில் என்றுமே மகிழ்ந்து மகிழ்ந்து வாழ்வோம்.