எண்ண
ஓட்ட கதியையும் நீரோட்டச் சக்தியின் செயலையும் ஒன்றுபடுத்தி அதன் உட்பொருளை
வெளிக்காட்டி எண்ணத்தினுள் சிந்திக்கும் கருப்பொருள் தத்துவத்தினால் எண்ணத்தின்
வழிச் செயல் நீர் சக்தி பெறும் ஆரம்ப முறை ஞான வழியமைத்தவர் தான் “அகஸ்திய மாமகரிஷி...!”
1.வானத்தில்
கன பரிமாணம் கொண்ட நீர் சக்தி... இடி மின்னல் ஒரு புறமும்
2.மறுபுறம்
ஆகாயத்தில் சரி பாதி இருக்கும் கோள்களையும் விண்மீன்களையும் காட்டி
3.எண்ண
ஓட்ட கதியின் தத்துவத்தை எண்ணி எடுக்க வைத்த அந்த அகஸ்திய மாமகரிஷி தான்
4.நீர்
சக்தியை (ஜீவன்) வென்றதாகவும்... பின் அதனுள்ளே தான் ஒன்றியதாகவும்
கூறப்பட்டுள்ளது.
5.அகஸ்தியன்
ஜீவ சக்தியைப் பெற்றது மிக மிக முக்கியமானது...!
அதாவது
சரீரமாகிய திடமும் அந்தத் திடத்திற்குள் உள்ள நீர்ச் சக்தியும் நீரினுள் இருந்த
பொழுது நீரோடு நீர் சேர்ந்து ஒருநிலைப்படுத்திட
1.தன்
திடச் சரீர நிலை அணுக்கள் அனைத்தையுமே
2.நீரோட்ட
நீர் சக்தியின் லேசான தன்மை போல் நீரோட்டச் சக்தியின் கதியையே தன்னுள் அடக்கி
3.நீர்
மேல் உலவ... நீர் மேல் அமரும் செயலில்... ஓர் சூட்சமம் கூறப்பட்டது.
எண்ண
ஓட்டச் செயல் சக்தியாகும் சூட்சமத்தை... அதனுள் ஏற்படுத்தப்படும் பதிவு... அல்லது
ஈர்க்கப்படும் செயல் அனைத்தையும்...
1.ஒருமித்த
கருத்தின் விளைச்சல்களாக (மகசூலாக) உருவாக்கிடும் நிலையாக
2.யாம்
சொல்லும் தியானத்தின் வழித் தொடர் கொண்டு
3.அந்த
எண்ண ஓட்டத்தின் கதியையே நற்கதியாக ஆக்கும்...
4.உயரிய
ஞானம் பெறும் முறைகளாக வழியமைத்துக் கொள்ள வேண்டும்.
காற்றின்
நீரே இளநீராகி... அதனுள் உள்ள விஷ அமில சக்தியே தேங்காய்க்குள் எண்ணையாக இருக்கும்
1.“மறைந்துள்ள
அந்தத் தொடர்பை அறிந்து...”
2.அதையும்
பயனுற வழிப்படுத்திக் கொள்ளும் செயலே ஞானம் என்பதாகும்..!