நம் வீட்டிற்குள் எதிர்பாராதவிதமாக ஒரு பாம்பு
வந்துவிடுகின்றது என்று வைத்துக் கொள்வோம்.
1.அந்தச் சந்தர்ப்பத்தில் பாம்பை அடித்தால்
2.பாம்பின் உயிர் அடித்தவர் உடலுக்குள் வந்து
மனிதனாகப் பிறக்கும் சந்தர்ப்பம் வருகின்றது,
அதே சமயத்தில் பாம்பு மனிதனைத் தீண்டிவிட்டால்
அந்தச் சந்தர்ப்பம் விஷம் உடல் முழுவதற்கும் பரவி விடுகின்றது. எத்தனையோ கோடி உடல்களைக்
கடந்து இன்று மனிதனாக வந்த நிலையில் பாம்பின் விஷத் தன்மை மனிதனுக்குள் கலந்து விடுகின்றது.
உடல் முழுவதற்கும் விஷம் படர்ந்த பின் இந்தச்
சந்தர்ப்பம் மனித நினைவே இழந்து பாம்பின் நினைவே ஆக்கிரமிக்கின்றது.
1.மனித உடலை உருவாக்கிய இந்த உயிரில் விஷம்
கலந்ததனால் நினைவு இழந்து
2.பாம்பின் ஈர்ப்புக்குள் சென்று மனிதன்
பாம்பாகப் பிறக்கும் சந்தர்ப்பமாக வருகின்றது.
இதே போல மனிதனின் வாழ்க்கையில் கடும் வேதனையால்
ஒருவருக்குக் கேன்சர் நோய் வந்துவிடுகின்றது. மற்றவர்கள் அவருடன் நெருங்கிப் பழகப்படும்
பொழுது அந்தச் சந்தர்ப்பம் வேதனை என்ற விஷங்கள் அது தொடர்ந்து இந்த உடலில் படரப்படும்
பொழுது நாளடைவில் இந்தக் குடும்பத்திலும் பரம்பரை என்ற நிலையில் கேன்சர் நோய் வளரத்
தொடங்குகின்றது.
ஒரு இரத்தக் கொதிப்பு நோய் உள்ளவரின் உணர்வுகளை
அதிகமாக உற்றுப் பார்த்துக் கவர நேர்ந்தால் அந்தப் பரம்பரை என்ற இரத்தக் கொதிப்பு வந்து
விடுகின்றது.
ஆஸ்த்மா போன்ற நோய்கள் வந்தால் அது தொடர்ந்து
வரப்படும் பொழுது பரம்பரை என்ற நிலைகள் கொண்டு ஆஸ்த்மா நோய் வந்துவிடுகின்றது.
அதே சமயத்தில் ஒரு குடும்பத்தில் சர்க்கரைச்
சத்து அதிகமானால் இது பரம்பரையாக வந்து அந்தக் குடும்பத்தில் சர்க்கரைச் சத்துகள் தொடர்ந்து
விடுகின்றது.
1.இதுகள் எல்லாம் தொடர் வரிசைகளில்...
2.இப்படி வருவது எல்லாமே சந்தர்ப்பம் தான்.
காரணம்... நமது சந்தர்ப்பம் சொந்த பந்தம்...
நண்பர்கள்.. மற்ற பந்துக்கள் என்ற நிலையில் பழகப்படும் பொழுது பாசத்தால் அவர்கள் சிரமப்படும்
உணர்வை நாம் நுகர்கின்றோம்... உதவியும் செய்கின்றோம். ஆனால் இத்தகைய உணர்வுகள் நமக்குள்
வந்துவிடுகின்றது.
பந்துக்களானாலும் சரி... நண்பர்களானாலும்
சரி.. சந்தர்ப்பம் சந்திக்கும் பொழுது இதைப் போன்ற உணர்வுகளை நமக்குள் நுகர்ந்து விட்டால்
நம்மை அறியாமலேயே பல நோய்களுக்கும் அது காரணமாகின்றது.
ஆனால் உடலை விட்டுப் பிரிந்து சென்ற நம்முடைய
முன்னோர்கள் மூதாதையர்களின் உயிரான்மாக்களை நம் குருநாதர் காட்டிய தியான வழியின் முறைப்படி
விண்ணிலிருக்கும் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்தால் அவர்கள் எல்லோரும் ஒளி உடல்
பெறுகின்றார்கள்.
எப்படித் தான் இருந்தாலும் பழக்க தோஷத்தில்
நாம் எல்லோருடனும் நாம் பழகித் தான் ஆகின்றோம். உடலை விட்டுப் பிரிந்தவர்களின் குடும்பத்தைச்
சார்ந்தோரும் அவருடன் பழகியிருப்பவர்களும் முறைப்படி தியானித்து அந்த அருள் உணர்வுகளை
எண்ணி எடுக்கும் பொழுது தீமைகள் வராதபடி பாதுகாத்துக் கொள்ள முடியும்.
1.அதே சமயத்தில் நம் முன்னோர்கள் சப்தரிஷி
மண்டலத்தில் ஒளியின் உடலாக இருப்பதனால்
2.அங்கிருந்து வரும் உணர்வை நமக்குள்ளும்
பெருக்கி உயிருடன் ஒன்றிடும் நிலையாக
3.நம் உணர்வுகள் அனைத்தையும் ஒளியாக மாறும்
திறனாக மாற்றும் இதுவும் ஒரு சந்தர்ப்பம் தான்.
4.இதன் வழி குடும்பத்தில் அனைவரும் சென்றால்
அந்த அகஸ்தியனைப் போன்று
5.என்றுமே ஏகாந்தமாக ஒளியாக வாழ முடியும்.