மனிதனின் ஜீவ பிம்ப சரீரத்தில் உள்ள உட்கருவிகள்
செயல்படும் விதங்களை உண்ர்ந்து கொண்டால் பல கிளையாக மூச்சலைகளின் செயல்பாடுகளை அறிந்து
கொள்ள முடியும். நல் ஆக்கத்தின் செயலுக்கு அனைத்துச் சக்திகளையும் அளிப்போம்.
சூரிய கலை என்ற சிவ நாடியும் சந்திரகலை என்ற
சக்தி நாடியும் சரீரத்தில் செயல்படுகிறது. இந்த இரு நாடிகளுக்கும் பொதுவான அக்கினி
நாடி சரீரத்தின் மையப் பகுதியில் நேர்கோடாகச் செயல் கொள்கிறது.
அக்கினி நாடியானது மூலாதாரத்தில் மூல அக்கினியுடன்
ஆங்குள்ள நான்கு தலை போல அமையப் பெற்ற நாடியுடன் இணைவதற்கு முன் கண்ட நாடி மார்பு நாடி
நாபி நாடி குய்ய நாடி ஆகியவைகளுடன் இணைந்தே செயல்படுகிறது.
மூலாதாரத்தில் செயல்படும் இந்த மறைமுக நாடியை
அனுசரித்தே சிவ சக்தி நாடிகள் (சூரிய சந்திர நாடிகள்) செயல்படுகின்றன.
1.இந்த மூன்று நாடிகளும் சந்திக்கும் “நெற்றிப்
பொட்டே...”
2.”திரிவேணி சங்கமம்...!” என்று சூட்சமப்
பொருளாகக் கூறப்படுகின்றது.
சிரசின் உச்சிப் பகுதியில் ஆயிரம் தலையுள்ள
நாடிகள் வட்ட வடிவில் கிளைத்து அதனுள் மறைமுகமாக எட்டு நாடிகள் செயல்படுவதைத்தான்
“ஆயிரத்தி எட்டு இதழ் கொண்ட தாமரை...” என்று கூறுவதின் மறை பொருளை உணர்ந்து கொள்ளலாம்.
சிற் சில காலகட்டங்களில் சிரசினுள் சிறு
மூளைப் பகுதி இருக்கும் இடத்திற்குக் கீழ் பிடரி என்று சொல்லும் இடத்தில் வெப்பம் அலைகளாக
வெளிப்படுவதை உணரலாம்.
இந்த வெப்ப அமில குணங்களை மீண்டும் சுவாசத்தில்
ஈர்த்துக் கொள்ளும் செயலும் உண்டு.
எட்டு சூட்சம நாடிகள் சிறு மூளைப் பகுதியிலிருந்து
வெளித் தள்ளும் வெப்பமில குணங்களை நல் நிலைப்படுத்திடவே வாசனை மலர்களைச் சூடிக் கொள்ள
அன்று வழி காட்டினார்கள் ஞானிகள்.
ஒவ்வொரு மலரிலும் அதற்கென்று வாசனை இருந்தாலும்
இயற்கை அளித்திட்ட அந்த நறுமணங்களில் ஒன்றுக்கொன்று எதிர் மோதல் செயல்பாடுகள் உண்டு.
1.சிறு மூளை வெளித்தள்ளும் வெப்ப அமில குணங்களை
நல் நிலைப்படுத்திக் கொள்ள
2.அன்றைய காலங்களில் நறுமண மலர்களைச் சூடிக்
கொள்ளும் வழக்கம் பெண்களுக்கு மட்டுமல்லாது ஆண்களுக்கும் இருந்தது. ஆனால் இன்றைய கால
நடைமுறைகளுக்கு அது பொருத்தமற்றதாக மாறு கொண்டு விட்டது.
1.நாம் காட்டும் தியான வழித் தொடரில்
2.எண்ணத்தின் உந்தும் செயல் கொண்டு
3.சிரசின் பின்புறம் சிறுமூளைப் பகுதியில்
ஓர் காற்று மண்டலத்தையே ஏற்படுத்தி
4.ஆத்ம சக்தியை வலுக் கூட்டிக் கொள்ளும்
சூட்சமும் உள்ளது.
சரீரத்தில் உள்ள உள் கருவிகளுக்கு ஜீவ ஆக்கமளித்திடும்
காற்று நாடிகளை முழுமைப்படுத்தி அளித்திடவே இதை எல்லாம் சிறுகச் சிறுக உணர்த்துகின்றேன்.