ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 2, 2019

குடும்பப் பாரம்பரியத்தில் நம் சந்ததிகளைக் காக்கும் ஒரே வழி


நம் குடும்பத்தில் யாராவது உடலை விட்டுப் பிரிந்து விட்டால் குடும்பத்தைச் சார்ந்தோர் அனைவரும் சேர்ந்து அவர் உயிராத்மாவை அங்கே சப்தரிஷி மண்டலத்துடன் இணைத்து ஒளியின் சரீரம் பெறச் செய்ய வேண்டும்.

ஆனால் தனித்து அவரை மட்டும் எண்ணக் கூடாது....!

1.அந்தச் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும்
2.அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
3.எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரது உடல்களிலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் சப்தரிஷி மண்டலத்தின் பேரருளும் பேரொளியும் படர்தல் வேண்டும் என்ற
4.இந்த வலுவைக் கூட்டிக் கொண்டு உடலை விட்டுப் பிரிந்தவர்களைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைக்க வேண்டும்.

இவ்வாறு சப்தரிஷி மண்டலத்தை எண்ணும் பொழுது அவர்கள் ரிஷியின் தன்மை அடைந்து விடுகின்றனர். சப்தரிஷிகளுடன் சப்தரிஷியாகி விடுகின்றார்கள். மனித உணர்வின் ஆசைகள் கொண்டு அங்கே செலுத்திடல் வேண்டாம்.

“அவர்கள் அங்கே ஒளியின் சரீரமாக இருக்கும் நிலையில்...” ஒவ்வொரு நாளும் அவர் அருள் நமக்குள் வளர வேண்டும். எங்களை அறியாது சேர்ந்த இருள்கள் நீங்க வேண்டும் என்று இதனைக் கவர்ந்து இந்த வாழ்க்கையில் இருளை அகற்றும் தன்மையைப் நாம் பெற்றுப் பழகுதல் வேண்டும்.

குடும்பத்தைச் சார்ந்தோர் அடிக்கடி அவருடைய நினைவுகள் ஒளியின் சரீரம் பெற வேண்டும் என்று அவருடைய நினைவு வரும் பொழுதெல்லாம் இவ்வாறு செய்ய வேண்டும்.

ஏனென்றால் அவர் உணர்வு உங்களுக்குள் உண்டு. இந்த உணர்வினை மாற்றியமைத்தல் வேண்டும்.

உடலை விட்டுப் பிரிந்த ஆன்மாக்கள் ஏகாந்த நிலைகள் கொண்டு பிறவியில்லா நிலை அடைய வேண்டும். அவர்கள் என்றுமே பேரின்பப் பெரு வாழ்வாக வாழ்தல் வேண்டும் என்ற “இந்த உணர்வினைத்தான் கூட்டுதல் வேண்டும்...!”

இந்த உணர்வுகள் நமக்குள் வளர வளர அவர்களுடைய உணர்வைப் பெற்ற அணுக்கள் நம் உடலிலே இருந்தால் அதைச் சிறுத்துப் பேரின்பம் என்ற உணர்வின் அணுக்களாக நமக்குள் மாற்றிக் கொள்ள முடியும்.

1.அதே சமயத்தில் குடும்பப் பாரம்பரியத்தில் அணு செல்கள் சென்று
2.உடலை விட்டுப் பிரிந்தவர்கள் உடலில் வந்த நோய்களை
3.மற்ற தனது சந்ததிகளுக்கு உருவாக்காதபடி மாற்றியமைக்கவும் உதவும்.

ஏனென்றால் அவருடைய இன விருத்தியில் வந்த அந்தக் கருக்களில் இத்தகையை நிலைகள் கலந்து விட்டால் பின் வரும் நிலைகளில் அது தொடர்ந்து விடுகின்றது.

அதை எல்லாம் மாற்றியமைக்க வேண்டும்...! எல்லோரும் அருள் வழி வாழ்ந்து அழியாத பேரின்பப் பெரு வாழ்வு வாழ வேண்டும் என்பதற்குத்தான் இதைச் சொல்கிறோம்.